பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.இந்தியாவில் வேலை இல்லை என்று முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல்நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருகின்றனர்.
கணவன் இருந்தும், இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும், இல்லாத நிலையில் வளரும் பிள்ளை. மகன் இருந்தும், இல்லாத நிலையில் வாடும் பெற்றோர்கள்.
இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறையிலும் ஏராளமான வேலைவாய்புகள் குவிந்து கிடக்கின்றன. இருந்தும் ஏன் நமக்கு இந்த நிலை?
உள்நாட்டிலேயே பல லட்சம், மாத சம்பளம் தரக்கூடிய வேலைவாய்ப்பினை தேர்ந்தெடுப்பதற்கு நமக்கு போதிய வழிகாட்டுதல்கள் இல்லை. இதை களைவதற்கு தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரக்கூடியஅக்டோபர் மாதம் 16ஆம் தேதிவேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் கோவையில் நடைபெற உள்ளது. இதில்,
அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது?Interview செல்வதற்கு முன் கவனிக்கவேண்டிய விசயங்களான Resume எவ்வாறு தாயார் செய்வது? ஆங்கில உரையாடல், வார்த்தை பயன்பாடு, குழு விவாதம்(Group Discussion), ஆங்கில மொழி தொடர்பு போன்றவற்றை பற்றி தெளிவாக விளக்கப்படும்.
IIT, IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது?
மாதம் சில லட்சங்களில் சம்பளம் தரக்கூடிய வேலைகள் எவையெவை?
உள்ளிட்ட இன்னும் ஏராளமான வினாக்களுக்கு விடை காண October-16 கோவை நோக்கி புறப்படுங்கள்………
உங்களை அண்டி வாழக்கூடிய மக்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியபடுத்துங்கள். நல்ல வேலையை உள்நாட்டில் தேடி கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
கொள்கை உறுதியுடன் கூடிய வளமான வேலைவாய்ப்பினை பெற்றிட அழைக்கிறது.
TNTJ, மாணவரணி, கோவை மாவட்டம்
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:நல்ஆயன் சமூகக்கூடம், கோட்டை மேடு, கோவை
நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை…
தொடர்புக்கு:
91501 25010- அஜ்மல்-மாவட்ட மாணவரணி செயலாளர்
91501 25001-ஜலால் அஹ்மத்-மாவட்ட தலைவர்
91501 25002-நவ்சாத்-மாவட்ட செயலாளர்
இந்தியா என்பது பல வளங்களை கொண்ட நாடு ! அன்றைய இந்தியா உலகின் கவனத்தை கவர்ந்து பலரின் தேடல்களுக்கு ஆளான காரணம் இம்மண்ணில் உள்ள விலை மதிப்பற்ற தாதுக்களும் , ஏலக்காய் போன்ற பணப்பயிர்களும் தான். இன்றைய இந்தியா உலகின் கவனத்த்தை தன் பக்கம் இழுப்பதற்கு காரணம் இங்குள்ள மனித வளம்.
இறைவனின் திருப்பெயரால்..
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
இந்தியா என்பது பல வளங்களை கொண்ட நாடு ! அன்றைய இந்தியா உலகின் கவனத்தை கவர்ந்து பலரின் தேடல்களுக்கு ஆளான காரணம் இம்மண்ணில் உள்ள விலை மதிப்பற்ற தாதுக்களும் , ஏலக்காய் போன்ற பணப்பயிர்களும் தான். இன்றைய இந்தியா உலகின் கவனத்த்தை தன் பக்கம் இழுப்பதற்கு காரணம் இங்குள்ள மனித வளம்.உலக வல்லரசாவதற்கு சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் இடையே பெரும் போட்டி நடைபெறும் இச்சூழலில் இந்தியா சில முக்கியமான நிலைகளில் சீனாவைவிட சிறந்து விளங்குகிறது. அதில் ஒன்று இங்குள்ள இளைஞர்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 20 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் சதவீதம் 47%, இது சீனாவை விட மிக அதிகம். இந்த ஒரு காரணி மட்டுமே இந்தியாவை உலக அரங்கில் முண்ணணியில் இருக்கச் செய்யும், ஆனால் அதற்கு நம் இளைஞர்கள் முழுத்தகுதியும் திறமையும் உள்ளவர்களாக தம்மை வளர்த்து கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் இந்தியாவில் நூற்றுக்கு 11 பேர் வேலையில்லாதவர்கள்ஆனால் சீனாவில் இது வெறும் 4 தான். இந்நிலையை மாற்றவும் உங்களின் சொந்த தேவைகளையும் , குடும்பத்தின் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டு வளமோடும் , வசதியோடும் நீங்கள் வாழ, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை மெருகேற்றி வெளிக்கொண்டு வரவேண்டும்.
உங்களின் திறமைகளை உங்களுக்கு அடையாளம் காட்டவும், எளிமையாக சிறந்த வேலைகளை பெறுவது எப்படி என்று வழிகாட்டவும் , இந்திய குடிமை பணிகளான (UPSC) IAS, IPS தேர்வுகள் குறித்து உங்களுக்கு விளக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியின் சார்பாக வேலைவாய்ப்பு வழிகாட்டி-2011 எனும் நிகழ்ச்சியை நடத்த உள்ளோம் (இறைவன் நாடினால்) , இந்நிகழ்ச்சியில் பேசப்பட உள்ள சில கருத்துக்கள்
- BIODATA / CV எவ்வாறு தயார் செய்வது? எவ்வாறு செய்யக் கூடாது?
- GD (Group Discussion) என்பதை எவ்வாறு வெற்றிகரமாக அமைத்துகொள்வது
- Personality Development ஏன் தேவை ? எவ்வாறு அடைவது?
- வேலையை பெற வாய்மை அவசியமா?
- நேர்முகத்தேர்வில் பின்பற்ற வேண்டியவகள் என்ன?
- எதிர்மறை நிகழ்வுகளை எவ்வாறு கையாள்வது?
- நேர்மறை நிகழ்வுகளை எவ்வாறு பார்ப்பது ? எவ்வாறு எடுத்து கொள்வது?
- தொடர்ந்து வெற்றி பெற முடியுமா?
இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க காத்திருக்கிறோம்.
இடம் : நல் ஆயன் சமூக கூடம் – கோட்டைமேடு
நாள்: 16/10/11 காலை 9:30 முதல் 1:30 மணி வரை
நாள்: 16/10/11 காலை 9:30 முதல் 1:30 மணி வரை
கலந்து கொள்ளுங்கள்! உங்கள் தோழர்களோடு!
அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – மாணவர் அணி
கோவை மாவட்டம்
கோவை மாவட்டம்


No comments:
Post a Comment