இலங்கை முஸ்லீம்களின் பிரச்சினையை ஊறுகாயாக்க வேண்டாம்!
தமிழக அமைப்புக்களுக்கு ஓர் வேண்டுகோள்
சிறுபான்மையின மக்களாக இலங்கையில் மதிக்கப்படும் சமுதாயங்களில் இலங்கைச் சோனகர்கள் என்று அழைக்கப்படும் முஸ்லீம்கள் மிக முக்கியமானவர்கள்.
இலங்கை வரலாற்றில் நாட்டை மதித்து நாட்டின் இறையான்மையைப் பாதுகாப்பதற்காக போராடிய பல தலைவர்களை இலங்கைச் சொனகர்களான இஸ்லாமிய சமுதாயம் பெற்றுக் கொடுத்துள்ளது.
ஆங்கிலேய எதிர்ப்புப் பிரச்சாரம் தொடங்கி தமிழீலத்தின் பெயரால் தீவிரவாதம் செய்து வந்த புலி எதிர்ப்புப் பிரச்சாரம் வரை நாட்டின் இறையான்மையைப் பாதுகாப்பதில் முஸ்லீம்கள் என்றும் பின் நின்றதில்லை.
கல்வித் துறைக்கு புத்துயிர் ஊட்டிய டி.பி. ஜாயா, அறிஞர் சித்தி லெப்பை, போன்றவர்களில் தொடங்கி அமைச்சர் அஷ்ரப் வரை அரசியல் ரீதியாகக் கூட இலங்கை முஸ்லீம்கள் அனைத்து சமுதாயத்தவர்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
என்றைக்கு விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பிரபாகரனின் தலைமையிலான தீவிரவாதம் இலங்கையில் ஆரம்பமானதோ அன்றைக்கே முஸ்லீம்களின் உரிமைப் பரிப்பு நிலைபாட்டையும் விடுதலைப் புலிகள் தங்கள் கொள்கையாக போட்டுக் கொண்டார்கள்.
பொலன்னறுவைப் படுகொலையில் ஆரம்பித்த முஸ்லீம் கறுவருப்பு பிரச்சாரம், காத்தான் குடி படுகொலையைத் தாண்டியும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
மறக்க முடியாத வடக்கு வெளியேற்றம்.
1992 ம் ஆண்டு எந்த ஒரு இலங்கை பிரஜையும் மறக்க முடியாத, மறக்கக் கூடாத ஒரு நிகழ்வை விடுதலைப் புலிகள் நிகழ்த்தினார்கள்.
அதுதான் வடக்கின் மைந்தர்களான முஸ்லீம்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப் பட்ட அகோர நிகழ்வு நடந்த ஆண்டு.
உடுத்த உடையுடன், சல்லிக் காசின்றி, நடை பயணிகளாக பிறந்த மண்ணிலிருந்து துரத்தப் பட்டார்கள் வடக்கு முஸலீம்கள்.
இலங்கையின் ஜப்பான் என்று வர்ணிக்கும் அளவுக்கு செல்வச் செழிப்போடும், வருமான உச்சத்துடனும் வாழ்ந்த வடக்கு முஸ்லீம்களின் வருமானம் பரிக்கப்பட்டு, வீடு வாசல்களை இழந்து, திக்கற்றவர்களான விடப்பட்டார்கள். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய்ப் பழகிய தங்கள் தாய் மொழிச் சமுதாயத்தை ஈவு இறக்கமின்றி வெளியேற்றினார்கள் தீவிரவாத புலிகள்.
அன்று பாராளுமன்றத்தில் இதற்காக குரல் கொடுப்பதற்கு சொற்பமான முஸ்லீம் அரசியல் வாதிகளே காணப்பட்டார்கள்.
அரசாங்கத்தின் கையாளாகாத் தன்மையும் அப்போது உச்சத்தில் இருந்ததினால் அரசாங்கம் கூட புலிகளுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று கைவிரிக்கும் நிலை உருவானது. அன்று புத்தளம் மாவட்டத்தில் குடியேறிய முஸ்லீம்கள் அகதி அந்தஸ்துடன் சுமார் 18 வருடங்களை முகாம்களில் கழித்தார்கள் வடக்கு முஸ்லீம்கள்...
காத்தான்குடி படுகொலையும், விடுதலைப் புலிகளின் துரோகமும்.
எந்தவொரு போராட்ட அமைப்பாக இருந்தாலும் அவர்களின் போராட்டம் சரியானதாக இருந்தால் அவர்கள் யாரை எதிரியாக நினைக்கிறார்களோ அவர்களைத் தான் தாக்க வேண்டும், அதிலும் போராட்ட அமைப்பென்றால் அவர்கள் இராணுவத்துடன் தான் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டுமே ஒழிய தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக பொது மக்களை பகடைக் காயாக மாற்றுவது எந்த ஒரு விதத்திலும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
தங்கள் உடன் பிறந்த சகோதரர்களாய்ப் பழகிய இஸ்லாமிய சமுதாயத்தை கருப்புக் கண்ணாடி கொண்டு பார்த்தார்கள் விடுதலைப் புலிகள். தங்கள் போராட்டம் நியாயமானது என்றிருந்தால் அந்த போராட்டத்தில் முஸ்லீம்களும் கண்டிப்பாக பங்கெடுத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் விடுதலைப் புலிகளின் போராட்டம் நியாயமானதாகவோ ஒரு கோரிக்கையை முன்னிருத்தியதாகவோ இருக்கவில்லை.
தனி ஈழம் என்று அவர்கள் முன் வைத்த வாதம் கூட போலியானதுதான் ஒரு சிலரின் சுய விருப்பு வெருப்புக்கா ஓராயிரம் தமிழ் சகோதரர்க்ள ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது.
அந்தத் தருணம் ? ? ? ? ? ?
கிழக்கின் பெரும்பான்மை சமுதாயமாக இருந்த முஸ்லீம் சமுதாயத்தினர் தமிழீல தீவிரவாதிகளின் அகோரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
இறைவனை வணங்கும் அமைதியான இரவுத் தொழுகையில் ஈடுபட்டுள் கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான முஸ்லீம்களை கண் மண் தெரியாமல் கல் நெஞ்சக்கார புலி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்து இறைவனைத் தொழும் பள்ளியில் இரத்த ஆறு ஒடச் செய்தார்கள் கொலைகார வெறியர்கள்.
இது மட்டுமா? இன்னும் பல................
வடக்கில் ஆரம்பித்தவர்கள் நாடு முழுவதும் முஸ்லீம்களின் மீது குறிவைத்து பல தாக்குதல்களை நிகழ்த்தினார்கள்.
பொலன்னறுவையில் முஸ்லீம்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.
வடக்கில் இருந்த அனைத்து முஸ்லீம்களையும் ஒருவர் விடாது துரத்தியடித்தார்கள்.
காலியில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார்கள்.
கிழக்கில் கருணா தலைமையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
வடக்கு முஸ்லீம்களை விரட்டியடித்ததைப் போல் மூதுர் முஸ்லீம்களையும் தங்கள் ஊரைவிட்டு விரட்டினார்கள்.
வாகரையை சுற்றியிருந்த முஸ்லீம்களை அந்த இடங்களை விட்டும் துரத்தியடித்தார்கள்.
முஸ்லீம் மீனவர்களின் தொழில் துறைகளை நாசப்படுத்தினார்கள்.
வரி வசூல் என்ற பெயரில் பலவந்தமாக கப்பம் வசூல் செய்தார்கள்.
முஸ்லீம் தனவந்தர்களை பிணைக் கைதிகாகப் பிடித்து பணம் வசூல் செய்தார்கள்.
கிண்ணியாவில் முஸ்லீம்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.
இப்படி பட்டியல் போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் போடுமளவுக்கு முஸ்லீம்களுக்க எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு துரோகங்களை இழைத்தவர்கள் தான் இந்த விடுதலைப் புலித் தீவிரவாதிகள்.
இவ்வளவு துரோகங்களை விடுதலைப் புலிகள் இழைத்திருந்தும் இலங்கை முஸ்லீம்கள் விஷயத்தில் இந்திய அமைப்புகள் அதே துரோகத்தை செய்வதை எந்த முஸ்லீம் சகோதரனும் சகித்துக் கொள்ள மாட்டான்.
ஓட்டுக்காக சமுதாயத்திற்கு வேட்டு வைப்பதா?
இஸ்லாமிய சமுதாயத்தை எந்த அளவுக்கு அழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அழிப்பதற்காக பலவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்கள் தான் இந்த புலித் தீவிரவாதிகள்.
நாம் மேலே பட்டியில் போட்ட அனைத்து செய்திகளும் பெரும்பாலும் இந்திய மக்கள் அறிந்த ஒன்றுதான் ஆனால் தமிழகத்தில் இஸ்லாமிய சாயம் பூசிச் செயல்படும் அமைப்புக்கள் இதனை உணர்ந்தனவா?
இலங்கை முஸ்லீம்களுக்காக நாம் அறிந்த வகையில் பகிரங்கமாக போராடிய ஒரே இஸ்லாமிய அமைப்பு அப்போதைய தமுமுக. இன்றைய தவ்ஹீத் ஜமாத்தின் அமைப்பாளர்கள் அன்றைய தமுமுகவின் அமைப்பாளர்களாக இருந்த நேரத்தில் இலங்கை முஸ்லீம்கள் பாதிக்கபட்ட நேரத்தில் அவர்களுக்காக பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார்கள்.
ஆனால் இன்றைய தமுமுக வினதும் தமிழக இஸ்லாமிய அமைப்புக்களினதும் நிலை அதுவல்ல. இவர்களின் இன்றைய நிலையை பற்றி நினைக்கும் போது எந்த ஒரு இலங்கை முஸ்லிம் சகோதரனினாலும் தாங்கிக் கொள்ள முடியாது.
ஓட்டுக்காக சொந்த சமுதாயத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாக இப்போதைய தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் மாறியிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.
இன்றைக்கு இவர்களின் நிலை...................
நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் விடுதலைத் தீவிரவாதிகளுக்கா பந்தி போட்டுத் திரியும் சீமானுடன் கூட்டணி.
முல்லிவாய்க்கால் பிரச்சினை என்ற பெயரில் புலி ஆதரவாளர்களுடன் கூட்டணி.
இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் இவர்கள் என்றாவது இலங்கை முஸ்லீம்களுக்காக போராடினார்களா?
முல்லிவாய்க்கால் பிரச்சினை என்ற பெயரில் சீமானுடன் கைகோர்த்து அரசியல் நடத்தும் இவர்கள் என்றாவது காத்தான்குடி படுகொலை தொடர்பாக வாய் திறந்தார்களா?
தீவிரவாதிகளுக்காக போராட்டம் நடத்துபவர்கள், பொதுக் கூட்டம் போடுபவர்கள் என்றாவது முஸ்லிம்களுக்காக இதனை செய்தார்களா என்ன?
இலவசமாக மைக் கிடைக்கிறது, டி.வி சேனல்களில் காட்டப்படுகிறோம் என்பதற்காக சமுதாயத்திற்கே துரோகம் செய்கிறோமே என்று கூட இவர்கள் மனது உறுத்தவில்லை.
கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரத்தில் இலங்கையில் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்த வேலை அந்த யுத்தத்தை நிறுத்துவதின் மூலமாக புலித் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்கு திமுக முயன்ற நேரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு அமைப்பைத் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் திமுகவுடன் கைகோர்த்தன.
மனித சங்கிலிப் போராட்டம் என்ற பெயரில் திமுக அரசு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் அனைத்தும் கலந்து கொண்டது.
முஸ்லீம்களை கொலை செய்தவர்களுக்காக போராடும் அளவுக்கு அரசியல் தந்திரம் இவர்களை மிகைத்தது.
அதே போல் தான் நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலிலும் தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வேற்பாளர்கள் விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் கை கோர்த்தார்கள்.
அன்பின் தமிழக வாழ் இஸ்லாமிய நெஞ்சங்களே !
சோற்றுக்கு ஊறுகாய் சேர்ப்பது போல் தங்கள் சுய இலாபத்திற்காக மாத்திரம் இலங்கை முஸ்லீம்கள் பற்றி பேசும் இவர்களை தயவு செய்து தமிழக முஸ்லீம் சகோதரர்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
இலங்கை முஸ்லீம்களின் பெயர் சொல்லி தங்கள் தலை காக்க முயலும் இந்த பச்சோந்திகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment