Saturday, 2 July 2011

அளவில் சிறியது ஆற்றலில் பெயரிது: மூளை !


அளவில் சிறியது ஆற்றலில் பெயரிது: மூளை !

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, December 22, 2009, 13:45
HiResஒரு சராசரி மனிதனுடைய மூளையின் எடை 1300g முதல் 1400g வரை ஆகும் .
இது யானையின் மூளையின் ஏடையை விட மிக அதிகமானதாகும். யானையின் மூளையின் எடை 800g.
நமது உடம்பு முழுவதும் உள்ள மொத்த ஆக்சிஜனில் 20% ஐ மூளை தனது தேவைக்கு எடுத்து கொள்கிறது.
மூளையில் மொத்தம் 100 பில்லியன் நியுரோன்கள் உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த மக்கள் தொகையைப் போல் 166 மடங்கிலும் அதிகமானது.
மூளையின் நான்கில் மூன்று பங்கு முழுவதும் நீரால்நிரப்பப்பட்டுள்ளது.
நமது மூளைக்கு உலகிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிக அளவு எண்ணங்களை சேமித்து வைக்கும் ஆற்றல் உள்ளது.
மனித மூளை 25 watts அளவு சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இது ஒரு குமிழ் விளக்கை (Light Bulb) பிரகாசமாக ஒளிரச் செய்ய போதுமானதாகும்.
நமது மூளை 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இடது மூளை உடலின் வலது பக்கத்தினையும் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது.
ஆனால் வலது மூளையை விட இடது மூளை 186 million நியுரோன்களை மேலதிகமாக கொண்டுள்ளது.
ஆக்சிஜன் இல்லாமல் மூளை நான்கு முதல் ஆறு நிமிடம் வரை உயிர்வாழும். அதன் பிறகு செல்கள் இறக்கத்தொடங்கிவிடும்.
மூளையின் மிகக் குறைந்த வேகம் 416 km/hour அல்லது 260 mph.இது நவீனயுகத்தின் “Super Car” களினால் அடைய கூடியமிகக்கூடிய வேகமாகும்.
மூளையின் எடை உடலின் எடையில் வெறும் 2% மட்டுமே,ஆனால் உடலின்மொத்த சக்தியில் 20% ஐ தனது தேவைக்கு எடுத்து கொள்ளுகின்றது.
மூளையானது பகலில் சிந்திக்கும் திறனை விட இரவில்சிந்திக்கும் திறன்கூடியது. இதனால் தான் நாம் இரவில் நித்திரைக்கு செல்லும் முன் படிப்பது அதிக நாட்கள் மனதில் நிற்கின்றது.
அளவில் சிறியதும் ஆற்றலில் பெரியதுமான மூளையைப் போல் இயங்கக் கூடிய கணினியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஐபிஎம் நிறுவனம். ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை தயாரித்துள்ளது.
இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட CPU with Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1Terabyte(TB) = 1024 GB)) நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.
SCinet_8840SCinet_8836
ஆனால் பல ஆண்டு ஆராச்சிக்கு பிறகு பல கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.(?) புனையின் முளையை விட 100 மடங்கு குறைந்த அளவே செயல்படக் கூடியது.
படத்தை பார்த்தால் இந்த கம்யூட்டரை வைப்பதற்கு எத்தன க்ரவுண்ட் இடத்தை தேவையோ தெரியவில்லை?
மூளை  என்பது நூறு  கோடி நியூரான்  மற்றும் அதை இணைக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது . இது எவ்வாறு இயங்குகிறது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது.  ஆனால் இவ்வளுவு சிறிய  அளவில் மிகப் பெயரிய ஆற்றல் கொண்ட  மூளை ஆராய்ச்சியாளர்களுக்கு இது புரியாத புதிராகவே உள்ளது!
தொகுப்பு: அபு நபீலா

No comments:

Post a Comment