Sunday 31 July 2011

Press News: மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்


மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.
கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில் இல்லை.
இந்த சட்டம் ஏதோ அவசரகோலத்தில் உறுவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் சிறுபாண்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்க படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என அரசால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் கூறியுள்ளன.
கலவரங்களை விசாரிக்க நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுவக்காப்பட்டது தான் இந்த ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம்”.
மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலும், பல்வேறு சட்ட வல்லுனர்களின் ஆலோசனைபடி தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் கூறியிருப்பது ஏற்கதக்க வகையில் இல்லை.
மனித உயிர்களைவிட மாநில உரிமை பெரிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டும், எனவே தமிழக முதல்வர் இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கேட்டுகொள்கின்றது,
இந்தியாவில் கலவரங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை தண்டிக்கவும், கலவரத்தில் பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் வழங்கவும், சட்டம் இயற்றிய மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டுகின்றது
இப்படிக்கு
P. ஜெய்னுல் ஆபிதீன்
மாநில தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

No comments:

Post a Comment