குமரி மாவட்டத்தில் தீன் தொலைகாட்சி என்ற உள்ளுர் கேபில் டிவி சேனல் மூலம் ஏகத்துவ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
தாய் மார்க்கத்தில் மீண்டு வரும் குமரி மக்கள் கடந்த சில வருடங்களா நம்முடைய ஜமாத்தின் பிரசாரம் மூலம் முஸ்லிம்கள் என்றாலே கொடூரமானவர்கள் இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்ற சிந்தனையை போக்கி மனிதனை நேசிகின்ற மார்க்கம் இஸ்லாம் மனித நேயத்தை கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்ற சிந்தனை மக்கள் மத்தியில் உருவாக்கி இன்று இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருகின்றனர். அல்ஹம்துல்லில்லாஹ்.
அதே போன்று தான் குமரி மாவட்டத்திலும் நம் ஜாமத்தின் பிரசாரம் மக்கள் மத்தியில் மாபெரும் மாற்றதை உருவாகி இஸ்லாத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நாள் தோறும் பெருகி வருகின்றது. அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக இதன் தாக்கம் அதிகமாகியுள்ளது.
குமரியின் தென் பகுதியை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இஸ்லாமிய தொலைகாட்ச்சியான தீன் டிவி தான் இதற்கு காரணம்.
குமரியின் தென் பகுதியை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இஸ்லாமிய தொலைகாட்ச்சியான தீன் டிவி தான் இதற்கு காரணம்.
இந்த தொலைகாட்சி கிறஸ்தவர்கள் கணக்கில் அடங்காத டிவி சானல்களை வைத்து மக்களுக்கு பிரசாரம் செய்தாலும் நம்முடைய தீன் டிவி இஸ்லாத்தை அதன் துயவடிவில் எடுத்துரைக்கும் சானல் என்ற வாசகத்தோடு மக்களை சென்று அடைந்து வருகிறது அல்ஹம்துல்லில்லாஹ்.
இது பிறமசயத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மிகப்பெரிய பொக்கிசமாக அமைந்துள்ளது .
இதில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் மற்றும் விவாதங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு உடனே அவர்கள் தீன் டிவி அலுவலகத்தை
தொடர்பு கொண்டு இஸ்லாத்தை நாங்கள் தவறுதலாக நினைத்து வைத்திருந்தோம் உங்கள் டிவி எங்களுக்கு உண்மையை உரைத்தது மட்டும் இல்லாமல் மரணதிற்கு முன்பு நங்கள் இந்த சத்தியத்தை ஏற்று இறைவனிடம் நன்மைஅடைய வேண்டும் என்றும் ஆசைபடுகிறோம் என்று கூறி அதற்குரிய வழிமுறைகளை அல்லது ஆலோசனகளை அவர்கள் கேட்கின்றனர்.
தொடர்பு கொண்டு இஸ்லாத்தை நாங்கள் தவறுதலாக நினைத்து வைத்திருந்தோம் உங்கள் டிவி எங்களுக்கு உண்மையை உரைத்தது மட்டும் இல்லாமல் மரணதிற்கு முன்பு நங்கள் இந்த சத்தியத்தை ஏற்று இறைவனிடம் நன்மைஅடைய வேண்டும் என்றும் ஆசைபடுகிறோம் என்று கூறி அதற்குரிய வழிமுறைகளை அல்லது ஆலோசனகளை அவர்கள் கேட்கின்றனர்.
அதே போன்று வட்டி தொழில் செய்த துரை என்ற சகோதரர் இந்த தொலைகாட்சி வட்டியை மட்டும் தவறு என்று அவர்களுக்கு புரியவைக்க வில்லை இந்த இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஆக்கிகொள்வததோடு, தான் செய்த தொழிலைய மாற்றி விட்டு ஹலலானே தொழிலை செய்பவராக ஆக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்
ஆதே போன்று நம்முடைய கிறஸ்தவ விவாதங்களை ஒளிபரப்பியதால் மிரட்டலை சந்தித்தாலும் கொள்கை உறுதியில் தொடர்ந்து ஒளிபரப்பிய பிறகு கிறஸ்தவ மக்கள் நம்மை அணுகி இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் எங்களுக்கு அதுகுறித்த புத்தகம் வேண்டும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டும் என்று கேட்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிகள் மூலம் மதுக்கடையில் வேலை பார்க்கும் செந்தில் என்பவர் இஸ்லாத்தை மனதாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சிகள் இன்று மாணவர்களையும் வெகுவாக கவர்ந்திருகிறது கருங்கல் பகுதியை சார்ந்த திருவிதம்கோடு பகுதியில் படிக்கும் மாணவர்களும் நம் அலுவலகத்தை அணுகி மார்க்கம் சம்மந்தமாக புத்தகங்களை பெற்றுசென்றுள்ளர்கள்.
இப்பொது முளகுமூடு பகுதியை சார்ந்த மாணவன் மெல்பின் என்பவர் இந்த தீன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்து விட்டு மாநில தலைமைக்கு கடிதம் எழுதி உடனே நான் இந்த சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்பு கொள்ள அந்த தகவலை தலைமை குமரி மாவாட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க உடனடியாக மாவாட்ட நிர்வாகம் அந்த சகோதரரை தொடர்பு கொண்டு பேசிய பொது அவரும் நம்மை சந்திக்க வர ஆவலாக இருந்து இறுதியில் கடந்த 10.7.2011 அன்று நம்முடைய தக்கலை கிளை அலுவலகத்திற்கு வந்து மாவாட்ட துணை செயலர் பஷீர் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள். பின்னர் நான் இது தான் சத்திய மார்க்கம் என்பதை உணர்துள்ளேன் என்று கூறி சத்திய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் அல்ஹம்துல்லில்லாஹ் .
கிறிஸ்துவர்கள் இந்த மாவட்டத்தில் அதிகமாக வாழ்ந்தாலும் இன்று இஸ்லாத்தின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வம் இந்த இஸ்லாம் தான் சத்திய மார்க்கம் என்று கிறிஸ்துவர்களை நினைக்க வைத்துள்ளது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment