Friday 28 October 2011

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)



அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது
தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)
அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன?

தனிமை!

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு!

அரசாங்கம் எதிர்ப்பு! ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.

இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்! இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன்29:26)

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள்.பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.
குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)
இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்! இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள்.

அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும் ஆக்கினான்.
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4:125)
இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து,அவர்களை – அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான். இதனால்
தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.
“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!”என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)
நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.
“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) (அல்குர்ஆன் 60:4)
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.
அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)
இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான். ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர். முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு –
நேர்வழிக்கு வந்து விடலாம் என்ற வாதம் தான். தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்துவிட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப்பின்பற்றுகிறான்.

அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன் 18:28)

மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் இஸ்லாத்திற்கு வந்து எப்படியேனும்
இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான். இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு,முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். “நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.
ஆதாரம் : திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா – 4848
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல்குர்ஆன் 80:1-ரி10)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது,அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை. இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான். அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.

அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.
அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 60:8,9)
இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை.ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விடமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-TNTJ

சவுதியில் இருப்பவர் ஊரில் கொடுக்கும் குர்பானியின் சட்டம் என்ன?


கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும்.நான் சவூதியில் இருக்கிறேன்.ஊரில் குர்பானி கொடுக்கிறேன்.கடைசி பத்து நாள் இங்கு நான் நகம்,முடி வெட்டாமல் இருக்க வேண்டுமா. நன்றி

kader mohideen - saudi Arabia

பதில் : குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.
"நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)
குர்பானி கொடுப்பவர் எங்கிருந்தாலும் சரி, எங்கு குர்பானியைக் கொடுத்தாலும் சரி குர்பானி கொடுப்பதற்குத் தீர்மானித்தவர் துல்ஹஜ் பிறை ஒன்றில் இருந்து குர்பானியைக் கொடுக்கும் வரை நகம், முடி போன்றவற்றை களையக் கூடாது.
கொடுப்பவர் எங்கிருந்தாலும் இதைத் தான் சட்டமாக இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.

நீங்கள் ஸவுதியில் இருந்தாலும் குர்பானி கொடுப்பதற்கு நீங்கள் தீர்மானித்தால் இதுதான் உங்களுக்குறிய சட்டமாகும்.

(நிர்பந்தத்திற்கு உள்ளானவர்களுக்கு மாத்திரம் இஸ்லாம் விதிவிலக்கு தருகின்றது.)

இன்று துல் ஹஜ் முதல் நாள் – தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டது.


தமிழகத்தில் திருவண்ணாமலை, சென்னை,திருவள்ளுர்,ராமநாதபுரம்,நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (28-10-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் பிறை 1 ஆரம்பமாகின்றது. இதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-தலைமையகம்

வந்தவாசி நகரத்தில் கல்வி உதவி

17 - 10 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி நகரத்தில் தவ்ஹீத் மர்கசில் கிளை தலைவர் புகாரி தலைமையிலும் ,கிளை மாணவர் அணி அசிம் அவர்கள் தலைமையிலும் கல்வி உதவிக்காக ருபாய் 3,500 செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

மருத்துவ உதவி 14,000

19 - 10 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில்  மாநிலத்தின் சார்பாக மருத்துவ உதவி 14,000 செய்யப்பட்டது இதை மாவட்ட தலைவர் வழங்கினார் அல்ஹம்துலில்லாஹ் 

Wednesday 26 October 2011

ராதாபுரம் கிளையில் பெண்கள் பயான்


20 - 10 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் இஸ்லாம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் பாத்திமா அவர்கள் உரையாற்றினார்கள் இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

Sunday 23 October 2011

மாபெரும் பொதுக்கூட்டம்




23 - 10 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் அண்ணா நகர் கிளையின் மாலை 6.30 to இரவு 10.30 மணிவரை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அண்ணா நகர் கிளையின் தலைமையின்  சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் "இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட அனச்சரங்கள்" என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் அப்துல் ரஹாமன் பிர்தொசி அவர்களும் "முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை" என்ற தலைப்பில் சிவகாசி மாவட்ட பேச்சாளர் சுல்தான் இப்ராகிம் அவர்களும் சிறப்புரை யாற்றினார் இந்நிகழ்ச்சியில் பலர்கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்  

Saturday 22 October 2011


தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.
பாத்திமா ஷஹானா (கொழும்பு)
இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512

இஸ்லாத்தின் பார்வையில் தாடி. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. 

அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.

வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)

ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வன்னம் படைத்திருப்பான். 

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. 

விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 - 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார். 

1.முழு தாடியுடன்

2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்  

3. மீசையுடன்

4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)

ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது. Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும். 

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். 

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes  என்பவரின் கருத்து.

இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது. 

நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”. 

முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?

அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும். 

மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர். 

மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம் வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி 5899

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.  

ஆதாரம்: புஹாரி 5923

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது.  அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக! 

Friday 21 October 2011

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் தேவகோட்டை – 20-10-2011 இமயம் டிவி வீடியோ

இஸ்லாம் ஒரு அறிமுகம் !

04 - 10 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் சின்ன பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லப்பட்டது அப்பொழுது ஒரு சிறுவனின் கழுத்தில் உள்ள தாயத்தை கழுற்றி வீசப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

அண்ணா நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் !

16-10-2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் அண்ணா நகர் கிளையின் சார்பாக இஸ்லாம் கூறும் ஒற்றுமை என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் மாவட்ட தை s . ஷஹீன் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ் 

Wednesday 19 October 2011

சென்ற வார கேள்வி

சென்ற வார கேள்வி :   பெருநாள் தொழுகைக்கு முன்பே தவறுதலாக குர்பானி கொடுத்துவிட்ட நபிதோழர் யார்? அதற்கு பரிகாரமாக (விதிவிலக்கு) நபி (ஸல்) என்ன கூறினார்கள்?
பதில் : '1)அபூபுர்தா இப்னு நியார்(ரலி)
2)நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்க வேண்டும். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கி றாரோ அவர் தமது குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது என்று சொன்னார்கள்.

அப்போது அபூபுர்தா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?) என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், முதலில் அறுத்ததற்கு பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது' அல்லது நிறைவேறாது' என்று பதிலளித்தார்கள்.

பராஉ (ரலி)
அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் புஹாரி (5560)முஸ்லிம்
 

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?


துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.

2373أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ رواه النسائي
ஆஷூராவுடைய நோன்பு (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஃபஜர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை.

அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
நூல் : நஸாயீ (2373)
மேலும் இந்தச் செய்தி இப்னு ஹிப்பான், முஸ்னது அஹ்மது, தப்ரானீ ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து இவ்வாறு நோன்பு வைக்கின்றனர். இது பலவீனமான செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவருடைய நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்தக் குறிப்பிட்ட செய்தி பலவீனம் என்றாலும் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு வேறு ஆதாரப்பூர்வமான செய்தி ஆதாரமாக உள்ளது.

மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களை விட குறிப்பாக துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (969)
இந்தச் செய்தி நோன்பை மட்டும் கூறாமல் பொதுவாக நோன்பு உட்பட அனைத்து நல்லறங்களையும் குறிக்கின்றது. இந்த நாட்களில் தொழுகை திக்ரு தர்மம் செய்தல் போன்ற எந்த நல்லறங்களைச் செய்தாலும் அதற்கு தனிச்சிறப்பு உண்டு.

எனவே இந்த பொதுவான ஆதாரத்தின் அடிப்டையில் இந்த நாட்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அதைத் தவறு என்று கூற முடியாது.

இந்த நாட்களில் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று நான் பார்த்ததே இல்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இதற்கு எதிரானது அல்ல.

2012حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்று ஒரு போதும் நான் கண்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2186)
இதில் கூறப்படும் பத்து நாட்கள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களையே குறிக்கும். பத்தாவது நாள் பெருநாள் என்பதால் அன்று நோன்பு நோற்பது கூடாது.

இந்த ஒன்பது நாட்கள் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு இவ்வாறு நோன்பு நோற்பது கூடாது என்று சொல்ல முடியாது.

ஒரு அமலுக்கு நபிகளாரின் சொல் ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் அந்த வணக்கத்தை நபிகளார் செய்ததாக எந்தச் செய்தியும் இல்லை. இந்நிலையில் நபிகளாரின் செயல் இல்லாவிட்டாலும் சொல் இருப்பதால் அந்த அமல் நபிவழியாக கருதப்படும்.

உதாரணமாக அரஃபா நாளில் நோன்பு நோற்பதற்கு நபிகளாரின் சொல்லில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்பு நோற்றதாக எந்தச் செய்தியும் இல்லை. இப்போது இந்த நோன்புக்கு நபியின் செயல் ஆதாரமாகக் கிடைக்காவிட்டாலும் சொல் கிடைத்திருப்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெறுகின்றது.

துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பதையும் இதே அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அமலைச் செய்யவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அவர்கள் செய்யாவிட்டாலும் நாம் செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இந்த நாட்களில் நோன்பு நோற்பது கூடாது என்ற கருத்தைத் தராது. ஏனென்றால் இந்த நாட்களில் நோன்பு உட்பட நல்லறங்களை அதிகமாகச் செய்வது கட்டாயம் அல்ல. இவற்றைச் செய்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். செய்யாமல் விட்டுவிட்டால் குற்றமில்லை. இந்த அனுமதியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாமல் விட்டிருக்கலாம்.

இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.


இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.
பாத்திமா ஷஹானா (கொழும்பு)

இரு கடல்கள் சங்கமிக்கும் போது இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஓன்றையொன்று கடக்காது.  (அல்குர்ஆன் 55: 19,20)

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும்தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும்,கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (அல்குர்ஆன் 25: 53)

அல்குர்ஆனின் கூற்றுப்படி நவீன விஞ்ஞானமும் இரு கடல்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையும்தடுப்பும் இருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரு கடல் நீரினதும் வெப்பநிலைஉப்பின் தன்மைஅடர்த்தி ஆகியன வேறுபடுகின்றன. உதாரணமாக,  Mediterranean seaAtlantic ocean ஆகியவற்றின் நீரில் Mediterranean sea யினது நீரின் வெப்பம்உப்பின் தன்மைஅடர்த்தி Atlantic ocean னினது நீருடன் ஒப்பிடும்போது குறைவாககே உள்ளது.

கீழுள்ள படத்தில் இவ்விரு கடல்நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்காததை விஞ்ஞான ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.



அத்துடன் இவ்விரு கடல்களில் பாரிய அலைகள்உறுதியான திரவ வாயு ஓட்டம்கடலின் ஏற்றமும்வற்றுதலும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.

நவீன விஞ்ஞான ஆய்வுகளின் படி மதுரமான நீர்உப்பு நீர் ஆகியன சந்திக்கும் இடமான முகத்துவாரம் ஆனது இரு கடல்கள் சந்திக்கும் பகுதியைவிட வித்தியாசமானது. நவீன கண்டுபிடிப்புகளின் படி மதுரமான நீரிலிருந்து உப்பு நீரை அடர்த்தியின் காரணமாக வேறுபடுத்திக் காட்டும் வெவ்வேறான இரு அடுக்குகள் அடையாளம் காணப்படுகின்றன.

கீழுள்ள படத்தில் இவ்வடுக்குகளை தெளிவாக அவதானிக்கலாம்.
இந்தத் தகவல் சமீபத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கருவிகளின் மூலமே இவற்றின் வெவ்வேறான வெப்பநிலைஉப்பின் தன்மைஅடர்த்தி,ஆக்சிஜன் (oxygen) ஓட்டம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. வெற்றுக் கண்களுக்கு இவ்விரு வித்தியாசமான கடல்கள் தென்படாதது போலவே வெவ்வேறு தன்மையுள்ள மதுரமானகசப்பானஉவர்ப்பான நீரினதும் அடுக்குகள் வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை.

ஆழ்கடல் இருள்.

அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஓன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.(அல்குர்ஆன் 24: 40)

கடலின் மிக ஆழத்தில் எந்தவித வெளிச்சமும் இல்லாத இருளாகக் காணப்படுவதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காரணம் சமுத்திரங்களில்  கடல் மட்டத்திலிருந்து  சில100மீ தொடக்கம் 11034மீ ஆழத்திற்குள் சூரிய ஒளி ஊடுருவுவதில்லை. கிட்டத்தட்ட சமுத்திரங்களும்கடல்களும் கடல் மட்டத்திலிருந்து 200மீ அல்லது அதற்கு குறைவான ஆழத்திலேயே இருளாகக் காணப்படும். இந்த ஆழத்தில் அநேகமாக இருளாகக் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1000மீ ஆழத்திற்குக் கீழே எந்தவொரு ஒளியும் இல்லை. 100மீ ஆழத்திலேயே சூரியக் கதிர்கள் நீரால் உறிஞ்சப்படுகின்றன. இந்தப் பகுதியானது கடலின்  luminous பகுதி என அழைக்கப்படுகின்றது. இதனால் 1% ஆன சூரியக் கதிர்கள் 150மீ பகுதியிலும்0.01% ஆன சூரியக் கதிர்கள் 200மீ பகுதியிலும் தென்படுகின்றன.

எனவேஆழ்கடல் இருள்களால் சூழ்ந்தது என 1400 வருடங்களிற்கு முன்னே அல்குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டு விட்டது.

ஆழ்கடல் அலைகள்.

ஆழ்கடலில் வித்தியாசமான அடர்த்தியுள்ள நீர் ஒன்றுடன் ஒன்று தடுக்கப்படுவதால் ஆழ்கடல் அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. 

ஆழ்கடலின் நீரின் அடர்த்தி அதற்கு மேலுள்ள நீரின் அடர்த்தியிலும் பார்க்க கூடுதலாகும். சமுத்திரங்களின் அல்லது கடலின் மேற்பகுதியிலுள்ள கடலலைகளைப் போன்றதே ஆழ்கடல் அலைகளும். ஆழ்கடல் அலைகள் மனித வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால்,ஆழ்கடலின் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் நீரின் வெப்பநிலை,உப்பின் தன்மை ஆகியவற்றின் மாறுதல்களை ஆராய்வதன் மூலம் கண்டறியலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை பாலைவனப் பிரதேசத்தில் சமுத்திரங்களுக்கெல்லாம் தொலைவில் அமைந்திருந்தது. அவர்கள் சமுத்திரங்களுக்கிடையே எந்த பயணங்களும் மேற்கொண்டதும் இல்லை. சமுத்திரங்களைப் பற்றிய இத்தகவல்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கு எந்தவித வழியும் இருந்திருக்கவில்லை.  

எனவே, 1400 வருடங்களுக்கு முன் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றாக குர்ஆன் இருப்பதற்கு எந்த வகையிலும் சாத்தியமில்லை. குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ்வின் கூற்றேயாகும்.

Sunday 16 October 2011

முக்கிய அறிவிப்பு


poyyantj.blogspot.com இணையதளத்தில் தரக்குறைவான விமர்சனங்களும், சொற்களும் பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் சார்பிலும் சென்னை சேப்பாக்கம் கிளை சார்பிலும் இன்னும் பல தரப்பில் இருந்தும் நம்முடைய ஜமாஅத் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த இணயதளம் நம்முடைய ஜமாஅத் சார்பிலோ ஜமாஅத் நிர்வாகிகள் சார்பிலோ நடத்தப்படவில்லை. நம்முடைய மாநில நிர்வாகத்தின் மேற்பார்வையில் 1- onlinepj.com, 2- tntj.net, 3- jesusinvites.com, 4-thowheedvideo.com ஆகிய நான்கு தளங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. தரக்குரைவான விமரசனங்களில் நமக்கு உடன்பாடு இல்லை என்பதையும், இது குறித்த நமது மறுப்பையும் poyyantj.blogspot.com க்கு மின்னஞ்சல் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.