சென்ற வார கேள்வி : பெருநாள் தொழுகைக்கு முன்பே தவறுதலாக குர்பானி கொடுத்துவிட்ட நபிதோழர் யார்? அதற்கு பரிகாரமாக (விதிவிலக்கு) நபி (ஸல்) என்ன கூறினார்கள்?
பதில் : '1)அபூபுர்தா இப்னு நியார்(ரலி)
2)நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்க வேண்டும். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கி றாரோ அவர் தமது குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது என்று சொன்னார்கள்.
அப்போது அபூபுர்தா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?) என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், முதலில் அறுத்ததற்கு பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது' அல்லது நிறைவேறாது' என்று பதிலளித்தார்கள்.
பராஉ (ரலி)
அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் புஹாரி (5560)முஸ்லிம்
No comments:
Post a Comment