Saturday 2 July 2011


பல் துலக்குவதும் விஞ்ஞானமும்!

தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும். பற்களையும், ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதய குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
இது தொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல்கலை கழகம் நோய் எதிர்ப்பு இயல் துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது.
இதில் வெளியான தகவல்கள்: 
மனிதனின் வாய் பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிருகளும் இருக்கின்றன.
இவற்றில் தீமை தரும் நுண்ணுயிர்கள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது. இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Pழசிhலசழஅழயௌ பiபெiஎயடள)என்ற நுண்ணுயிரி ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பல் துலக்குவதை அதிகமாக வலியுறுத்திருக்கிறார் ”என்னுடைய சமுதாயத்திற்கு கஷ்டம் தந்து விடுவேன் என்று நான் அஞ்சாவிட்டால் ஒவ்வொரு உளூவுடனும் பல் துலக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
-அரக்கோணம் அன்சாரி

No comments:

Post a Comment