அறிவியல்

செல்போன் ரீசார்ஜ் செய்ய புதிய வழி – சாதித்த தமிழர்!

சூரியஒளி மூலம் ஒரே நேரத்தில் 4 செல்போன்களை ரீசார்ஜ் செய்யும் புதிய கருவியை சென்னையை சேர்ந்தவர் வடிவமைத்துள்ளார்.
Rays of Sun
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் நந்தகுமார் (64). பியூசி வரை சென்னையில் படித்தவர். ரேடியோ மற்றும் டி.வி டெக்னாலஜி 2 வருட படிப்பையும் முடித்திருந்தார். தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இதை தொடர்ந்து மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக டி.வி டெக்னிக் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் சூரியஒளி மூலம் செல்போன்களை ரீசார்ஜ் செய்யும் புதிய கருவியை வடிவமைத்துள்ளார். Ôமொபைல் ரீசார்ஜ்Õ என்ற இந்த கருவி மூலம் ஒரே நேரத்தில் 4 செல்போன் களை ரீசார்ஜ் செய்ய முடியும்.
முழுமையாக ரீசார்ஜ் ஆக 2 மணிநேர சூரியஒளி போதும். அனைத்து வகையான செல்போன்களை ரீசார்ஜ் செய்ய முடியும்.
இதுகுறித்து டி.எஸ்.நந்தகுமார் கூறுகையில்,
‘‘சூரியஒளி மூலம் செல்போன் களை ரீசார்ஜ் செய்யும் கருவியை வடிவமைக்க 3 மாதமாக முயற்சி மேற்கொண்டேன். ரூ.1500 முதலீடு செய்துள்ளேன்.
மின்சாரத்தை சேமிக்க இது ஒரு நல்ல வழி. இந்த கருவியை கண்காட்சிகளில் வைத்து விளக்க உள்ளேன். ஒரு கருவி ரூ.180க்கு விற்க முடிவு செய்துள்ளேன் அடுத்தகட்டமாக சூரியஒளியை பயன்படுத்தி, குறைந்த செலவில் வீடுகளுக்கு மின்விளக்கு தர முயற்சி செய்கிறேன்’’ என்றார்.


Thanks to kalvikalanchiyam 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீர்மூழ்கி கப்பல்களில் “பாலஸ்ட் டாங்க்” எனப்படும் தண்ணீரி தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கும். இந்த தொட்டிகளில் செலுத்தப்படும் தண்ணீரைக் கட்டுப்படுத்த முடியும்.
இப்படித் தண்ணீரைத் தொட்டிகளில் நிரப்பியோ, வெளிப்படித்தியோ. நீர்மூழ்கிகப்பலைக் கடலுக்கடியில் ஆழத்திற்குச் செல்லும்போதும் கட்டுப்படுத்த முடியும்.www.kalvikalanjiam.com
நீண்டநாள் பயணத்தின் போது கொஞ்சம் கொஞ்சமாக கப்பலில் உள்ள உணவுபொருட்கள் எல்லாம் குறைந்து விடும்.
அப்போது கப்பலின் எடையும் குறைந்து விடும் அல்லவா? அப்போது என்ன செய்வார்கள் தெரியுமா?
கப்பலில் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தேவைக்கேற்ப நீர் நிரப்பி அட்ஜஸ்ட் செய்து கொள்ளவார்கள். அப்போது தான் கப்பலை குறிப்பிட்ட அழத்திற்கு கொண்டு சென்று இயக்க முடியும்.


நாம் இந்த பிரபஞ்சத்தில் நட்சத்திர கூட்டத்தோடு ஒப்பிடும்போது நம் உலகமே ஒன்றும் இல்லை!! 



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


திருக்குரானும் நவீன கருவியலும்