நாம் இந்த பிரபஞ்சத்தில் நட்சத்திர கூட்டத்தோடு ஒப்பிடும்போது நம் உலகமே ஒன்றும் இல்லை!!
தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால கட்டம் வரை ஓடும். 241 கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.(திருக்குர்ரான் 39:5)
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். 240 பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. 241 காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.(திருக்குர்ரான் 13:2)
நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்.240 உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளை களைப் போட்டான். 248 அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம்.(திருக்குர்ரான் 31:10)
அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப் பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறிய வில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். 241 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(திருக்குர்ரான் 31:29)
அவன் இரவைப் பகலில் நுழைக் கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. 241 அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.(திருக்குர்ரான் 35:13)
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். 241(திருக்குர்ரான் 36:38)
(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவு படுத்துவோராவோம். 421(திருக்குர்ரான் 51:47)
இந்த பதிவும் தகவலும் அருமை. இப்பதிவை
ReplyDeleteவலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)
கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_25.html