Wednesday, 19 October 2011

இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.


இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.
பாத்திமா ஷஹானா (கொழும்பு)

இரு கடல்கள் சங்கமிக்கும் போது இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஓன்றையொன்று கடக்காது.  (அல்குர்ஆன் 55: 19,20)

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும்தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும்,கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (அல்குர்ஆன் 25: 53)

அல்குர்ஆனின் கூற்றுப்படி நவீன விஞ்ஞானமும் இரு கடல்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையும்தடுப்பும் இருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரு கடல் நீரினதும் வெப்பநிலைஉப்பின் தன்மைஅடர்த்தி ஆகியன வேறுபடுகின்றன. உதாரணமாக,  Mediterranean seaAtlantic ocean ஆகியவற்றின் நீரில் Mediterranean sea யினது நீரின் வெப்பம்உப்பின் தன்மைஅடர்த்தி Atlantic ocean னினது நீருடன் ஒப்பிடும்போது குறைவாககே உள்ளது.

கீழுள்ள படத்தில் இவ்விரு கடல்நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்காததை விஞ்ஞான ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.



அத்துடன் இவ்விரு கடல்களில் பாரிய அலைகள்உறுதியான திரவ வாயு ஓட்டம்கடலின் ஏற்றமும்வற்றுதலும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.

நவீன விஞ்ஞான ஆய்வுகளின் படி மதுரமான நீர்உப்பு நீர் ஆகியன சந்திக்கும் இடமான முகத்துவாரம் ஆனது இரு கடல்கள் சந்திக்கும் பகுதியைவிட வித்தியாசமானது. நவீன கண்டுபிடிப்புகளின் படி மதுரமான நீரிலிருந்து உப்பு நீரை அடர்த்தியின் காரணமாக வேறுபடுத்திக் காட்டும் வெவ்வேறான இரு அடுக்குகள் அடையாளம் காணப்படுகின்றன.

கீழுள்ள படத்தில் இவ்வடுக்குகளை தெளிவாக அவதானிக்கலாம்.
இந்தத் தகவல் சமீபத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கருவிகளின் மூலமே இவற்றின் வெவ்வேறான வெப்பநிலைஉப்பின் தன்மைஅடர்த்தி,ஆக்சிஜன் (oxygen) ஓட்டம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. வெற்றுக் கண்களுக்கு இவ்விரு வித்தியாசமான கடல்கள் தென்படாதது போலவே வெவ்வேறு தன்மையுள்ள மதுரமானகசப்பானஉவர்ப்பான நீரினதும் அடுக்குகள் வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை.

ஆழ்கடல் இருள்.

அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஓன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.(அல்குர்ஆன் 24: 40)

கடலின் மிக ஆழத்தில் எந்தவித வெளிச்சமும் இல்லாத இருளாகக் காணப்படுவதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காரணம் சமுத்திரங்களில்  கடல் மட்டத்திலிருந்து  சில100மீ தொடக்கம் 11034மீ ஆழத்திற்குள் சூரிய ஒளி ஊடுருவுவதில்லை. கிட்டத்தட்ட சமுத்திரங்களும்கடல்களும் கடல் மட்டத்திலிருந்து 200மீ அல்லது அதற்கு குறைவான ஆழத்திலேயே இருளாகக் காணப்படும். இந்த ஆழத்தில் அநேகமாக இருளாகக் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1000மீ ஆழத்திற்குக் கீழே எந்தவொரு ஒளியும் இல்லை. 100மீ ஆழத்திலேயே சூரியக் கதிர்கள் நீரால் உறிஞ்சப்படுகின்றன. இந்தப் பகுதியானது கடலின்  luminous பகுதி என அழைக்கப்படுகின்றது. இதனால் 1% ஆன சூரியக் கதிர்கள் 150மீ பகுதியிலும்0.01% ஆன சூரியக் கதிர்கள் 200மீ பகுதியிலும் தென்படுகின்றன.

எனவேஆழ்கடல் இருள்களால் சூழ்ந்தது என 1400 வருடங்களிற்கு முன்னே அல்குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டு விட்டது.

ஆழ்கடல் அலைகள்.

ஆழ்கடலில் வித்தியாசமான அடர்த்தியுள்ள நீர் ஒன்றுடன் ஒன்று தடுக்கப்படுவதால் ஆழ்கடல் அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. 

ஆழ்கடலின் நீரின் அடர்த்தி அதற்கு மேலுள்ள நீரின் அடர்த்தியிலும் பார்க்க கூடுதலாகும். சமுத்திரங்களின் அல்லது கடலின் மேற்பகுதியிலுள்ள கடலலைகளைப் போன்றதே ஆழ்கடல் அலைகளும். ஆழ்கடல் அலைகள் மனித வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால்,ஆழ்கடலின் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் நீரின் வெப்பநிலை,உப்பின் தன்மை ஆகியவற்றின் மாறுதல்களை ஆராய்வதன் மூலம் கண்டறியலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை பாலைவனப் பிரதேசத்தில் சமுத்திரங்களுக்கெல்லாம் தொலைவில் அமைந்திருந்தது. அவர்கள் சமுத்திரங்களுக்கிடையே எந்த பயணங்களும் மேற்கொண்டதும் இல்லை. சமுத்திரங்களைப் பற்றிய இத்தகவல்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கு எந்தவித வழியும் இருந்திருக்கவில்லை.  

எனவே, 1400 வருடங்களுக்கு முன் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றாக குர்ஆன் இருப்பதற்கு எந்த வகையிலும் சாத்தியமில்லை. குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ்வின் கூற்றேயாகும்.

No comments:

Post a Comment