கேள்வி : ASSALAMU ALLAIKKUM,KARUVEEL ULLA KULAINTHAIKKU (CONSIVE) JAKKAT KADAMI ULLADA ? ANTHA KULAINTHIEN FATHER JAKKAT (KARUVEEL ULLA KULAINTHIKKU ) KODUKKALAMA ?
தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும் ,கருவில் உள்ள குழந்தைக்கு ஜகாத் கடமை உள்ளதா?அந்த குழந்தையின் தந்தை ஜகாத் (கருவில் உள்ள குழந்தைக்கு) கொடுக்கலாமா?
- SHARFUDEEN,ABUDHABI
தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும் ,கருவில் உள்ள குழந்தைக்கு ஜகாத் கடமை உள்ளதா?அந்த குழந்தையின் தந்தை ஜகாத் (கருவில் உள்ள குழந்தைக்கு) கொடுக்கலாமா?
- SHARFUDEEN,ABUDHABI
பதில் : ஸக்காத் கொடுப்பதைப் பொருத்தவரையில் கருவில் உள்ள குழந்தைக்கு ஸக்காத் கடமை என்று மார்க்கத்தில் எந்தக் கட்டளையும் கிடையாது.
ஸக்காத் 8 கூட்டத்தார் மீது கடமையாகும்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல் குர்ஆன் 9-60)
1. யாசிப்பவர்கள்.
2. ஏழைகள்.
3. ஸக்காத் வசூல் செய்பவர்கள்.
4. உள்ளங்கள் ஈர்க்கப்படுபவர்கள்.
5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு.
6. கடன்பட்டவர்கள்.
7. அல்லாஹ்வின் பாதையில்.
8. நாடோடிகளுக்கு.
மேற்கூறப்பட்ட 8 கூட்டத்தாருக்குத்தான் ஸக்காத் கடமை என்று திருமறைக் குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகிறது. அது மாத்திரமன்றி ஸக்காத் என்பது பிள்ளைகளை கணக்கிட்டு செய்யும் ஒரு காரியம் அன்று. மாறாக நமது சொத்தின் மதிப்பை வைத்து கணக்கிடும் ஒரு கடமையாகும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
- பதில் : ரஸ்மின் MISc
No comments:
Post a Comment