Saturday, 20 August 2011

மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை!


மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை பின்பற்றுபவரே அஹ்மதியாக்கள் அல்லது காதியானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின் மத நம்பிக்கை படி முஹம்மதை இறைவனின் இறுதி தூதராகவும் இருதி காலத்தில் இமாம் மஹதி வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் காதியானிகள் மிர்ஸா குலாமை மஹதி என்றும் முஹம்மதுக்கு பின் மிர்ஸா குலாமையும் நபியாக நம்புவதால் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்ரிஸ்டர் அருகே உள்ள காதியான் எனும் ஊரில் தலைமையகத்தை வைத்துள்ள அஹமதியாக்களின் ஆன்மிக குரு கிலாபத்துல் மஸிஹ் மிர்ஸா மஸ்ரார் அஹ்மது லண்டனில் வசிக்கிறார். 1979-ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அஹமதியாக்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று எடுத்த தீர்மானத்தை நினைவூட்டி ஹஜ் உம்ரா வருபவர்கள் அதற்கான விண்ணப்பத்தில் முஹம்மதை கடைசி இறை தூதராக ஏற்று கொள்கிறேன் என்று கையொப்பமிட வேண்டும் என்றும் சவூதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

No comments:

Post a Comment