Sunday, 7 August 2011



அகமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா அருகே சபர்மதி ரயிலின் எஸ் 6 பெட்டி தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் 56 ராம பக்தர்கள் இறந்தனர். இதை தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் மூண்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான சொத்துகள் நாசமாயின. இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நானாவதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. 16 முறை இந்த கமிஷனின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

குஜராத் கலவரத்தின்போது அகமதாபாத்தில் பணியாற்றிய உயர் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் நேற்று கமிஷன் முன் ஆஜரானார். குஜராத் கலவரத்தின்போது முதல்வர் நரேந்திர மோடியின் வீட்டில் போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. கலவரத்தை கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டாம் என போலீசாருக்கு மோடி உத்தரவிட்டார்.

அந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்ÕÕ என அவர் தெரிவித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பி.வக்கீல் ஆஜராகி, குஜராத் கலவரம் தொடர்பான அரசு ஆவணங்கள் கடந்த 2007ம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்டன. இந்த தைரியத்தில் தான் பட் பொய் சொல்கிறார் என வாதிட்டார். ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                                                                                                                                                                       Dinakaran news

No comments:

Post a Comment