Wednesday, 29 February 2012

அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்


இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.
இலங்கை தேசத்து பிரச்சினையை அதன் குடிமக்களாகிய நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்வோம்! ஆட்டூழியம் புரிந்து பல நாடுகளின் இயற்கை வளங்களை சூரையாடி தனது மத மற்றும் உளுத்துப் போன சீரழிந்த கலாச்சாரத்தை திணித்து பல நாடுகளை சுடுகாடாய் மாற்றிய அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மனித உரிமை குறித்து குரல் எழுப்புவதற்கோ இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதற்கோ அணுவளவும் அறுகதை கிடையாது என்பதோடு மனித உரிமை என்ற போர்வையில் இலங்கை மண்ணை கபளீகரம் செய்ய நினைக்கும் மேற்குலக நரித்தனத்தை இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேச உலகுக்கும் உணர்த்தும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 27-2-2012 அன்ற நடத்தியது.
2.00 மணியளவில் மாளிகாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்பாட்டம் கொட்டும் மழையில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களுடன் நடை பெற்றது.
சாலை நெறிசல்களை ஏற்படுத்தாது பிறருக்கு ஊரு விளைவிக்காது கட்டுப்பாட்டுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பிடதக்கது.
நாட்டின் இறையான்மையை இமையாய் காக்க ஒரே முஸ்லிம் அமைப்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தான் களமிறங்கியது என்பதனை மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டது குறிப்பிடதக்கது.
மாளிகாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பஞ்சிக்கா வத்தை, மறதானை புகையிரத நிலையம் தாண்டி கண் மருத்துவ மனை வரை ஊர்வலமாய் வந்து அமைதியாய் முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்

முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் இலவச வாகன ஓட்டுனர் பயிற்சி


முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் இலவச ஓட்டுனர் பயிற்சி
Print This page

Monday, 27 February 2012

திருவண்ணாமலை தொவ்ஹீத் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி


 26.2.2012  அன்று திருவண்ணாமலை தொவ்ஹீத் கிளையின் சார்பாக இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது . அதில் மாநில தாயி ஹபீபுர் ரஹ்மான் பங்கு கொண்டு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு கேள்வி கேட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

திருவண்ணாமலை நகரத்தில் மாணவர்களுக்குகு" தர்கா வழிபாடு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்த பட்டது


19 - 02 -2012 அன்று திருவண்ணாமலை நகரத்தில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் தலைமையில் தெரு தெரு சென்று மாணவர்களுக்கு" தர்கா வழிபாடு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்த பட்டது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Monday, 20 February 2012

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.


குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.
RASMIN M.I.Sc
உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பானவேதங்கள் என்று பலரும் பல வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். ஆனால் அந்த வேதங்களில் தவறுகளும்,அசிங்கங்களும், ஆபாசங்களும்நிறைந்து காணப்படுவதை பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும்.

இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இஸ்லாம் தான் தூய்மையான மார்க்கம் என்று உலகமே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு தன்னைத் தானே உண்மைப் படுத்தும் வேதமாக புனித மிக்க திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

முஸ்லீம்களும், திருமறைக் குர்ஆனும் ஓர் சமூகவியல் ஒப்பீடு.

இன்றைய நாட்களில் திருமறைக் குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும் போது அவர்களின் நிலை மிகவும் கவலைக்குறியதாகவே காணப்படுகின்றது.

ஏன் என்றால் இறைவனிடமிருந்து வந்த வஹியை தம் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும் நமது சமுதாய சொந்தங்கள் அதைப் பற்றிய உண்மையான கண்ணியத்தைப் புரிந்து அதற்குறிய உரிமையைக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

# வயதில் மூத்த பலருக்கு இன்றும் குர்ஆன் ஓதத் தெரியாத அவல நிலை காணப்படுகின்றது.

# வருடத்தில் ஒரு தடவை கூட குர்ஆனைத் திறக்காத பலர் நம் சமுதாயத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

# ரமழான் மாதத்தில் மாத்திரம் குர்ஆனை முற்படுத்தி விட்டு மற்ற 11 மாதங்களும் அதை மறந்து வாழ்வோர் நம்மில் பலர்.

# மரணித்தவர்களுக்கு மாத்திரம் குர்ஆனை ஓதி (பித்அத்தை செய்து பாவத்தை சுமந்து) விட்டு காலம் கழிப்பவர்கள் பலர்.

# குர்ஆன் சாதாரண மக்களுக்கு புரியாது 64 கலைகள் படித்த அறிஞர்களுக்குத் தான் புரியும் என்று கூறி இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

# குர்ஆனை உழு செய்து விட்டுத்தான் தொட வேண்டும், உழூ இல்லாதவர்கள் தொடக் கூடாது என்று கூறி ஓத நினைப்பவர்களுக்கும் தடை போடுபவர்கள் நிறையவே உள்ளனர்.

ஆனால் திருமறைக் குர்ஆனும் நபியர்களின் வாழ்வும் திருமறைக் குர்ஆனின் முக்கியத்துவம் தொடர்பாக பல ஆழமான கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏனோ இந்த இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்வதில்லை?

திருமறைக் குர்ஆன் தொடர்பாகவும், அதனை ஓதுவது தொடர்பாகவும் இஸ்லாம் முன்வைக்கம் கருத்துக்களைப் பாருங்கள். 

ஒட்டகங்களுக்கு ஈடாகும் வசனங்கள்.

திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பெருமானத்தைப் பற்றியும் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் அருமையாக தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். "உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று பதிலளித்தோம். "உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : முஸ்லிம்.

ஒவ்வொரு வசனத்தை ஓதுவதற்கும் ஒவ்வொரு ஒட்டகங்கள் கிடைப்பது சமனானது என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வளவு நிறைவான பலன்கள் கிடைக்கும் திருமறைக் குர்ஆனை ஓதுவதற்கு நம்மில் எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றோம். அதன் வசனங்களை படித்து விளங்க வேண்டும், அதன் மூலம் இம்மை மறுமை பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

வேதப் புத்தகமாக, வாழ்கை வழிகாட்டியாக இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆன், பக்திப் பரவசத்தோடு பார்க்கப்படுகிறதே தவிர படிக்கப்படவில்லை. தூசு தட்டி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாப்பவர்கள்,தூய்மையான வேதத்தை படித்துணர ஆசைப்படுவதில்லையே?

எந்த வேதத்திற்கும் இல்லாத “எழுத்துக்குப் பத்து நன்மை” என்ற பெருமை.

திருமறைக் குர்ஆனை ஓதுபவருக்கு வசனத்திற்கு ஒரு ஒட்டகம் கிடைப்பதைப் போல் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகளையும் இறைவன் அள்ளித் தர தயாராக இருப்பதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் - என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி.

ஒரு எழுத்தை ஓதினால் கூட பத்து நன்மைகளை இறைவன் அதன் மூலம் நமக்கு வழங்குவதாக நபியவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக ஓரிடத்தில் இருக்கும் போது திருமறைக் குர்ஆனின் பத்து வசனங்களை நாம் ஓதினால் அந்த வசனங்களில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் பல்லாயிரக் கணக்கான நன்மைகளை அள்ளித் தருவதற்கு இறைவன் தயாராக இருக்கிறான்.

இந்த நன்மைகளையெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு நாம் எத்தனை தடவைகள் முயற்சி செய்திருப்போம்?

வானவர்களுடன் இருக்கும் மனிதராக.............

இறைவனின் தூதர்களான வானவர்கள் (மலக்குகள்) நம்முடன் இருக்கும் பாக்கியம் கிடைப்பது என்பது உண்மை முஃமினுக்கு எவ்வளவு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.

நபியவர்களின் நற்செய்தியைப் பாருங்கள்.

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி

நீங்கள் எழுமிச்சையானவரா? பேரிச்சையானவரா? அல்லது குமட்டிக் காயானவரா?

நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதாமல் இருப்பவருக்கும், தீயவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், தீயவராகவும் இருந்து கொண்டு குர்ஆனையும் ஓதாமலும் இருப்பவருக்கும் உவமானம் என்னவென்பதை பிரித்துப் பிரித்து உதாரணம் கூறி நபியவர்கள் தெளிவுபடுத்தும் காட்சியைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனைநன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி (5020)

பொறாமைப் பட்டு நன்மை செய்யுங்கள்.

இஸ்லாம் பொறாமை என்ற கெட்ட குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இரண்டு விஷயங்களில் தாராளமாக பொறாமைப் படலாம்,பொறாமைப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதில் ஒன்றாக திருமறைக் குர்ஆன் ஓதப்பட வேண்டும் என்பதையும் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி (5025)

திருமறைக் குர்ஆனுடன் ஒட்டி வாழ்பவர்களைப் பார்த்து நாமும் பொறாமைப் பட்டு அவர்களைப் போல் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வில் இணைத்து குர்ஆனிய வாழ்க்கை வாழ முற்பட வேண்டும்.

அமைதி இறங்கும். அருள் வானவர்களும் சூழ்ந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் ஆலையமான பள்ளியில் திருமறைக் குர்ஆனுடன் தொடர்பு வைப்பவர்கள் தொடர்பாக விரிவாகப் பேசும் ஒரு செய்தியைப் பாருங்கள்.

"அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

திருமறைக் குர்ஆனை கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்கள் அனைத்தும் இம்மை, மற்றும் மறுமையில் அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும். இதனடிப்படையில் இறைவனின் இறுதி வேதமான புனித திருக் குர்ஆனை நமது வாழ்வில் எடுத்து நடந்து குர்ஆனிய சமுதாயமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

நபி மீது பொய் கூறும் நாகூர் ஹனீபா.


இஸ்லாமிய கீதம் என்ற பெயரில்....

நபி மீது பொய் கூறும் நாகூர் ஹனீபா.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய கீதம் இசைப்பதில் பிரபலமானவர் நாகூர் ஈ.எம்.ஹனீபா இவருடைய பாடல்களுக்கு முஸ்லீம்களுக்கு மத்தியில் மட்டுமன்றி முஸ்லீம் அல்லாத மக்களுக்கு மத்தியிலும் பெரிய மவுசு உள்ளது.

ரமழான் காலத்தில் இலங்கையின் பல வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் ஹீரோ இவராகத் தான் இருப்பார். ஆனால் இவர் ராகம் போட்டு இசைக்கும் பாடல்கள் இஸ்லாத்தின் உண்மைக் கருத்தை இல்லாதொழிக்கும் அளவுக்கு ஆபத்தானவை என்பது பலருக்குத் தெரியாத உண்மையாகும் அதனால் இவர் பற்றிய தெளிவுக்காக சகோதரர் ஷம்சுல் லுஹா அவர்கள் எழுதிய இவ்வாக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.

ஒரு திரைப்படம் வெண் திரையில் ஓடத் துவங்கியதும் அதில் முதல்காட்சியாக இடம் பெறுவது தெய்வ வணக்கம் தான். அந்தப் படத்தின்தயாரிப்பாளருடைய குல தெய்வத்தைக் காட்டி, அதற்குப் பத்தி, சாம்பிராணி,குத்து விளக்கு வைபவ காட்சிகள் முதலில் இடம் பெற்ற பின்னர் தான்மற்ற காட்சிகள் துவங்கும். இதற்கு அடிப்படைக் காரணம் ஒரு காரியத்தின்ஆரம்பம் தெய்வ வழிபாட்டில் துவங்க வேண்டும் என்பது தான்.

திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தங்கள் பக்தியைஇப்படி வெளிப்படுத்துகின்றன என்றால், மதச் சார்பின்மையைஅடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசு தொலைக்காட்சிகள்,வானொலிகள் போன்றவை நம் நாட்டிலுள்ள மூன்று பெரிய மதங்களுக்குமுக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தத்தமது நிகழ்ச்சிகளைத் துவங்கும்முன் இந்து, முஸ்லிம், கிறித்தவப் பாடல்களை ஒளி, ஒலி பரப்புகின்றன.

இந்தப் பாடல்களில் இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் இடம் பெறும்இஸ்லாமிய (?) பாடகர் இன்னிசை முரசு நாகூர் ஈ.எம். ஹனீபா ஆவார்.இவரது புகழ் இந்தியா, இலங்கை மட்டுமல்லாது தமிழ் முஸ்லிம்கள் வாழும்இடங்களிலெல்லாம் கொடி கட்டிப் பறக்கின்றது.

மாற்று மத நண்பர்கள் கூட நம்மிடம் பேசும் போது, தான் இஸ்லாமியமார்க்கத்தை நேசிக்கும் ஓர் இனிய நேயர் என்பதை வெளிப்படுத்திக்காட்டுவதற்காக, "பாய்! நான் நாகூர் அனிபா பாடல்களை ரொம்பவும்விரும்பிக் கேட்பேன்'' என்று கூறுவர்.

இதன் மூலம் அவர்களது இஸ்லாமிய விசுவாசத்தை எண்ணி நாம்மகிழ்வோம் என்பதற்காக மாற்று மதத்தவர்கள் பலர் இவ்வாறு கூறுவதைநாம் கேட்டிருக்கிறோம். அந்த அளவுக்கு பக்திப் பாடல்களில் முன்னணிப்பாடகராக நாகூர்    ஹனீபா இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இரு பெருநாட்களில் ஈ.எம். ஹனிபா பாடல்கள்.

அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி, வானொலி அலை வரிசைகள் இருபெருநாட்களின் போது முஸ்லிம்களுக்காக ஈ.எம். ஹனீபாவின் பாடல்களைஒலி, ஒளி பரப்பி தங்களது மதச் சார்பின்மையை நிரூபித்து, இஸ்லாமியநேயர்களின் வரவேற்பையும் பெற்று விடுகின்றார்கள். மற்றவர்களேஇஸ்லாமியப் பாடல்களுக்கு இப்படி ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கும்போது, முஸ்லிம்கள் இந்த இஸ்லாமியப் பாடல்களில் தங்களதுமுத்திரையைப் பதிக்காமல், இசை முரசுவின் பாடலைக் கேட்டு தங்கள்ஈமானைப் புதுப்பிக்காமல் விடுவார்களா?

மார்க்கத்தில் மிக அழுத்தமான அளவுக்கு இஸ்லாமியப் பிடிப்புள்ள மக்கள்ரமளான் மாதத்தின் ஸஹர் நேரத்தில் பாங்கு, பயானுக்காக உள்ள ஒலிபெருக்கிகளில் இசை முரசின் பாடல்களை ஒலிபரப்பி முஸ்லிம்களைப்புல்லரிக்கச் செய்து விடுவார்கள்.

வெள்ளிக்கிழமையின் போது தங்கள் வீடுகளில் நாகூர் ஹனீபா பாடல்களைடேப் ரிக்கார்டர்களில் போட்டுக் கேட்டு, தங்கள் இஸ்லாமியப் பற்றுதலைவெளிக் காட்டும் முஸ்லிம்கள் ஏராளம் உள்ளனர்.

தங்கள் வீட்டில் நடக்கும் பெயர் சூட்டு விழா, கத்னா, பெண்குழந்தைகளுக்குக் காது குத்துதல், பூப்புனித நீராட்டு விழா மற்றும்கல்யாண வைபவங்களில் நாகூர் ஹனீபாவின் பாடல்களை அலற விட்டுதங்களது அபாரமான மார்க்க பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

ஹனிபா பாடல்கள் மீது அப்பாவி மக்கள் தான் பக்திகொண்டிருக்கின்றார்கள் என்றால்  ஆலிம் பெருந்தகைகளும் இதற்கு சற்றும்சளைத்தவர்கள் அல்ல. தமிழகம் மற்றும் இலங்கையின் பெரும் பெரும்மார்க்க மேதைகள் முதல் சாதாரண கடைநிலை ஆலிம்கள் வரைஉரையாற்றும் மேடைகளில் சொற்பொழிவு துவங்கும் முன் நாகூர்ஹனீபாவின் பாடல்களை ஒலி பெருக்கிகளில் அலற விட்டு ஆனந்தம்அடைகின்றனர்.

நாகூர் ஹனீபா வெறும் கேஸட் வடிவில் மட்டுமல்லாது தனது மேடைக்கச்சேரிகள் மூலமும் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கின்றார்.

தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம் என்று ஒரு பாடகர்பாடலில் தான் தர்ஹாக்களுக்குப் பயணம் செய்தார் என்றால், நாகூர்ஹனீபா தன் பாட்டுக் கச்சேரியுடன் நேரிலேயே அனைத்துதர்ஹாக்களுக்கும் பயணம் செய்திருக்கின்றார். தமிழகத்தில் அவரது பாதம்படாத, பாட்டுக் கச்சேரி நடக்காத எந்தவொரு பட்டி தொட்டியும் இல்லைஎன்ற அளவுக்கு தமிழகத்தின் தர்ஹா வரலாற்றில் பதிவாகியிருக்கின்றார்.

அந்தந்தப் பகுதிகளில் அடங்கியிருக்கும், பைசாவுக்குத் தேறாதஅவ்லியாக்கள் கூட இவரது பாடல் வரிகளுக்குள் நுழைந்து அதன் மூலம்பிரபலம் அடைந்திருக்கின்றார்கள் என்றால் இவரது பாட்டின் மகிமையைநாம் என்னவென்று சொல்வது?   இந்தப் பாடல்கள் மீது முஸ்லிம்கள்கொண்ட உண்மையான இஸ்லாமிய (?) ஈடுபாட்டை என்னவென்றுவர்ணிப்பது?

ஆலிம்கள் போதனையும், ஹனிபாவின் கீர்த்தனையும்.

தமிழகத்திலும், இலங்கையிலும் மீலாது விழாக்கள் நடைபெறும் போதுஅங்கு புகழ் பெற்ற ஆலிம் அறிஞர்களின் போதனை நடக்கும். அதன் பின்ஹனீபாவின் வெண்கலக் குரல் கீர்த்தனையும் இசை ஆராதனையும்நடைபெறும்.

மீலாது விழா ஏற்பாடு செய்த விழாக் குழுவினர், கச்சேரி தொடங்கும்மகிழ்ச்சியில், அது வரை அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றிஆவேசமாகப் புகழ்ந்து பேசிய ஆலிம் பெருமக்களுக்கு வழிச் செலவுக்குப்பணம் கொடுக்கக் கூட மறந்து விடுவார்கள். இதன் எதிரொலியாக கச்சேரிநடக்கும் மேடைகளில் நாங்கள் பயானுக்கு வர மாட்டோம் என்று   கூடஅறிஞர் பெருமக்கள் முடிவெடுத்தார்கள் என்றால் இன்னிசை முரசின்ஆதிக்கம் எந்த அளவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஊடுறுவி இருக்கின்றதுஎன்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த அளவுக்குப் பாமர முஸ்லிம்களுக்கு மத்தியில் தனது பாடல்களால்ஊடுறுவி இருக்கும் இவரது பாடல்கள் தமிழகத்து முஸ்லிம்களுக்குமத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றால் மிகையல்ல!

தவ்ஹீதுவாதிகளின் இதயத்தில் இவருக்குக் கடுகளவு கூட இடமில்லைஎன்றாலும், இஸ்லாமிய பக்திப் பாடல்கள் என்ற பெயரில் தன் வீட்டில்இவரது பாடல் பதிவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பாமரன்தனது ஈமானைப் பறி கொடுத்து விடாமல் பாதுகாப்பது ஒவ்வொருஏகத்துவவாதியின் கடமை என்பதற்காகவும், நபி (ஸல்) அவர்கள் மீது யார்பொய்யைப் பரப்பினாலும், அந்தப் பொய்யை, அந்தப் பொய் முகத்தினரைஅடையாளம் காட்டுவது நமக்குக் கடமை என்றஅடிப்படையில் நமது ஆய்வுப் பார்வையை இங்கு படர விடுகின்றோம்.

காசுக்காக கடவுளைத் திட்டும் கவிஞர்கள்.

பொதுவாகக் கவிஞர்கள் காசுக்காக யாரையும் கடவுளாக்கத் தயங்கமாட்டார்கள். அந்தக் காசுக்காக கடவுளைத் திட்டவும் பயப்பட மாட்டார்கள்.அவர்களுக்குக் கடவுளே காசு தான்.

அவனை அழைத்து வந்து ஆடடா ஆடு என்று ஆட விட்டுப்பார்த்திருப்பேன், வருவான், படுவான், பட்டதே போதும் என்பான். பாவிஅவன் பெண் குலத்தைப் படைக்காமல் இருந்திடுவான் என்று இந்தக்கவிஞன் கடவுளைப் பாவியாகச் சித்தரிக்கின்றான்.

கண்ணைப் படைத்து, பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்றுஇறைவனைக் கொடியவனாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றான்.இதெல்லாம் கவிஞர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. இதில் வேடிக்கைஎன்னவென்றால் இந்தக் கவிஞர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கையில்ஊறிப் போன பக்தர்கள் என்பது தான். இந்த ரகத்தில் உள்ளவர் தான் நாகூர்ஹனீபா.

இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லைஎன்று ஒரு தட்டில் ஏகத்துவத்தை முழங்குவார். மறு தட்டில், அடியார்க்குஅருள் செய்யும் அம்மா, அழகான கடலோரம் வாழ்கின்ற பீமா என்றுஏகத்துவத்திற்கு வேட்டு வைப்பார்.

ஏகத்துவத்தை நிலைநாட்டும் கருத்துக்களை விட அதற்கு வேட்டுவைக்கும் கருத்துக்களைக் கொண்ட பாடல்களே அதிகம்.

நமனை விரட்ட மருந்தொன்று இருக்கின்றது நாகூர் தர்ஹாவிலே!

ஷாஹே மீரான் சஞ்சலம் தீர்க்கும் எங்கள் கஞ்ச ஷவாயே!

நீ எங்கே எங்கே ஷாகுல் மீரானே! உன் வாசல் தேடி வந்தேன் நாகூர்மீரானே!

என்று விஷம் கக்கும் வரிகளைக் கொண்ட இவருடைய பாடல்களைஅடுக்கிக் கொண்டே போகலாம்.

நபி (ஸல்) அவர்களையும், முஹய்யித்தீன், ஷாகுல் ஹமீது ஆகியோரைஒரு பக்கத்திலும், அண்ணா, கருணாநிதியை இன்னொரு பக்கத்திலும்கடவுளைப் போன்று சித்தரித்து மகிழ்வதுடன் மட்டும் நின்று விடாமல் நபி(ஸல்) அவர்கள் மீது பொய்யான செய்திகளை இட்டுக் கட்டி, தனதுபாடல்களில் பாடியிருக்கின்றார்.

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன் நோன்பு நோற்று, இறந்துவிட்டான். அவனை ஒரு சாது வந்து உயிர்ப்பித்தார் என்று ஒரு பாடலில்பாடினார்.

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை என்று ஏதோ ஒரு சம்பவத்தைத்தனது பாடலில் கூறினார்.

இவையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்படாத செய்திகள் என்பதால்அவற்றை நாம் ஆராயத் தேவையில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்களைப்பற்றிய பொய்யான செய்திகளைத் தனது பாடல்களில் பாடுவதை நாம்அடையாளம் காட்டாமல் இருக்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் தினந்தோறும் ஒரு வீட்டு வழியாக சென்றுகொண்டிருந்தார்களாம். அவர்கள் அவ்வாறு செல்லும் போது அந்தவீட்டில் உள்ள மூதாட்டி நபி (ஸல்) அவர்கள் மீது குப்பையைக்கொட்டிக் கொண்டிருந்தாளாம். ஒரு நாள் குப்பையைக்கொட்டவில்லை. உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த மூதாட்டிக்குஎன்ன ஆனது? என்று விசாரிக்கின்றார்கள். அவள்நோயுற்றிருக்கின்றாள் என்று தெரிய வருகின்றது. உடனே நபி (ஸல்)அவர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டுக்குச் சென்று அவளை நோய்விசாரிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்தப் பெருந்தன்மையைக் கண்டு வியந்து, இப்படிப்பட்ட நல்ல பண்பாளர் மீதாநாம் குப்பையைக் கொட்டினோம் என்று வருந்தி இஸ்லாத்தில்இணைகின்றாள்.

இசை முரசு ஈ.எம். ஹனீபா இதயத்தை ஈர்த்து, இரக்கமுறச் செய்யும்வண்ணம் தன் பாட்டில் வடித்த சம்பவம் இது தான். சொல்வதற்குச்சுவையாகவும், கேட்பதற்கு ரசனையாகவும் உள்ள இந்தச் செய்திமுஸ்லிம்களிடம் மட்டுமல்ல! மாற்று மத நண்பர்களும் இதை மேற்கோள்காட்டும் அளவுக்கு அந்தப் பாட்டில் இடம் பெற்றுள்ள இந்தக் கருத்துபரவியுள்ளது. இதை நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் நிகழ்ந்த ஒருசிறப்பு நிகழ்வு என்று கருதி முஸ்லிம்கள் நடத்தும் விழாக்களில் வந்துசொற்பொழிவாற்றும் போது குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இப்படியொரு சம்பவம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில்நடந்ததாக எந்தவொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூலிலும் இடம்பெறவில்லை. எனவே இது நபி (ஸல்) அவர்கள் மீது சொல்லப்படும்அப்பட்டமான பொய்யாகும்.

ஒரு நாள் மதீனா நகர்தனிலே... என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப்பாடலின் கருத்து இது தான்.

ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன்அமர்ந்திருக்கும் போது, இறுதி நாள் வரப் போகின்றது? அதனால்அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள். என் மீது ஏதும் குறைஇருந்தாலும் அதைச் சொல்லுங்கள். அதை நான் நீக்கிக் கொள்கிறேன்என்று கூறினார்கள். அப்போது உக்காஷா என்ற நபித் தோழர் எழுந்து,தங்கள் மீது எனக்கு ஒரு குறை உள்ளது என்று கூறினார். உடனே நபித்தோழர்கள் அவர் மீது ஆவேசப் பட்டனர். நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களை அமைதிப் படுத்தி விட்டு, அந்தக் குறையைச் சொல்லுங்கள்என்று உக்காஷாவிடம் கூறுகின்றார்கள்.

பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது தாங்கள் அமர்ந்திருக்கும் போது, நான்ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தேன். நீங்கள்சாட்டையால் ஒட்டகத்தை அடிக்கும் போது சட்டென்று ஓர் அடி என் மீதுவிழுந்து விட்டது. அதற்குப் பதிலாக தங்களை நான் அடித்திட அனுமதிவேண்டும் என்று உக்காஷா கூறினார். எதிலும் நீதி தவறாத நபி (ஸல்)அவர்கள் அவரது கோரிக்கையை ஏற்றார்கள். அப்போது உக்காஷா, என்னைஅடித்த சாட்டை இங்கு இல்லை. அது தங்களின் வீட்டில் உள்ளது. எனதுஎண்ணம் நிறைவேற அதை எடுத்து வரச் சொல்லுங்கள் என்று கூறினார்.உடனே நபி (ஸல்) அவர்கள், பிலாலை அனுப்பி அதை எடுத்து வருமாறுகூறினார்கள்.

பிலால் (ரலி) அழுது கொண்டே நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்குச் சென்றுஅங்கிருந்த ஃபாத்திமா (ரலி)யிடம் சபையில் நடந்ததைக் கூறினார்கள்.உடனே ஃபாத்திமா (ரலி) அழுது, உடல் நலம் சரியில்லாத என் தந்தையார்இந்தத் தண்டனையை எப்படித் தாங்குவார்கள்? அதற்குப் பதிலாக எங்களைஅடிக்கச் சொல்லுங்கள் என்றார். பெருமை நிறைந்த பாட்டனாருக்குப்பதிலாக எங்களை அடிக்கட்டும் என்று ஹஸனும், ஹுசைனும் கூறி விட்டுசாட்டையை எடுத்துக் கொண்டு சபைக்கு வந்தார்கள். சாட்டையை வாங்கிநபி (ஸல்) அவர்கள் உக்காஷாவிடம் கொடுத்தார்கள். அதை வாங்கியஉக்காஷா, என்னை நீங்கள் அடிக்கும் போது நான் சட்டையில்லாமல்இருந்தேன். எனவே நீங்களும் சட்டையைக் கழற்றுங்கள் என்று கூறினார்.அப்போதும் நபித்தோழர்கள் ஆவேசப்பட்டனர். நபி (ஸல்) அவர்கள்அமைதிப்படுத்தி விட்டு, தமது சட்டையைக் கழற்றினார்கள். அப்போதுஉக்காஷா சாட்டையைத் தூக்கி எறிந்து விட்டு ஓடி வந்து, ஆவலுடன் நபி(ஸல்) அவர்களைத் தாவி அணைத்துக் கொண்டார். நுபுவ்வத் ஒளிரும் நபி(ஸல்) அவர்களின் முதுகில் தான் நினைத்தது போல் முத்தமிட்டார்.உணர்ச்சி பொங்க மீண்டும் முத்தமிட்டார். நபி (ஸல்) அவர்கள்,உக்காஷாவின் மனம் மகிழ, உமக்கு சொர்க்கம் உண்டு என்று கூறி துஆச்செய்தார்கள். சுற்றி நின்ற நபித் தோழர்கள் வாழ்த்து தெரிவிக்க, மஸ்ஜிதுந்நபவீ மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

இவ்வாறாக ஒரு நீண்ட சம்பவத்தைத் தன்னுடைய கம்பீரமான குரலில்ஏற்ற, இறக்கத்துடன் நாகூர் ஹனீபா பாடுவதைக் கேட்கும் யாரும் அதில்லயித்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்ததாகச்சொல்லப்படும் அந்த நிகழ்ச்சியை எண்ணி, புல்லரித்து விடுவார்கள். இந்தச்சம்பவம் உண்மையானதா என்பதைப் பார்ப்போம்.

ஏறக்குறைய இது போன்ற ஒரு செய்தி தப்ரானியின் முஃஜமுல் கபீர்என்ற நூலில் 2676வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் இது பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் முன்இம் பின் இத்ரீஸ் பின்ஸினான் என்பவரைப் பொய்யர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள்விமர்சித்துள்ளார்கள்.

பொய்யர், ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடியவர் என்று மஜ்மஉஸ்ஸவாயிதில் ஹைஸமீ கூறுகின்றார்.

வஹப் என்பவர் மீது இவர் பொய் சொல்பவர் என்று அஹ்மத் இப்னுஹம்பல் கூறுகின்றார். இப்னுல் மதீனி, அபூதாவூத், நஸயீ ஆகியோர் இவர்நம்பகமானவர் இல்லை என்று கூறுகின்றார்கள். இவர் ஹதீஸ்களில்மோசமானவர் என்று இமாம் புகாரி கூறுகின்றார். இவரை ஆதாரம்கொள்வது ஹலால் இல்லை என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்.இவரும் இவரது தந்தையும் விடப்பட்டவர்கள் என்று தாரகுத்னீகூறுகின்றார். (நூல்: இப்னுல் ஜவ்ஸீயின் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)

எனவே இந்தச் செய்தி பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும்.இந்தச் செய்தியின் அடிப்படையில் இயற்றப்பட்ட நாகூர் ஹனீபா பாடலும்நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்ட ஒரு செய்தியைஅடிப்படையாகக் கொண்ட பாடல் என்பதில் சந்தேகமில்லை.

எந்தத் தலைவர் மீதும் யாரும் எந்தச் சம்பவத்தையும் சொல்லி விட்டுப்போகலாம். அதைச் சொல்பவருக்கு அதனால் பெரிய அளவுக்குப் பாதிப்புவந்து விடாது. ஆனால் அதே சமயம் நபி (ஸல்) அவர்கள் மீது, அவர்கள்சொல்லாததை, செய்யாததை, அங்கீகரிக்காததைச் சொன்னால் அவர் போய்சேருமிடம் நரகம் ஆகும். இதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

"என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய்சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய்சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான்செவியுற்றேன்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் சொல்லாததைச்சொன்னதாகச் சொல்பவருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும்.

இந்த எச்சரிக்கையைத் தாங்கி நிற்கும் அறிவிப்புத் தொடர்கள் கிட்டத்தட்ட72 வழிகளில் இடம்பெறுகின்றன. இந்த அடிப்படையில் இந்தச் செய்திமுதவாத்திர் என்ற தகுதியைப் பெற்று விடுகின்றது. முதவாதிர் என்றால்ஏராளமானவர்களால் ஒருமித்து அறிவிக்கப்படும் ஹதீஸ்களாகும்.

கேட்பதற்கு இனிய சம்பவமாக இருந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள்மீது இட்டுக் கட்டி கூறினால் அவ்வாறு கூறுபவர் செல்லுமிடம் நரகம்தான். அந்த அடிப்படையில் நாகூர் ஹனீபா தன்னுடைய பாடலுக்குச்சரியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது தான் பாடிய அந்தப்பாடல் தவறானது என்று பகிரங்கமாக பிரகடனப் படுத்த வேண்டும்.

அவ்வாறு அவர் செய்ய முன் வரவில்லை என்றால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் எச்சரிக்கைப் படி நரகத்தில் ஓர் இடத்தை முன் பதிவுசெய்து கொள்கின்றார் என்றே அர்த்தம்.

இந்த நாகூர் ஹனீபா மற்றும் இது போன்ற இஸ்லாமிய (?) பாடகர்களால்பாடப்படும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாடல்களையும், நபி (ஸல்)அவர்கள் மீது பொய்யுரைக்கும் பாடல்களையும் இஸ்லாத்தின் ஓர்அங்கமாக எண்ணி, கேட்டு ரசித்துக் கொண்டிருப்பவர்கள் இனியாவதுதிருந்த வேண்டும்.