Friday 22 July 2011


புதுமடம் : கரீம் மதீனா . . யு .ஏ . இ
நம் புதுமடத்தில் கல்வி என்பது கடமைக்காக - கடனுக்காக என்ற
நிலைதான் . . . .

பெண் கல்வி என்பது ஏதோ எட்டாம் வகுப்பு வரையும் ஆண் கல்வி என்பது பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை என்பது எழுதப் படாத சட்டமாக உள்ளது... தற்போது வேண்டுமானால் நூற்றில் ஐந்து பேர் பெண்களில் மேல் நிலை வரையும் ஆண்களில் கல்லூரி வரையிலும் செல்கின்றனர்...


கல்வி பயிலும் இவர்கள் கூட ஏதோ பொழுது போக்கிற்கும் வருடங்களை கடத்தவும் பெற்றோர் நிர்ப்பந்தத்திலும் தற்போது " காதல் "செய்வோம் என்ற இன்பத்திலும் செல்கின்றனர் .

பெண்கள் பள்ளிப்படிப்பை நிறுத்தியதும் இரண்டே வருடத்தில் திருமணம் முடித்து குழந்தையும் பெற்று விடுகின்றனர் . . ..ஆண்கள் கல்லூரி முடித்து அட்டையை (பாஸ் போர்ட் ) தூக்கி அலைகின்றனர் . . .நமது கல்வி தரத்திற்கு தகுந்த வேலை கிடைக்குமா என்று கூட பார்க்காமல் அட்டையை தூக்கி வெளிநாடு வந்த பிறகுதான் ஏண்டா ?? படிக்காமல் வந்தோம் என நினைக்கின்றனர்...

பள்ளிப் படிப்பை தொடரும் அவர்களுக்கு " ஆன்மீகம் - இலக்கியம் தன்னம்பிக்கை வளர்த்தல் இவைகளை போதிக்க வேண்டும் இலக்கியத்தரத்தை இவர்கள் இதயத்தில் யாரும் விதைப்பதிலை

சிறந்த நூல்களை படிக்க தூண்டுவதில்லை ஆன்மீகம் சார்ந்த போதனைகளை எடுத்துரைப்பதில்லை நான் புதுமடத்தில் பள்ளிக்கூடம் நடத்தியபோது என்னிடம் படிக்க வந்த மாணவ _ மாணவிகளுக்கு எழுத்தறிவித்ததுடன் இலக்கிய இன்பத்தை அந்த பிஞ்சு நெஞ்சங்களில் விதைத்தேன்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கே பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி கவிதைப் போட்டி கதைப் போட்டி எது நடந்தாலும் அவர்களை கலந்து கொள்ளச் சொல்லி தூண்டியுள்ளேன் நானும் அதற்கு வடிவம் கொடுத்து கருத்துக்களை எழுதி நூலகத்தில் புத்தகங்கள் தேடித் படித்து முதல் பரிசை வெல்லவேண்டும் என்ற ஆர்வத்தோடு செயல்பட்டேன்( அது அக்காலங்கள்)

என்னிடம் படித்த மாணவன் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வீடு" நயீம் "( தற்போது எங்கு எந்த வேலையில் உள்ளான் தெரியவில்லை )" வள்ளல் சீதக்காதி " டிரஸ்ட் நடத்திய மாநில அளவிலான பேசுப் போட்டியில் " கணியன் பூங்குன்றனாரின் " யாது ஊரே யாவரும் கேளிர் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசும் மண்டல அளவில் திருநெல்வேலியில் இரண்டாம் பரிசும் வென்று சாதனை படைத்த வரலாறு உண்டு.

" விவேகானந்தா இலக்கியப் போட்டியில் " மாவட்ட அளவில் மாணவிகள் " சுல்தானா "ஆசிக்கா " போன்றவர்கள் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வென்றார்கள்.

நம் புதுமடம் மேல் நிலைப் பள்ளியில் வருடம் தோறும் நடக்கும் ஆண்டு விழாவில் இலக்கியப் போட்டியில் எனது மாணவர்கள் போட்டி போட்டு பரிசுகளை வென்ற காலச் சரித்திரம் .. எப் போதும் நினைவில்.

மண்டல அரசு கலை இலக்கிய போட்டியில் பசீர் அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் கலந்து கல்வி ஊக்க தொகைகள் பெற்றார்கள்.

தற்போது கீழக்கரை தாசிம் பீவி கலை கல்லூரியில் பேராசியையாக வேலை பார்க்கும் நமது கிராமத்தை சார்ந்த (முதல் பேராசிரியை ) பெண் என்னிடம் படித்த மாணவி என்பதோடு இந்த மாணவியும் போட்டிகளில் கலந்து கொண்டவர்தான் ......

தற்ப் போது மருத்துவ துறையில் நம் கிராமத்தை சார்ந்த முதல் பெண்மருத்துவர் எனது மாணவிகளில் ஒருவர் என்பதனையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன் . ..

எனது வீட்டில் அன்று மாணவ - மாணவிகள் கூட்டம் கூட்டமாய் நிறைந்து வழிவர் பேசுப் போட்டியில் - கட்டுரைப் போட்டியில் பாடல் போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்த எனது மனைவியிடம் அக்கா அக்கா நான் வாசிக்கிறதை கேளுங்கள் என ஒப்பிவித்ததை இன்றும் நான் நினைத்து மனம் குளிர்வேன்

இப்படி மாணவ - மாணவிகளை சிறந்த செம்மல்களாக உருவாக்கினோம் அந்தோ பரிதாபம் இன்று வெறும் ஏட்டு சுரைக்காய் படிப்பு மட்டும் படித்து விட்டு அட்டையை தூக்கி வெளிநாடு வந்து கிளினிக் கம்பனிகளில் கிளீன் வேலைகளை நமது மாணவர் சமுதாயம் செய்கிறது .

நமது நற்ப்பணி மன்றங்கள் - ஆசிரியர்கள் நமது மாணவர்களை சிறந்த இலக்கிய செம்மல்களாக உருவாக்க வேண்டும் . . ஆர்வத்தை ஊட்ட வேண்டும் . . இது தான் நாம் செய்யும் சமூக பணி . . .

இக் கட்டுரையை படிக்கும் முன்னாள் மாணவ - மாணவிகள் அன்று என் வீட்டில் தரம் மிக்க கல்வியை பயின்றதை நினைவு கொள்ளட்டும் அது போல தம் மக்களையும் உருவாக்கட்டும் உங்கள் பிள்ளைகள் உங்கள் பெயர் நிலைக்க சிறந்த இலக்கிய செம்மல்களாக உருவாக்க எனது வேண்டுதல் . . . .

மின்னஞ்சல் வழி புதுமடம் : கரீம் மதீனா . . யு .ஏ . இ
புதுமடம் பொதுநல மக்கள் இயக்கம் . . .

No comments:

Post a Comment