பெரும்பாலான பெண்கள் அதிலும் பருவ வயது பெண்கள் தங்களின் போட்டோக்களை பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் ஆர்வக்கோளாறினாலும், இன்னும் சில பெண்கள் தமது படத்தை வெளியிட்டு எத்தனை ஆண்கள் நம்மை எப்படி எல்லாம் ரசிக்கின்றார்கள் என்ற எண்ணத்திலும், வெளியிட்டு மகிழ்கிறார்கள். இதில் முஸ்லிம் பெண்களும் அடக்கம்.
இதோ....அவர்களுக்கு திகிலூட்டும் செய்தி! இணையதளங்களில் மென்பொருட்களின் தொழில்நுட்பம் போகிற போக்கை பார்த்தால் ஆண்கள் கூட தங்களின் படங்களை வெளியிட தயங்கும் காலம் வந்து விட்டது என்று கூறும் அளவுக்கு பின்வரும் செய்தி நமக்கு அதிர்ச்சியூட்டுகிறது.
தேவை இல்லாமல் உருவப்படங்கள் கூடாது என்று இஸ்லாம் கண்டிப்பது நெஞ்சில் அறைந்தால் போல் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதற்கு நிரூபனமாகவும் இருக்கிறது. பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.
ஆம், புதிதாக வந்து உள்ளது http://www.org*******ofile.com/ என்கிற இணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும்நேர்த்தியானது.
எல்லாமே ஒரு ஏமாற்று வித்தைதான். ஆனால் மிகவும் நுட்பமானது. எவருடைய புகைப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவரின் பால் அடையாளத்தை கட்டத்தில் குறிப்பிடுதல் வேண்டும். அவ்வளவுதான்.
புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் பாலியல் உச்சப் பரவச நிலையில் உள்ளார் என்று காட்டுகின்ற வீடியோ தயாராகி விடும். வீடியோவை எவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
மனிதஒழுக்க நலனில் ஆரவமுள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் மற்ற அனைத்து மத பெண்கள் மத்தியில் இந்த செய்தியை பகிர்ந்து இறைவனின் அருளை பெற முயற்சியுங்கள்.
No comments:
Post a Comment