Monday 25 July 2011

கிறிஸ்துவின் இரத்தம் ஜெயமா?

------கிறிஸ்துவின் இரத்தம்---


கிறிஸ்தவர்களே. .  ஏசு கிருஸ்துவின்இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்
என்று கூறுகிறீர்களே அப்படியானால் ஏசு என்ன பாவங்களை சுத்திகரிக்கும் ஆலையைநடத்துகிறாரா?

பாவம் செய்கிறவர்கள்எப்படிப்பட்டவர்கள்?

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை
மீறுகிறதே பாவம். (I யோவான் 3:4)

மேற்கண்ட பைபிள் வசனத்தில் பாவம் செய்கிறவன் நியாயப் பிரமாணத்தை  மீறுகிறான் என்று பைபிள்கூறுகிறது! அப்படியானால் இறைவன் வகுத்த நியாயப்பிரமாணத்தைமீறுகிறவன் அநியாயம் செய்கிறான் அவன் பாவிதானே! இறைவன் வகுத்தநீதியை மீறும் பாவிகளை ஏசு எவ்வாறு மன்னிப்பார்? அப்படி ஏசு
மன்னிப்பார் என்று கூறினால் அது ஏசு தேவனுக்கு துரோகம் இழைக்கிறார்என்று அர்த்தமாகிறது!
அநியாயம் இழைத்தவனுடைய பாவத்தைஏசு எவ்வாறு மன்னிப்பார்? சிந்திக்கமாட்டீர்களா?

உதாரணமாக! ஒருவன் ஒரு பெண்ணைமானபங்கம் செய்து விடுகிறான் இது மனித உரிமை
மீறலாகும் இதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் படி தகுந்த சிறை தண்டனையை வழங்கநீதி வழிவகுக்கிறது. இதை உலக நாடுகள் அங்கீகரிக்கின்றது இஸ்லாமும் இப்படிப்பட்டபாவச் செயல்களை வண்மையாக கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அதற்கு கடுமையானதண்டனையை வழங்குகிறது! ஆனால் ஏசு மட்டும் இந்த பாவங்களை எவ்வாறு மன்னிப்பார்!

பாவிகளின் இதயம் எப்படிப்பட்டது

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடையஇருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். (I யோவான் 3: 20)

ஒரு மனிதன் பாவம் செய்துவிட்டால் அவனுடைய இருதயமே அவனை பாவி என்று புலம்பவைக்கிறதுஎன்று பைபிள் கூறுகிறது அப்படியானால் ஏசு எவ்வாறு உங்கள் பாவக்கறைகளைபோக்குவார்?
ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டு தேவனிடம் தேவகுமாரனாகிய ஏசுவின் நாமத்தால்என் பாவத்தை மன்னித்துவிடு என்று கூறினால் தேவன் மன்னித்துவிடுவானாம்.அப்படியானால் ஆதிபிதா ஆதாம் மற்றும் ஏவாள் செய்த பாவங்களுக்காகஏன் தேவன் அவர்களை தண்டித்தார்? சிந்திக்கமாட்டீர்களா?
இதோ ஆதாரம்பாருங்கள்!

. . . . . . . . . . பின்பு அவர் ஆதாமைநோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச்செவிகொடுத்து, புசிக்கவேண்டாம்என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின்கனியைப் புசித்தபடியினாலே, பூமிஉன்
நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடேஅதின் பலனைப் புசிப்பாய். ( ஆதியாகமம் அதிகாரம் 3: 17)

ஆதாம் செய்த பாவத்தை தேவன் மன்னித்தான். ஆனால் அவரை தண்டித்தான்! ஒருவேளை ஏசுதேவகுமாரனாக இருந்து பாவங்களை மன்னிப்பவராக இருந்திருந்தால், அவரை தேவன்ஆதாமுக்கு முன்னர் படைத்திருக்க வேண்டும். பின்னர் மனிதனாக பிறந்து முதல்முதலில் பாவம் செய்த ஆதாம் மற்றும் அவரது துணைவியான ஏவாளையும் "என் மகன்ஏசுவின் நாமத்தினால் மன்னிப்பு கேளுங்கள். அவர் உங்கள் பாவங்களை கழுவுவார்"என்று தேவன் கூறியிருக்க வேண்டும் ஆனால் தேவனுக்கு மகனோ, மனைவியோ இல்லாத போது தேவனுக்கு குமாரன்எப்படி வந்துவிடுவார்? தேவனுக்கு குமாரனுமில்லை, ஏசு தேவகுமாரனுமில்லை, ஏசு தேவனுடைய அதிகாரத்தில் கை வைப்பதுமில்லை.அவர் நம்மைப் போன்று ஒரு மனிதர் மேலும் தேவனுடைய தீர்க்கதரிசிகளில்ஒருவர்! ஏசு பாவங்களை மன்னிக்கமாட்டார்! நபி ஏசு என்ன
பாவங்களை சுத்திகரிக்கும் பாவச் சுத்திகரிப்பு ஆலையை நடத்துகிறாரா? உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கு!  சரி ஏசு பாவங்களை மன்னிப்பதாககூறினாரா? இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகலபாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்என்று பாவிகள் கூறுகிறார்கள் (பாவிகள் என்று நாம்
கூறுவது கிருத்தவர்களைத்தான் ஆம் இவர்கள்தான் ஏசுவின் மீது பொய்யை இட்டுக்கட்டியபாவிகள்) ஆனால் இந்த பாவிகள் கீழ்கண்ட ஏசுவின் வார்த்தைகளை உணராததுஏன்?

இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்குவைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்குஅழைக்க வந்தேன் என்றார் . (மாற்கு 2:17)  

இங்கு  ஏசு பாவிகளை மனந்திரும்புகிறதற்குஅழைக்க வந்தேன் என்கிறார். ஆனால் கிருத்தவர்களோ. . ஏசு பாவங்களை மன்னிக்கவந்தார் என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். இது ஏசுவுக்கு இவர்கள்செய்யும் துரோகமில்லையா? எனவேஏசு என்ற தீர்க்கதரிசி தாம் பாவிகளை மனந்திருந்த அழைக்க வந்ததாக
கூறிவிட்டமையால், அவர்தன் புறத்திலிருந்து தாம் பாவங்களை மன்னிப்பதில்லை என்றஉண்மையை தெளிவாக உரைத்து விட்டார்! எனவே கீழ்கண்ட பைபிள் வசனம் பொய்என்பதற்கு ஏசுவின் வார்த்தைகளே போதுமானதாகும்!

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.(1 யோவான் 1:7)

கீழ்கண்ட பைபிள் வசனம் கூறுவதைசெவிதாழ்த்தி கேளுங்கள்!
iஇயேசுஅதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்குவேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்குஅழைக்க வந்தேன் என்றார்.
( மாற்கு 2:17 )

முடிவுரை

இறைவன் வகுத்த நீதியை மீறும் பாவிகளை ஏசு எவ்வாறு மன்னிப்பார்? அப்படி ஏசுமன்னிப்பார் என்று கூறினால் அது ஏசு தேவனுக்கு துரோகம் இழைக்கிறார் என்றுஅர்த்தமாகிறது! ஆனால் ஏசு பாவமற்றவராக இருக்கிறபடியால் அவர் தேவனுக்குதுரோகமிழைக்கமாட்டார்! உங்கள் பாவங்களை கழுவ அவர் ஏன்
தேவனிடத்தில் பாவியாவார்? எனவேதேவனிடத்தில் ஏசுவை பாவியாக ஆக்கிவிடாதீர்கள். அப்படி ஆக்கினாலும்அதனால் அவருக்கு எதுவும் நடக்காது. ஏனெனில் அவர் பாவிகளின் பாவங்களைமன்னிப்பதாக கூறவில்லை.சிந்தியுங்கள்! ஏசு யாருடைய பாவங்களையும் மன்னிக்கமாட்டார்.எனவே ஏசு
என்ற தீர்க்கதரிசியை இழிவுபடுத்தி பேசாதீர்கள்! மாறாக ஏசுவைபின்பற்றி சத்திய சன்மார்க்கத்தில்நுழைந்துவிடுங்கள்!

-
ஜலால்

No comments:

Post a Comment