Thursday, 21 July 2011


உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்
















வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.



இந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம். 

இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment