Saturday, 15 October 2011

ரோமிங்க கட்டணம் கிடையாது – TRAI யின் புதிய தொலை தொடர்பு கொள்கை!


மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிவல் நேற்று டெல்லியில் ட்ராய் யின் புதிய தொலை தொடர்பு கொள்கையின் வரைவு குறித்து செய்தியாளர்களிடம்  பேட்டியளித்தார்.
இதில் மொபைல் சந்தா தாரர்கள் தங்கள் மாநிலத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு செல்லும் போது  ரோமிங் கட்டணம் செலுத்த தேவையில்லை அதாவது இந்தியாவிற்குள் எங்கு சொன்றாலும் ரோமிங் கட்டணம் கிடையாது என புதிய தொலை தொடர்பு கொள்கையின் வரைவில் இடம் பெற்றுள்ளதாக கபில்  குறிப்பிட்டார்.
மேலும் ஒரு மொலைல நம்பரை எந்த மாநிலத்திற்கும் Port  செய்து கொள்ளலாம் எனவும் அதில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
அதாவது நாம் தமிழ்நாட்டில் ஏர்டெல் நம்பரை வைத்திருந்தால் கர்நாடகாவிற்கு சென்று அதே நம்பரை ஐடியாவிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் ப்ராட்பேண்ட்  வசதி மேலும் பல ஊர்களுக்கு விரிவு படுத்தப்படும். எனவும் அந்த வரைவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்த   புதிய தொலை தொடர்பு கொள்கை இந்த வருட இறுதியில் டிசம்பர் மாதம் அமலுக்கு வரும் என தெரிகின்றது.
ரொமிங்க கட்டணத்தை அரசு ரத்து செய்தால் STD விலைலையை தொலைபேசி நிறுவனங்கள் அதிகரிக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
IANS செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபு நபீலா

No comments:

Post a Comment