தவ்ஹீத்வாதிகள் கொலை செய்தார்களா? திசை திருப்பப்படும் கெக்கிராவைச் சம்பவம்.
“சந்திரனைப் பார்த்து நாய் குரைத்த” கதையாகிய தப்லீக் ஜமாத்தினர்.
RASMIN M.I.Sc
இலங்கை முஸ்லீம்கள் வரலாற்றில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஏகத்துவப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரக் கலத்தில் எத்தனையோ பிரச்சினைகள், சண்டைகள், சிக்கள்கள் எல்லாம் ஏற்பட்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் இந்தப் பிரச்சினைகளில் ஒரு இடத்தில் கூட ஏகத்துவவாதிகள் அடித்தார்கள், கொலை செய்தார்கள் என்று யாராலும் நிரூபிக்க முடியாது.
தவ்ஹீத் வாதிகள் அடிவாங்கிய வரலாறு உண்டு, ஊர் நீக்கம் செய்யப்பட்ட வரலாறு உண்டு, ஏன் கொலை செய்யப்பட்ட வரலாறுகள் கூட உள்ளது. ஒரு இடத்தில் கூட அடித்தார்கள் வெட்டினார்கள் என்ற வரலாறு கிடையாது.
ஆனால் கடந்த வியாழக் கிழமை நடந்த ஒரு சம்பவத்தில் தவ்ஹீத் வாதிகளை கொலை காரர்களாக காட்டுவதற்க்கு முனைகிறது ஒரு கும்பல்.
கெக்கிராவையில் நடந்தது என்ன?
அனுராதபுர மாவட்டம், கெக்கிராவைத் தேர்தல் தொகுதிக்குற்பட்ட ஹோராப்பொல என்ற இடத்தில் கடந்த 28.07.2011 அன்று மாலை தப்லீக் ஜமாத்தின் ஆதரவாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
ஹோராப்பொலையைப் பொருத்தவரையில் ஏகத்துவப் பிரச்சாரம் மிக வேகமாக முன்னெடுக்கப்படும் ஒரு ஊராகும். அந்த ஊரின் தப்லீக் பள்ளிவாயல் முழுவதுமாக தவ்ஹீத் கொள்கையின் கீழ் வந்த வரலாற்று நிகழ்வும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்தது.
இரு குடும்பத்தினருக்கு மத்தியில் இருந்த தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நடந்த பிரச்சினையை ஏகத்துவவாதிகளின் பக்கம் திருப்ப முயன்றார்கள் தப்லீக் ஜமாத்தினர்.
இரு குடும்பத்தினருக்கும் மத்தியில் இருந்த பிரச்சினையில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினை தற்போது போலிஸ் மட்டத்தில் விசாரனை செய்யப்பட்டு வருகிறது.
போலிஸ் மட்டத்திலும் இது வரைக்கும் கொலை செய்தவர்கள் யார் என்று நிரூபிக்கப்படவில்லை. அப்படியிருந்தும் தவ்ஹீத் மீது கொண்ட வெருப்பும் தப்லீக் மீது கொண்ட பக்தியும் தவ்ஹீத் வாதிகள் தான் கொலை செய்தார்கள் என்ற ஒரு வதந்தியை மக்கள் மத்தியில் பரப்பும் அளவுக்கு தப்லீக் ஜமாத்தினரைத் தள்ளியுள்ளது.
கொள்கையின் மேல் கொண்ட வெறுப்பு ஒரு இஸ்லாமியனை கொலைகாரன் என்று வாய் கூசாமல் பொய் சொல்ல வைத்துள்ளது.
அபூஜஹ்லின் வாரிசுகள்.
அபூஜஹ்லின் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு கெக்கிராவையில் நடந்த சம்பவத்தில் தப்லீக் வாதிகள் நடந்து கொள்ளும் முறைகள் ஒரு எடுத்துக்காட்டாகும்.
இது வரை காலமும் தவ்ஹீதை எதிர்ப்பதற்கு துப்பில்லாத இவர்கள் குடும்பப் பிரச்சினையை கொள்கைப் பிரச்சினையாக மாற்ற நினைப்பதில் இருந்தே இவர்கள் கொள்கையின் லச்சனம் வெளிப்படவில்லையா?
இப்படி எத்தனையோ பேர்களை தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 50ஆண்டுகளாகப் இலங்கையில் பார்த்து விட்டது. இந்த அடக்குமுறைகளுக்கு எல்லாம் இந்த தவ்ஹீத் வாதிகள் அடங்கமாட்டார்கள, அடிபணியமாட்டார்கள்.
இவர்கள் எத்தனை பேர்களை வேண்டுமானாலும் இது போன்ற வதந்திகளை பரப்புவதற்கு துணைக்கு அழைத்துக் கொள்ளட்டும். அல்லாஹ்வின் படையான ஸபானிய்யாக்களுடன் மோதுவதற்கு இவர்கள் தயாராவது எங்களது ஈமானைத் தான் மேலும் அதிகரிக்கும் என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறோம்.
"மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 3:173)
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், கொலையை விடக் கொடிய பாவம் என்று சொல்லும் இந்த பயங்கரவாதச் செயல்கள் இவர்களிடம் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத் தான்.
அல்லாஹ்வின் பார்வையில் இவர்களும் பயங்கரவாதிகள் தான்.
தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் பள்ளியில் தடுக்கப்படும் போது அடிதடி தாக்குதலில் கூட ஈடுபடுவதில்லை. இந்தக் கொள்கைச் சகோதரர்களின் பார்வையில் அடிதடியே பெரும் பாவமாகத் தெரியும் போது கொலை செய்வதைப் பற்றி கற்பனை செய்து பார்க்க முடியுமா?
நபி ஸாலிஹுக்கு எதிரான சமூதின் சதி.
அல்லாஹ்வை வணங்குங்கள்! என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.
"என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? நீங்கள் அருள் செய்யப்பட அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட மாட்டீர்களா?'' என்று அவர் கூறினார்.
உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 27:45-47)
ஸாலிஹ் நபியின் பிரச்சாரத்திற்கு எதிராக ஒன்பது சதிகாரக் கூட்டத்தினர் ஒன்று கூடினர், ஓரணியில் சேர்ந்தனர். ஸாலிஹைத் தீர்த்துக் கட்டுவதாக சபதம் எடுத்து சத்தியம் செய்தனர். தடயம் இல்லாத அளவுக்கு அவரை ஒழித்துக் கட்ட முடிவு செய்கின்றனர்.
அந்நகரத்தில் ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில் சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்துவோராக இல்லை. (அல்குர்ஆன் 27:48)
ஆனால் அவர்களின் சதியை அல்லாஹ் முறியடித்து விடுகின்றான்.
"அவரையும், அவரது குடும்பத்தாரையும் இரவில் அழித்து விடுவோம். பின்னர் "அவரது குடும்பத்தினர் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை;நாங்கள் உண்மையே கூறுகிறோம்' என்று அவரது உறவினரிடம் தெரிவித்து விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கூறினர்.
அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம். அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக! அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர் அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம். அவர்கள் அநீதி இழைத்ததால் இதோ அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன! அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது. நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றினோம். (அல்குர்ஆன் 27:49-53)
இறுதியில் ஸாலிஹ் நபியும் அவரைப் பின்பற்றியவர்களும் தான் வென்றனர்.
எரியும் நெருப்பில் இப்ராஹீம் (அலை) அவர்கள்.
ஏகத்துவத்தின் ஈடு இணையற்ற தலைவர் இப்ராஹீம் நபி (அலை)அவர்கள். அந்த இறைத்தூதர் இப்ராஹீமின் புரட்சிமிகு பகுத்தறிப் பிரச்சாரம் பிரபலமானது. அந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குப் பரிசாகக் கிடைத்தது என்ன?
இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை நெருப்பில் போடுங்கள்! என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 37:97)
ஆனால் அல்லாஹ் அதையும் முறியடிக்கின்றான்.
அவருக்கு எதிராகச் சதி செய்ய நினைத்தனர். அவர்களைத் தாழ்ந்தோராக்கி விட்டோம். (அல்குர்ஆன் 37:98)
மூஸா நபிக்கு எதிரான கொலை முயற்சி.
நான் தான் உங்கள் கடவுள் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் தூதராக அனுப்பப்படுகிறார்கள் மூஸா (அலை) அவர்கள். அவர்களது அறிவுப்பூர்வமான, ஆணித்தரமான வாதங்கள் எனும் ஆயுதங்களுக்குப் பதில் அளிக்க முடியாமல் படுதோல்வியடைந்த ஃபிர்அவ்ன், மூஸாவைக் கொலை செய்யத் துடிக்கின்றான்
.
"மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும் பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்''என்று ஃபிர்அவ்ன் கூறினான். (அல்குர்ஆன் 40:26)
அவரைத் தூக்கில் போடுவதற்குரிய அனைத்து வேலைகளையும் செய்தான். அதற்குரிய தருணத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கேற்ப,மூஸா தன் சமுதாயத்தை அழைத்துக் கொண்டு தப்பிக்க முயலும் போது அவரையும் அவரது சமுதாயத்தையும் ஃபிர்அவ்ன் துரத்தி வருகின்றான். ஆனால் அவனால் அவரை அழிக்க முடியவில்லை. அவனே அழிந்து போனான். தன்னைக் கடவுள் என்று பிதற்றிக் கொண்டிருந்த அவனைக் கடலில் மூழ்கடித்ததுடன் மட்டுமல்லாமல் அவனது பிணத்தை உலக மக்களுக்குப் பாடமாக்கியும் வைத்து விட்டான் வல்ல இறைவன்.
இதை அல்குர்ஆன் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
"உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!'' என்று (இறைவன்) கூறினான்.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்'' என்று கூறினான்.
இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். (அல்குர்ஆன் 10:89:-92)
சாவிலிருந்து தப்பிய சத்தியத் தோழர்.
மூஸா (அலை) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஃபிர்அவ்னும் அவனுடைய குடும்பத்தாரும் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் ஃபிர்அவ்னின் குடும்பத்தில் ஒருவர் சத்தியத்தை ஏற்றுக் கொள்கின்றார்.
இறைத் தூதர் மூஸாவுக்கு எதிராக ஃபிர்அவ்ன் எடுக்கும் நடவடிக்கையிலிருந்து அவரைக் காப்பாற்றுகின்றார்.
"என் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.
"என் சமுதாயமே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே இருக்கிறது. பூமியில் மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து விடுமானால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவன் யார்?'' (எனவும் அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் "நான் (சரி) காண்பதையே உங்களுக்குக் காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை'' என்று கூறினான்.
"என் சமுதாயமே! மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும்,நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட கதி போன்றும் உங்கள் விஷயத்திலும் நான் அஞ்சுகிறேன்'' என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார். அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை.
என் சமுதாயமே! அழைக்கப்படும் நாளை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்.
அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.
முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் "இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்'' எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித் தான் வழி கெடுக்கிறான்.
அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
"ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை,வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.
"என் சமுதாயமே! என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்கு நேர் வழி காட்டுகிறேன்'' என்று நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.
"என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.'
'
யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.
என் சமுதாயமே! எனக்கென்ன? நான் உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகிற்கு அழைக்கிறீர்கள்.
"நான் அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்'' என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் உங்களை அழைக்கிறேன்.
என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
நான் உங்களுக்குக் கூறுவதைப் பின்னர் உணர்வீர்கள்! எனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். (என்றும் அவர் கூறினார் (அல்குர்ஆன் 40:28-44)
இந்தச் செய்தி ஃபிர்அவ்னுக்குத் தெரிந்து அந்தத் தோழரை ஃபிர்அவன் கொல்ல முயற்சிக்கின்றான். ஆனால் அல்லாஹ் அவரைக் காப்பாற்றி விடுகின்றான்.
எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது. (அல்குர்ஆன் 4:45)
விதிவிலக்காக தாவூத் நபி, சுலைமான் நபி போன்ற ஆட்சியதிகாரம் வழங்கப்பட்ட தூதர்களைத் தவிர அனைத்துத் தூதர்களுக்கு எதிராகவும் கொலை முயற்சிகள் நடந்துள்ளன. அந்தக் கொலை முயற்சியில் பலியான தூதர்களும் உண்டு. பாதுகாக்கப்பட்ட தூதர்களும் உண்டு. இங்கு நாம் பார்த்துக் கொண்டிருப்பது பாதுகாக்கப்பட்ட தூதர்களைத் தான். அந்தப் பட்டியலில் அற்புத மனிதப் படைப்பான ஈஸா (அலை) அவர்களும் அடங்குகின்றார்கள்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. (அல்குர்ஆன் 4:157)
ஈஸா நபியைக் கொலை செய்ய எதிரிகள் முயற்சி செய்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றி விடுகின்றான்.
(ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன். (அல்குர்ஆன் 3:54)
எதிரிகளின் சதியை முறியடித்து ஈஸா நபியை அல்லாஹ் வானுலகத்திற்கு உயர்த்திக் கொண்டான்.
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிரான முயற்சிகள்.
ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்கத் துவங்கிய காலத்திலிருந்து கொலை முயற்சிகள் அடுக்கடுக்காகத் துரத்துகின்றன,தொடர்கின்றன.
மக்காவிலுள்ள இறை மறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்கின்றார்கள்.
நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம், "இணை வைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்கüலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்'' என்று கேட்டேன். அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் "ஹிஜ்ர்' பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து,தன் துணியை நபி (ஸல்) அவர்களுடைய கழுத்தில் வைத்து (முறுக்கி),அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்கüன் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து நபி (ஸல்) அவர்களை விட்டு விலக்கினார்கள். மேலும், "என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்?'' (40:28) என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (நூல்: புகாரி 3856)
குகை வரை வந்த பகை.
இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்கின்ற போது அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து கொலை செய்யத் துடிக்கின்றார்கள். இதை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (அல்குர்ஆன் 8:30)
புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களும் இதை விவரிக்கின்றன.
(ஹிஜ்ரத் பயணத்தின் போது வழியில்) நபி (ஸல்) அவர்களுடன் நான் ("ஸவ்ர்'மலைக்) குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்திய போது (எங்களைத் தேடி வந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு) மேலே தெரிந்தன. நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கüல் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்று நோக்கி)னால் நம்மைப் பார்த்து விடுவாரே! (இப்போது என்ன செய்வது?)'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "அமைதியாயிருங்கள்; அபூபக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி), நூல்: புகாரி 3922.
புகாரி 3906 ஹதீஸ் இது தொடர்பான முழு வரலாற்றையும் நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளின் கைகளில் மாட்டி, கொல்லப்படுவதை விட்டும் அல்லாஹ் காப்பாற்றி விடுகின்றான்.
எந்த மக்கா நகரம், முஹம்மத் (ஸல்) அவர்களை விரட்டியடித்து, கைது செய்ய, கொலை செய்ய நினைத்ததோ அந்த மக்கா நகரை நபி (ஸல்) அவர்கள் கைப்பற்றினார்கள். இப்படிக் கொலை முயற்சிக்கு எதிராகப் பாதுகாக்கப்பட்ட தூதர்களும் இருக்கிறார்கள்; கொலை முயற்சியில் பலியான தூதர்களும் இருக்கின்றார்கள்.
பலியான தூதர்கள்.
பனூ இஸ்ராயீல்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதைக் கீழ்க்காணும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள். (அல்குர்ஆன் 2:88)
"அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும்,அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!(அல்குர்ஆன் 2:91)
இறுதியாக.............
பள்ளிவாசல்களில் தொழத் தடை! மீறிச் சென்றால் அடி உதை! பொதுக்கூட்டங்களில் பேசுவதற்குத் தடை! திருமணப் பதிவேடு மறுக்கப்படுதல்! அடக்கதலம் மறுக்கப்படுதல்!
இப்படியெல்லாம் ஏகத்துவத்தையும், ஏகத்துவவாதிகளையும் ஒழித்துவிடலாம் என்று எண்ணியவர்கள் இறுதியில் மண்ணைக் கவ்வினார்கள்.
கெக்கிராவை மாத்திரமல்ல முழு உலகத்திலும் உள்ள தப்லீக் காரர்களை ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். சத்தியத்தை உங்களால் மறைக்க முடியுமா?
"மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 3:173)
சவால் விடுக்கிறோம். என்றும் தோழ்வி உங்களுக்குத் தான் ஏகத்துவத்திற்கோ ஏகத்துவவாதிகளுக்கோ அல்ல.
பிர்அவ்னின் வாரிசுகளான இது போன்றவர்களை பொது மக்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
என்றும் வெற்றி ஏகத்துவத்திற்கே!
No comments:
Post a Comment