Wednesday, 24 August 2011

முக்கிய அறிவிப்பு : ஃபித்ரா வசூல்


தமிழகத்திலுள்ள சில கிளை சகோதரர்கள் மாநிலத்தின் அனுமதியின்றி தங்களது கிளையின் அக்கவுண்ட் நம்பரை போட்டு இந்த அக்கவுண்டிற்கு தங்களது ஃபித்ரா தொகைகளை அனுப்பி வைக்கும்படியும், தங்களது கிளைகளுக்கென வெளிநாடுகளில் பொறுப்பளர்களை நியமித்துள்ளதாகவும், அவர்களிடத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களது கிளைக்கு ஃபித்ரா தொகைகளை வழங்கும்படி மெயில்களை அனுப்பி வருவது நமது கவனத்திற்கு வந்துள்ளது.
இத்தகைய செயல்பாடுகள் நமது அமைப்பின் கட்டுக் கோப்பை குலைக்கும் நடைமுறையாகும். எனவே இது போன்று அமைப்பின் கட்டுக் கோப்பை குலைக்கும்விதமகா யாரும் இனிமேல் செயல்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
ஃபித்ரா தொகைகள் அந்தந்த மண்டலத்தின் வாயிலாக திரட்டப்பட்டு மாநிலத்தலைமையின் வாயிலாக மட்டுமே விநியோகம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-மாநில நிர்வாகம்

No comments:

Post a Comment