Friday 21 September 2012

கார்ட்டூனுக்கு அனுமதி , ஆர்ப்பாட்டத்திற்கு தடை , ஃபிரான்ஸ் நாட்டு அரசின் அராஜகம்!

செய்திகள்
ஃபிரான்ஸ் நாட்டின் உள்துறை மந்திரி
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் விதமாக ஃபிரான்ஸ் நாட்டு பத்திரிக்கை ஒன்று கடந்த புதன் கிழமை அன்று முஹம்மது என குறிப்பிட்டு நிர்வாண கேலிசித்திரம் ஒன்றை வெளியிட்டது. இது ஃபிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை கண்டித்து போராட்டம் நடத்த ஃபிரான்ஸ் நாட்டு அரசு முஸ்லிம்களுக்கு தடை விதித்துள்ளது.
பேச்சு சுதந்திரம் , கருத்து சுதந்திரம் , நபிகள் நாகத்தின் கார்ட்டூனை தடை செய்ய முடியாது அதற்கு அனுமதி உள்ளது என சவடால் விட்ட ஃபிரான்ஸ் நாட்டு பிரதமர் இதை எதிர்த்து முஸ்லிம்கள் கருத்து தெரிவிக்க தடை விதித்துள்ளார். என்ன கொடுமை இது? ஆபாசத்தை அவிழ்த்து விட்டு நபிகள் நாயகத்தை அவமதிப்பதற்கு அனுமதி, அதை கண்டிப்பதற்கு தடை ? அமெரிக்காவை மிஞ்சும் அளவிற்கு ஃபிரான்ஸ் நாட்டு அரசு கடும் முஸ்லிம்கள் வீரோத போக்கை கடைபிடிக்கின்றது.
ஃபிரான்ஸ் நாட்டின் உள்துறை மந்திரி Manuel Valls இன்று கூறுகையில் , நபிகள் நாயக்தின் நிர்வாண கார்ட்டூனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு திட்வட்டமாக தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் தெரிவித்துள்ளார்.
அப்படி எனில் முஸ்லிம்களுக்கு ஃபிரான்ஸ் நாட்டில் பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் கிடையாதா ? இவகைள் எல்லாம் ஒரு சாராருக்கு மட்டும் தானா ?
நன்றி Tntj.net

”படத்தை நீக்குமாறு Google க்கு உத்தரவிட முடியாது” , நடிகையின் கோரிக்கையை நிராகரித்த லாஸ் ஏன்ஜல்ஸ் நீதிபதி!


பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் நடிகை Lee Garcia
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் படத்தயாரிப்பாளன் மீதும் google மீதும் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நேற்று வழக்கை விசாரித்த Superior Court நீதிபதி Luis Lavin என்பவர்,  வழக்கு தொடர்ந்தவரின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், வீடியோவை நீக்குமாறு Google க்கு உத்தரவிடமுடியாது எனவும் கூறியுள்ளார்
இதற்கு நீதிபதி காரணம் கூறுகையில் ” படத்தயாரிப்பாளருடன் தான் செய்து கொண்ட எந்த ஒப்பந்த நகலையும் அவரால் காட்டமுடியவில்லை , மேலும் இந்த படத்திற்கு பின்னால் உள்ள அந்த நபருக்கு நடிகையின்  புகார் காபி கொடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.
அந்த படத்தில் அவர் நடித்துள்ளார் என்பதற்கு படத்தின் 14 நிமிட வீடியோவே போதுமான ஆதாரம்.
அதில் Lee Garcia நடிகை நடத்துள்ளார் என்பது படத்தை பார்த்த உலகிற்கே தெரியும் ஆனால் இந்த நீதிபதி வேண்டுமென்றே டூபாகூர் காணரத்தை கூறி வழக்கை நிராகரித்துள்ளார்.
மேலும் படத்தை தயாரித்த Nakoula Basseley Nakoula குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான் பிறகு எப்படி அவன் கிட்ட கொண்டு போய் புகார் நகல கொடுக்க முடியும்?
யார் மீது புகார் கொடுக்கப்படுகின்றதோ அவன் புகாரை பெராவிட்டால் அந்த வழக்கை நிராகரிப்பது தான் அமெரிக்க சட்டமா ? குற்றவாளிகளுக்கு ஏற்ற சட்டம்!
ஏற்க தகாத சாக்கு போக்குகளை சொல்ல தொரடப்பட்ட ஒரு வழக்கையும் அமெரிக்க நீதிமன்றம் நிராகத்துள்ளது முஸ்லிம்களிடையே பேரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நடிகை இன்னும் மூன்று வாரத்திற்குள் எல்லாத விதமான ஆதாரங்களுடன் மீண்டும் கோர்ட்டை அனுகப் போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Tuesday 18 September 2012

அமெரிக்க திரைப்பட வீடியோ: பொய்க் காரணத்தை கூறும் Google Updated


உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள அமெரிக்க திரைப்படத்தின் வீடியோவை Google ன் நிறுவனமான Youtube நீக்க மறுத்து வருகின்றது. ஒபாமா கெஞ்சியும் நீக்க முடியாது என Google நேரடியாக சொல்லி விட்டது.
நீக்க முடியாது என்பதற்கு கூகுள் சொன்ன காரணம் ”அந்த வீடியோ Youtube community guideline க்கு உட்பட்டே உள்ளது” எனவே அதை நீக்க முடியாது.
உடனே ஒபாமாவும் வாய முடிட்டாரு.. ஆனால் ஆய்வு செய்து பார்த்ததில் அந்த வீடியோ Youtube ன் community guideline க்கு எதிராகவே உள்ளது.
இதோ Youtube ன் community guideline:
Don’t Cross the Line என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள 6 வது விதி:
We encourage free speech and defend everyone’s right to express unpopular points of view. But we don’t permit hate speech (speech which attacks or demeans a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, and sexual orientation/gender identity).
வேறுக்கத்தக்க பேச்சு – ஒரு மதத்தை தாக்கி அல்லது அவமதிக்கும் பேச்சை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கண்ட விதியில் கூறப்பட்டுள்ளது.
உலக முஸ்லிம்கள் கொந்தளித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் அளவிற்கு வெறுக்க தக்க பேச்சாக ஒரு மதத்தை அவமதித்து தாக்கி தயாரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோ மேற் கண்ட விதி முறைப்படி நீக்க பட வேண்டும்.
ஆனால் கூகுள் அது விதிமுறைக்கு உட்பட்டே இருக்கி்ன்றது எனக் கூறி அதை நீக்க மறுப்பதோடு பலரையும் பார்க்க தூண்டும் படி முகப்பிலேயே இன்னமும் வைத்துள்ளது. (இந்த செய்தி வெளியிடும் வரை)
——-
குறிப்பு – முகப்பில் ஒருவன் பெயரில் இருந்த வீடியோவை இந்தியாவில் மட்டும் தற்போது  நீக்கியுள்ள Youtube அந்த வீடியோவின் படத்தை இன்னமும் முகப்பிலேயே தான் வைத்துள்ளது. அதை கிளிக் செய்தால் நீக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வருகின்றது.  மேலும் பல பெயர்களில் அந்த வீடியோ Youtube ல் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்திய நேரப்படி  இன்று (18-92012) மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்டு Youtube home page ன் screen shot தொடர்ந்து 4 நாட்களாக home page ல் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.

————
ஆக கூகுள் என்ன நினைக்கின்றது?: ”இந்த வீடியோ எந்த மதத்தையும் தாக்கவில்லை அதில் சொல்லப்பட்டுள்ளவைகள் உண்மையானவைகள் தான்”
வீடியோ விதிமுறைக்கு உட்பட்டு தான் இருக்கின்றது எனக்கு கூறி உலக நாடுகளை கூகுள் ஏமாற்றி வருகின்றது.
நமக்கு தெரிந்த இந்த செய்தி ஒபாமாவுக்கும்  தெரியாமலா இருக்கும் ? ஆக ஒபாவும் கூகுளோடு சேர்ந்து நாடகமாடுகின்றார் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோவை Google ம் அமெரிக்க அரசும் பொய்க் காணரத்தை கூறி இன்னமும் நீக்காமல் வைத்திருப்பதின் பின்னனி என்ன ?
வேறு என்னவாக இருக்கு முடியும் ? எல்லா நாடுகளிலும் அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருகின்றது.
அதை தடுக்க இஸ்லாத்தை பின் பற்றும் முஸ்லிம்கள்  மீதும் இஸ்லாத்தின் மீதும் அவமதிப்பை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு வழி , அவர்களை கொபமடையச் செய்து வன்முறைகளுக்கு தூண்டி விடுவது.  அதற்கு இந்த வீடியோவை பயன்படுத்தியுள்ளனர்.
இஸ்லாத்தின் பால் வருபவர்கள், முஸ்லிம்களை பார்த்து வருவதில்லை, மாறாக தூய இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகள் பிடித்தே வருகின்றனர் என்பது இந்த சதி காரர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்ஆன்: 61 :08 )

Monday 17 September 2012

sample


படம் எடுத்தவனை பத்திரமாக திருப்பி அனுப்பிய லாஸ் ஏன்ஜல்ஸ் அதிகாரிகள்!

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி படம் எடுத்ததில் தொடர்புடைய Nakoula Basseley Nakoula என்பனை நேர்ணாகல் எடுத்த பிறகு லாஸ் ஏன்ஜல்ஸ் ஷெரிஃப் அலுவலக அதிகாரிகள் பத்திரிமாக அவனை ஒரு இடத்தில் இறக்கி சென்றுள்ளனர்.
இவன் தற்போது தலைமறைவாக உள்ளான். அதிகாரிகள் அவனை எங்கு இறக்கி விட்டார்கள் என்ற தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றது. அவன் தற்போது தனது வீட்டில் இல்லை. அவன் எங்கு உள்ளான் என்ற தகவல் அதிகாரிகளை தவிர யாருக்கும் தெரியாது.
அதிகாரிகளிடம் அவன் எங்கு உள்ளான் என கேட்டதற்கு அவரை நாங்கள் இறக்கி விட்டு விட்டோம் அவர் எங்கு சென்றார் என எங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர்.
அவனை முழுவதுமாக நேர்காணல் கண்டன அதிகாரிகள் , Nakoula Basseley Nakoula வங்கி பொருளாதார குற்றச்சாட்டில் கோர்ட் அவனுக்கு விதித்த நிபந்தனைகளை மீறி உள்ளார்” என உயர் அதிகாரிகளுக்கு கருத்து தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ”இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது புனைப் பெயர் வைக்கக் கூடாது என்ற நிபந்தனையை ,  புனைப் பெயரில் இந்த படத்தை youtube ல் அப்லோடு செய்து மீறி” உள்ளானாம்.
எனினும் Nakoula Basseley Nakoula படத்தை தயாரித்தற்காக அவன் மீது எந்த வழக்கோ, குற்றச்சாட்டோ, விசாரனையோ மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவன் இதுவரையிலும் (இந்த செய்தி வெளியிடும் வரை) கைது செய்யப்படவில்லை.
கைது செய்து தூக்கிலிட வேண்டியவனை அமெரிக்க அதிகாரிகள் அரவனைத்து பாதுகாப்பு அளிக்கின்றார்கள் என இதிலிருந்து நன்கு தெரிகின்றது.
இவன் தான் இந்த படத்தை தயாரிதுள்ளான் (Producer) என்பதை இந்த படத்தில் நபிகள் நாயகத்திற்கு விற்கப்படும் இளம் பெண் அடிமையாக நடித்த 21 வயது அண்ணா குர்ஜி என்ற  பெண் நடிகை தனது முகநூல் பக்கதில் வெளியிட்டுள்ள செய்தில் வெட்டவெளிச்சமாகின்றது.
அதில் அவர்:
Nakoula Basseley Nakoula என்பவரால் நானும் என்னுடன் நடத்த நடிகர்களும் ஏமாற்றப்பட்டு விட்டோம் எங்களை வைத்து அவர் நன்கு விளையாடியுள்ளார்.
படம் எடுக்கும் போது எந்த இடத்திலும் முஹம்து என்றோ எந்த மதத்தை பற்றியோ எங்கும் குறிப்பிடவில்லை. இந்த படடித்தில் Hilary என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன்.  Desert Warrior என்ற பெயரில் இந்த படம் தயாரிக்கப்பட்டது. GEORGE என்ற தலைவருக்கு நான் எனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் எனது பெற்றோரால் விற்கப்படுவதாக படம் தயாரிக்கப்பட்டது.
ஆனால் அதை திருத்தி Nakoula Basseley Nakoula வேறு விதமாக படமாக்கி விட்டார். முஹம்மது அவர்களை இழிவுபடுத்தப்படும் படமாக இது மாற்றப்படும் என ஒருகாலும் நான் நினைக்கவில்லை.
என்ற கருத்தில் அதில்  குறிப்ப்பிட்டுள்ளார்.
அண்ணா குர்ஜி என்ற நடிகை இந்த படத்தில் நடித்தற்காக ஒரு நாளைக்கு 50 பவுண்டுகள் பெற்றுள்ளார்.
தினமும் அவரது ஈமெலுக்கு மிரட்டல்கள் வருகின்றதாம். எனவே அவர் தனது அறிக்கையில் பின்னர்  ”உலகமும் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.” என இறுதியில் சேர்த்துள்ளார்.
பட பிடிப்பின் போது Nakoula Basseley Nakoula வுடன் அண்ணா குர்ஜி என்ற நடிகை எடுத்துக் கொண்ட புகைப்படம்

மேலும் இந்த படத்தில் நடித்த மேலும் சிலரும் இவன் தான் இந்த படத்தின் தயாரிப்பாளன் எனக் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை இயக்கியதும் இவனே என்று கூறப்பட்டது.  ஆனால் தற்போது Alan Roberts என்பவன் தான் இந்த படத்தை இயக்கியதாக இந்த படத்தில் நடத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தின்  Casting Notice ம்  (அதாவது இந்த படத்தை தயாரிப்பது இயக்குவது யார்? எந்தெந்த காதாபாத்திரத்திற்கு எந்த மாறியான  ஆள் தேவை என நடிகர்கள் வேண்டி அறிவிப்பு வெளியிடுவது) அவ்வாறு தெரிவிக்கின்றது.
http://casting.backstage.com/jobseekerx/viewjob.asp?jobid=TXYxNuSgxoQo3eKH2L2DW8iOkP2v
Nakoula Basseley Nakoula என்பவனும் Alan Roberts என்பவனும் வெவ்வேறு நபர்கள் எனத் தெரிகின்றது.
Alan Roberts என்ற பெயரில் போனோகிராபி பட இயக்குனர் ஒருவன் உள்ளானாம்.  அவன் தான் இவனா என்பதில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
தற்போது  ஒரு அளவிற்கு  திரைப்படத்தை தயாரித்த கும்பல் மற்றும் அதை பரப்பியது யார் என்பது அடையாளம்  காணப்பட்டு விட்டாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அமெரிக்க அரசு எடுக்காமல் இருப்பது முஸ்லிம்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தான் தினந்தோறும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றது.  பாக்கிஸ் தானில் நடைபெற்ற அமெரிக்க தூரக முற்றுகையில் ஒருவர் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நன்றி tntj.net

அண்ணாநகர் மர்கசில் தர்பிய முகாம்


16 - 09 - 2012 ஞாயிற்று கிழமை அன்று மாலை 3.00 மணிமுதல் 6.30 மணிவரை அண்ணாநகர் மர்கசில் தர்பிய முகாம் நடைபெற்றது சகோதரர் தொவ்பிக் அவர்கள் உரையாற்றினார் இதில் பலர் கலந்துகொண்டனர்  அல்ஹம்துலில்லாஹ் 

Sunday 16 September 2012

திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக அமெரிக்க அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது













கடந்த 15-09-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக அமெரிக்க அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 500 கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் ஹபிபுர் ரஹாமன் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.