வளமான வாழ்க்கைக்கு வித்திடும் CA படிப்பு
பத்தாண்டுகளுக்கு முன் கல்லூரி முடித்தவர்கள் மட்டுமே சி.ஏ., படிக்க முடிந்தது. இன்றைய நிலையில், 12ம் வகுப்பை முடித்த ஒரு மாணவர், சி.ஏ. படிப்பை மேற்கொள்ள முடியும். மேலும், முன்பு ஐந்தரை வருடங்களாக இருந்தப் படிப்பு, தற்போது 4 வருட படிப்பாக மாறியுள்ளது..
பி.காம்., பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்ணும், மற்ற இளநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவோர், இனி சி.ஏ., படிக்க, CPT நுழைவுத் தேர்வு எழுதத் தேவையில்லை.
மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் CPT( Common Proficiency Test) தேர்வுக்கு தகுதிபெறுவார்கள். ஆப்ஜெக்டிவ் முறையிலான இந்த தேர்வில், நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்த தேர்வில், அக்கவுண்டிங் அடிப்படைகள், வணிகச் சட்டங்கள், பொது பொருளாதாரம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான திறனாய்வு உள்ளிட்ட பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.
இதன்பிறகு, 9 மாதங்கள் கழித்து, Integrated Professional Competence Course(IPCC) என்ற தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது 2 பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவில் 4 தாள்களும், இரண்டாவது பிரிவில் 3 தாள்களும் உள்ளன. இந்த இரண்டு பிரிவு தேர்வையும் முடித்தப் பிறகு, ஒருவர் இறுதி நிலைக்கு செல்லலாம்.
சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது. வீட்டிலிருந்து தான் படிக்க வேண்டும். படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000 ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம். சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி., படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது. தேர்ச்சி பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும்.
வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம். இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.
நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து. அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால், பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும். 17 வயதில் படித்து 21 வயதில் மாதம் லட்சங்களில் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான்,
ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கத் தேவைப்படும் திறன் படைத்த சி.ஏ., படித்தவர்களிடம் அதிகமாக உள்ளது. சி.ஏ., படித்தவர்களே இந்திய நிறுவனங்களுக்கான சிறந்த தலைவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் உடனடி முடிவுகளை சி.ஏ., படித்தவர்களே எடுக்க முடியும்.
நிதி தொடர்புடைய அம்சங்களில் தெளிவு, ஸ்திரத்தன்மை, , மாற்றம் பெறும் வரிவிதிப்பு முறைகள், பொருள்களுக்கான விலையினை நிர்ணயித்தல் போன்ற பணிகளில் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு சி.ஏ பணியை திறம்பட மேற்கொள்ளலாம்
No comments:
Post a Comment