Thursday 28 June 2012

இந்த வார உணர்வில்.. 16: 44 (ஜுன் 29)



1.ம.ம.ம வின் துரோகத்திற்கு மரண அடி! மக்கள் வெள்ளத்தில் மிதந்தது மண்ணடி!!
2.கருவியல் மனித இனபெருக்கத் தொடர் – டாக்டர் முஹம்மது கிஸார் பாகம் 3 கருவுறுதல் முதல் குழந்தை பிரசிவிக்கும் வரை!
3.சுகாதாரத்துறை அளித்த விளக்கம் சரியா?- ஒரு விரிவான அலசல்!
4,முஸ்லிம்களுக்கான நலத்திட்டங்கள் :
புளுகு செய்திகளுக்கு பின்னால் தமிழக அரசு இருக்கிறதா?
5,எழுச்சியுடன் நடைபெற்ற டிஎன்டிஜேவின் மாநிலச் செயற்குழு!
6,அம்பலமானது ம.ம.க.வின் சமுதாய துரோகம்!
7,திருவாரூர் மாவட்ட டிஎன்டிஜே நடத்திய முற்றுகைப் போராட்டம்
8, வெளிச்சத்திற்கு வரும் தினத்தந்தியின் காவி முகம்!
9,இது புதுசு – பிறந்த நாள் வாழ்த்துகூறும் புதிய பாதை!
10.பிற்படுத்தப்பட்டோர் உதவித்தொகை இணையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு :
11,“லண்டன் பள்ளியில் குட்டைப் பாவாடைக்குத் தடை”
12,பொதுக்கூட்டம் என்ற பெயரில் திருச்சியில் நடந்த மாநாடு!
13,தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்த டிஎன்டிஜே!
14,ஐம்பத்து ஐந்தாயிரம் கோடி அள்ளிக் கொடுத்த பிரதமர் :
15,மத்திய அரசின் கல்வி உதவித்தொகை :
16, ஏழைகளை மீண்டும் மீண்டும் துன்புறுத்தும் ஆட்சி- தீர்வுதான் என்ன?
17, தொடரும் பாதிரிகளின் சில்மிஷச் சேட்டைகள் :
ஜெயிலுக்குள்ளும் தொடராமல் இருக்க காவல்துறை ஆவன செய்யுமா?
18, ரஷ்ய அதிபர் லெனின் இஸ்லாத்தை ஏற்க முன்வந்தாரா?
தற்போது பரப்பான விற்பனையில்…
உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:
9080898880
30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3500 உதவி – தவ்ஹீத் நகர் கிளை


திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளையில் கடந்த 16-6-2012 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 3500 ம் 25 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.

“மெஹ்ராஜூம் தவறான நம்பிக்கைகளும்” நோட்டிஸ் விநியோகம் – தவ்ஹீத் நகர் & அண்ணா நகர் !


“மெஹ்ராஜூம் தவறான நம்பிக்கைகளும்” நோட்டிஸ் விநியோகம் – தவ்ஹீத் நகர் & அண்ணா நகர் !

திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் & அண்ணா நகர் கிளைகளின் சார்பாக 15-6-2012 “மெஹ்ராஜூம் தவறான நம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

நபித்தோழர்களின் தியாகங்களும், நமது நிலையும் – தவ்ஹீத் நகர் கிளை பயான்

திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக 10-6-2012 அன்று மாலை 4-30 மணிக்கு TNTJ மர்க்கஸில பயான் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் E.பாரூக் அவர்கள் நபித்தோழர்களின் தியாகங்களும், நமது நிலையும்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Monday 25 June 2012

பெண்களை அடிக்கலாம் என்பது முரண்பாடாக உள்ளதே?


பெண்களை அடிக்கலாம் என்பது முரண்பாடாக உள்ளதே?

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5

                              கேள்வி: பெண்களை அடிக்கலாம் என்பது முரண்பாடாக  உள்ளதே?

    Sunday 10 June 2012

    முஸ்லிம் போலீஸ் அதிகாரியை கட்டாயம் நியமிக்க வேண்டும், மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!


    முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில், ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியை கட்டாயம் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகள் குறித்து ஆராய நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான குழுவை கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசு நியமித்தது. அக்குழு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு யோசனைகளை தெரிவித்து 2006ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது.
    அதில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறைந்தது ஒரு இன்ஸ்பெக்டர், அல்லது சப் , இன்ஸ்பெக்டரையாவது நியமிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாரபட்சம் தவிர்க்கப்படுவதோடு, முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியது.
    இதன் அடிப்படையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படியும் கடிதத்தில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
    தினகரன் : 8-6-201

    Saturday 2 June 2012

    விவாதத்தில் ஏற்பட்ட தோழ்வியை சகிக்க முடியாமல் கொலைவெறித் தாக்குதல் – அக்குரனையில் தப்லீக் காடையர்களினால் தாக்கப்பட்டார் SLTJ யின் பிரச்சாரகர் சகோதரர் முஆத் MISc

    விவாதத்தில் ஏற்பட்ட தோழ்வியை சகிக்க முடியாமல் கொலைவெறித் தாக்குதல் – அக்குரனையில் தப்லீக் காடையர்களினால் தாக்கப்பட்டார் SLTJ யின் பிரச்சாரகர் சகோதரர் முஆத் MISc

    இன்று 01.06.2012 இலங்கையின் மத்திய மாகாணத்தில் இருக்கும் முஸ்லீம்கள் செரிந்து வாழும் ஊரான அக்குரணையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பாளர் சகோதரர் முஆத் MISc அவர்கள் தப்லீக் காடையர்களினால் தாக்கப்பட்டிருக்கிறார்.
    நாடு முழுவதும் தப்லீக் ஜமாத்தின் அடாவடித்தனங்கள்.
    கடந்த ஏப்ரல் 21,22ம் தேதிகளில் ஹெம்மாத்தகமயில் தப்லீக் ஜமாத்துடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பகிரங்க விவாதம் ஒன்றை நடத்தியிருந்தது விவாதம் முடிந்த அடுத்த வாரம் ஜும்மா தொழுகைக்காக தயாரான அக்குரனை தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் ஜும்மா செய்யக் கூடாது என்று ஊர் பெரிய பள்ளி மூலம் மிரட்டப்பட்டார்கள்.
    அதையும் மீறி அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து நமது சகோதரர்கள் அடுத்த வாரமும் ஜும்மாவை நடத்தினார்கள். ஆனால் ஊர் பெரிய பள்ளி மற்றும் தப்லீக் ஜமாத்தினர் அனைவரும் தொழுகையைத் தடுப்பதற்கு பெரிதும் முயற்சி செய்து அடாவடித் தனத்தில் இறங்கியதுடன் ஒவ்வொரு வாரமும் ஜும்மா நடக்கும் போது தொழுகையை தடுக்கும் விதமாக கற்களை வீசுவதும், மிரட்டுவதுமாக தப்லீக் ஜமாத்தினரின் தொந்தரவுகள் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
    காரணம் என்ன?
    இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்கள் மாத்திரம் தான் இஸ்லாத்தின் மூலாதாரம் என்பது நிரூபிக்கப்பட்டதுடன், தப்லீக் ஜமாத்தினர் ஏற்றுக் கொண்டுள்ள இஜ்மா, கியாஸ், மத்ஹபுகள் சட்ட நூல்கள், தஃலீம் தொகுப்பு ஆகியவற்றில் ஆபாசங்களும், அபத்தங்களும், மார்க்கத்திற்கு முரனான பல செயல்பாடுகளும் காணப்படுகின்றன என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதுடன் தப்லீக் ஜமாத்தின் அடிப்படையும் ஆட்டம் கண்டது.
    விவாதத்தின் முடிவில் தங்களின் வழிகெட்ட கொள்கைகள் வெளியாகிவிட்டதே என்பதைப் பொருக்க முடியாதவர்கள் மக்கள் கேட்க்கும் கேள்விகளை இனிமேல் சந்திக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டனர். அதனால் தங்களின் அடாவடித் தனங்களை அவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டார்கள்.
    ஆம் விவாதத்தில் ஆதாரத்தை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வாய்க்கு வந்ததையெல்லாம் உளரிக் கொட்டி தாங்கள் அபத்தத்தையும், ஆபாசத்தையும் தான் ஆதாரமாக்க் கொண்டிருக்கிறோம் என்பதை ஒத்துக் கொண்டதுடன், திருமறைக் குர்ஆனிலும் இல்லாத்தை நுழைத்திருக்கிறோம் என்பதை ஒத்துக் கொண்டது வழிகெட்ட தப்லீக் ஜமாத்.
    மேஜிக் மவ்லானாவும், அக்குரனை அஸ்மா பள்ளி நிர்வாகமும்.
    விவாதத்தில் விவாதிப்போர் பட்டியலில் அக்குரனையைச் சேர்ந்த அப்துல் காதர் என்ற தப்லீக் ஜமாத் ஆலிமும் இடம் பெற்றிருந்தார். குர்ஆன், ஹதீஸை அள்ளிப் போட்டு விவாதத்தை ஜெயிப்பார் என்ற எண்ணத்தில் தப்லீக் ஜமாத்தினர் இவரையும் பட்டியலில் போட்டிருந்தார்கள்.
    ஆனால் ஆலிம்சாவோ வாதிப்பதற்கு பதிலாக மேஜிக் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஆம் ஒரு பேனாவை எடுத்து இது பச்சைப் பேனா, இதனை நான் இப்போது சிகப்பாக மாற்றப் போகிறேன். என்று திரும்பத் திரும்ப சொல்லியே 15 நிமிடங்களைக் கடத்திவிட்டார். பைத்தியக்கார மருத்துவமனையில் இருக்க வேண்டியவர் விவாதத்திற்கு வந்திருக்கிறார் என்று நமது தரப்பால் சொல்லப்பட்டதிலிருந்து வாயை மூடி மௌனமாகிவிட்டார் ஆலிம்சா அப்துல் காதர்.
    விவாதம் முழுவதும் 03 தடவைகள் மாத்திரம் தான் ஆலிம்சா வாய் திறந்தார் அதுவும் அவ்வப்போது மாத்திரம்.
    இந்த அவமானம் பொருக்க முடியாதவர் தனது கைங்கரியத்தை வேறு விதத்தில் காட்ட ஆரம்பித்தார்.
    எப்படியாவது தங்கள் ஊருக்குள் (அக்குரனைக்குள்) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் நடத்தப்படும் ஜும்மாவை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து ஊர் பெரிய பள்ளி மூலம் மிரட்டல் விடுத்துப் பார்த்தார் முடியவில்லை. அதனால் அடித்து நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
    நேற்று 01.06.2012 வெள்ளிக்கிழமை நடந்தது என்ன?
    கடந்த சில நாட்களாகவே பிரச்சினை தொடந்து கொண்டிருந்தாலும் நமது சகோதரர்களும் ஜும்மாவை நிறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். தொடர்ந்து ஜும்மா நடை பெற்றது. இறுதியாக நேற்றைய ஜும்மாவுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் முஆத் M.I.Sc அனுப்பப்பட்டிருந்தார்.
    ஜும்மா தொழுகையை முடித்துவிட்டு திரும்பி வரும் வழியில் பஸ்ஸுக்கு செல்வதற்காக அங்குள்ள சகோதரர் ஒருவர் சகோதரர் முஆத் அவர்களை மோட்டார் வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தார். வரும் வழியில் ஜும்மா தொழுகைக்குக் கூட செல்லாமல் தப்லீக் காடையர்களில் ஒரு கூட்டம் நமது சகோதரர்களை எதிர்பார்த்திருந்தது. அவர்கள் வந்தவுடன் மோட்டார் வண்டியை வழி மறித்தவர்கள். இவரா ஜும்மாவுக்கு வந்த மவ்லவி என்று கேட்டு அடிக்க ஆரம்பித்தார்கள்.
    கூட்டமாக நின்றிருந்த காடையர்கள் தாக்க ஆரம்பித்தார்கள். உடனே நமது சகோதரர்கள் இனிமேல் இங்கு நிற்கக் கூடாது என்று முடிவெடுத்து அவர்கள் அடித்துக் கொண்டிருக்கும் போதே ஓட ஆரம்பித்தார்கள்.
    அக்குரணையைப் பொருத்தவரை அது ஒரு மலைப் பிரதேசம் என்பதினால் மேட்டுப் பகுதியை நோக்கியே நமது சகோதரர்கள் ஓட வேண்டியிருந்த்து அடுத்த பக்கம் சென்றால் கூட்டமாக காத்திருக்கும் கொலை வெறியர்கள் மீண்டும் மீண்டும் தாக்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதனால் மேட்டுப் பகுதியை நோக்கி ஓட ஆரம்பித்தார் சகோதரரர் முஆத் அல்லாஹ்வின் உதவியினால் கொலைகாரப் பாவிகளின் முயற்சி அதற்கு மேல் எடுபடாமல் போனது.
    ஜும்மா நடை பெற்ற சகோதரர் ரிழ்வான் அவர்களின் வீட்டுக்குள் சென்றார் சகோதரர் முஆத். அதன் பின் அங்கு வந்தவர்கள் சகோதரர் ரிழ்வான் அவர்களுடன் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வீட்டுக்கு கற்கலால் அடித்து வீட்டுக் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.
    அதைத் தொடர்ந்து உடனடியாக பாதிக்கப்பட்ட முஆத் அவர்கள் கடுகஸ்தொடையில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றார்.
    தங்கள் கொள்கைளை விவாதக் களத்தில் நிரூபிக்க முடியாமல் வெட்கித் தலை குனிந்த தப்லீக் ஜமாத்தினரின் அடாவடித் தனங்கள் நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. அக்குரனை தவிர்த்து கிழக்கு மாகாணங்களிலும் மலை நாட்டில் நாவலப்பிட்டிய போன்ற இடங்களிலும் இவர்களுடைய அடாவடித் தனங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
    அல்லாஹ்வின் உதவியினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சத்தியப் பயணத்தில் எத்தனை துண்பங்கள் வந்தாலும் “சந்திக்கு வந்தாலும் சத்தியத்தை விடமாட்டோம்” என்ற கொள்கைப் பிடிப்பில் நமது சகோதரர்கள் வீரியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இனிமேலும் செயல்படுவார்கள் இன்ஷா அல்லாஹ்.
    பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக அல்லாஹ்விடம் உதவி தேடுவோமாக!
    சத்தியம் வந்த்து அசத்தியம் அழிந்தது நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும். (அல்குர்ஆன்)