Monday, 20 February 2012

நபி மீது பொய் கூறும் நாகூர் ஹனீபா.


இஸ்லாமிய கீதம் என்ற பெயரில்....

நபி மீது பொய் கூறும் நாகூர் ஹனீபா.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய கீதம் இசைப்பதில் பிரபலமானவர் நாகூர் ஈ.எம்.ஹனீபா இவருடைய பாடல்களுக்கு முஸ்லீம்களுக்கு மத்தியில் மட்டுமன்றி முஸ்லீம் அல்லாத மக்களுக்கு மத்தியிலும் பெரிய மவுசு உள்ளது.

ரமழான் காலத்தில் இலங்கையின் பல வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் ஹீரோ இவராகத் தான் இருப்பார். ஆனால் இவர் ராகம் போட்டு இசைக்கும் பாடல்கள் இஸ்லாத்தின் உண்மைக் கருத்தை இல்லாதொழிக்கும் அளவுக்கு ஆபத்தானவை என்பது பலருக்குத் தெரியாத உண்மையாகும் அதனால் இவர் பற்றிய தெளிவுக்காக சகோதரர் ஷம்சுல் லுஹா அவர்கள் எழுதிய இவ்வாக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.

ஒரு திரைப்படம் வெண் திரையில் ஓடத் துவங்கியதும் அதில் முதல்காட்சியாக இடம் பெறுவது தெய்வ வணக்கம் தான்அந்தப் படத்தின்தயாரிப்பாளருடைய குல தெய்வத்தைக் காட்டிஅதற்குப் பத்திசாம்பிராணி,குத்து விளக்கு வைபவ காட்சிகள் முதலில் இடம் பெற்ற பின்னர் தான்மற்ற காட்சிகள் துவங்கும்இதற்கு அடிப்படைக் காரணம் ஒரு காரியத்தின்ஆரம்பம் தெய்வ வழிபாட்டில் துவங்க வேண்டும் என்பது தான்.

திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தங்கள் பக்தியைஇப்படி வெளிப்படுத்துகின்றன என்றால்மதச் சார்பின்மையைஅடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசு தொலைக்காட்சிகள்,வானொலிகள் போன்றவை நம் நாட்டிலுள்ள மூன்று பெரிய மதங்களுக்குமுக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தத்தமது நிகழ்ச்சிகளைத் துவங்கும்முன் இந்துமுஸ்லிம்கிறித்தவப் பாடல்களை ஒளிஒலி பரப்புகின்றன.

இந்தப் பாடல்களில் இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் இடம் பெறும்இஸ்லாமிய (?) பாடகர் இன்னிசை முரசு நாகூர் .எம்ஹனீபா ஆவார்.இவரது புகழ் இந்தியாஇலங்கை மட்டுமல்லாது தமிழ் முஸ்லிம்கள் வாழும்இடங்களிலெல்லாம் கொடி கட்டிப் பறக்கின்றது.

மாற்று மத நண்பர்கள் கூட நம்மிடம் பேசும் போதுதான் இஸ்லாமியமார்க்கத்தை நேசிக்கும் ஓர் இனிய நேயர் என்பதை வெளிப்படுத்திக்காட்டுவதற்காக, "பாய்நான் நாகூர் அனிபா பாடல்களை ரொம்பவும்விரும்பிக் கேட்பேன்'' என்று கூறுவர்.

இதன் மூலம் அவர்களது இஸ்லாமிய விசுவாசத்தை எண்ணி நாம்மகிழ்வோம் என்பதற்காக மாற்று மதத்தவர்கள் பலர் இவ்வாறு கூறுவதைநாம் கேட்டிருக்கிறோம்அந்த அளவுக்கு பக்திப் பாடல்களில் முன்னணிப்பாடகராக நாகூர்    ஹனீபா இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இரு பெருநாட்களில் .எம். ஹனிபா பாடல்கள்.

அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிவானொலி அலை வரிசைகள் இருபெருநாட்களின் போது முஸ்லிம்களுக்காக .எம்ஹனீபாவின் பாடல்களைஒலிஒளி பரப்பி தங்களது மதச் சார்பின்மையை நிரூபித்துஇஸ்லாமியநேயர்களின் வரவேற்பையும் பெற்று விடுகின்றார்கள்மற்றவர்களேஇஸ்லாமியப் பாடல்களுக்கு இப்படி ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கும்போதுமுஸ்லிம்கள் இந்த இஸ்லாமியப் பாடல்களில் தங்களதுமுத்திரையைப் பதிக்காமல்இசை முரசுவின் பாடலைக் கேட்டு தங்கள்ஈமானைப் புதுப்பிக்காமல் விடுவார்களா?

மார்க்கத்தில் மிக அழுத்தமான அளவுக்கு இஸ்லாமியப் பிடிப்புள்ள மக்கள்ரமளான் மாதத்தின் ஸஹர் நேரத்தில் பாங்குபயானுக்காக உள்ள ஒலிபெருக்கிகளில் இசை முரசின் பாடல்களை ஒலிபரப்பி முஸ்லிம்களைப்புல்லரிக்கச் செய்து விடுவார்கள்.

வெள்ளிக்கிழமையின் போது தங்கள் வீடுகளில் நாகூர் ஹனீபா பாடல்களைடேப் ரிக்கார்டர்களில் போட்டுக் கேட்டுதங்கள் இஸ்லாமியப் பற்றுதலைவெளிக் காட்டும் முஸ்லிம்கள் ஏராளம் உள்ளனர்.

தங்கள் வீட்டில் நடக்கும் பெயர் சூட்டு விழாகத்னாபெண்குழந்தைகளுக்குக் காது குத்துதல்பூப்புனித நீராட்டு விழா மற்றும்கல்யாண வைபவங்களில் நாகூர் ஹனீபாவின் பாடல்களை அலற விட்டுதங்களது அபாரமான மார்க்க பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

ஹனிபா பாடல்கள் மீது அப்பாவி மக்கள் தான் பக்திகொண்டிருக்கின்றார்கள் என்றால்  ஆலிம் பெருந்தகைகளும் இதற்கு சற்றும்சளைத்தவர்கள் அல்லதமிழகம் மற்றும் இலங்கையின் பெரும் பெரும்மார்க்க மேதைகள் முதல் சாதாரண கடைநிலை ஆலிம்கள் வரைஉரையாற்றும் மேடைகளில் சொற்பொழிவு துவங்கும் முன் நாகூர்ஹனீபாவின் பாடல்களை ஒலி பெருக்கிகளில் அலற விட்டு ஆனந்தம்அடைகின்றனர்.

நாகூர் ஹனீபா வெறும் கேஸட் வடிவில் மட்டுமல்லாது தனது மேடைக்கச்சேரிகள் மூலமும் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கின்றார்.

தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம் என்று ஒரு பாடகர்பாடலில் தான் தர்ஹாக்களுக்குப் பயணம் செய்தார் என்றால்நாகூர்ஹனீபா தன் பாட்டுக் கச்சேரியுடன் நேரிலேயே அனைத்துதர்ஹாக்களுக்கும் பயணம் செய்திருக்கின்றார்தமிழகத்தில் அவரது பாதம்படாதபாட்டுக் கச்சேரி நடக்காத எந்தவொரு பட்டி தொட்டியும் இல்லைஎன்ற அளவுக்கு தமிழகத்தின் தர்ஹா வரலாற்றில் பதிவாகியிருக்கின்றார்.

அந்தந்தப் பகுதிகளில் அடங்கியிருக்கும்பைசாவுக்குத் தேறாதஅவ்லியாக்கள் கூட இவரது பாடல் வரிகளுக்குள் நுழைந்து அதன் மூலம்பிரபலம் அடைந்திருக்கின்றார்கள் என்றால் இவரது பாட்டின் மகிமையைநாம் என்னவென்று சொல்வது?   இந்தப் பாடல்கள் மீது முஸ்லிம்கள்கொண்ட உண்மையான இஸ்லாமிய (?) ஈடுபாட்டை என்னவென்றுவர்ணிப்பது?

ஆலிம்கள் போதனையும், ஹனிபாவின் கீர்த்தனையும்.

தமிழகத்திலும், இலங்கையிலும் மீலாது விழாக்கள் நடைபெறும் போதுஅங்கு புகழ் பெற்ற ஆலிம் அறிஞர்களின் போதனை நடக்கும்அதன் பின்ஹனீபாவின் வெண்கலக் குரல் கீர்த்தனையும் இசை ஆராதனையும்நடைபெறும்.

மீலாது விழா ஏற்பாடு செய்த விழாக் குழுவினர்கச்சேரி தொடங்கும்மகிழ்ச்சியில்அது வரை அண்ணல் நபி (ஸல்அவர்களைப் பற்றிஆவேசமாகப் புகழ்ந்து பேசிய ஆலிம் பெருமக்களுக்கு வழிச் செலவுக்குப்பணம் கொடுக்கக் கூட மறந்து விடுவார்கள்இதன் எதிரொலியாக கச்சேரிநடக்கும் மேடைகளில் நாங்கள் பயானுக்கு வர மாட்டோம் என்று   கூடஅறிஞர் பெருமக்கள் முடிவெடுத்தார்கள் என்றால் இன்னிசை முரசின்ஆதிக்கம் எந்த அளவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஊடுறுவி இருக்கின்றதுஎன்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த அளவுக்குப் பாமர முஸ்லிம்களுக்கு மத்தியில் தனது பாடல்களால்ஊடுறுவி இருக்கும் இவரது பாடல்கள் தமிழகத்து முஸ்லிம்களுக்குமத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றால் மிகையல்ல!

தவ்ஹீதுவாதிகளின் இதயத்தில் இவருக்குக் கடுகளவு கூட இடமில்லைஎன்றாலும்இஸ்லாமிய பக்திப் பாடல்கள் என்ற பெயரில் தன் வீட்டில்இவரது பாடல் பதிவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பாமரன்தனது ஈமானைப் பறி கொடுத்து விடாமல் பாதுகாப்பது ஒவ்வொருஏகத்துவவாதியின் கடமை என்பதற்காகவும்நபி (ஸல்அவர்கள் மீது யார்பொய்யைப் பரப்பினாலும்அந்தப் பொய்யைஅந்தப் பொய் முகத்தினரைஅடையாளம் காட்டுவது நமக்குக் கடமை என்றஅடிப்படையில் நமது ஆய்வுப் பார்வையை இங்கு படர விடுகின்றோம்.

காசுக்காக கடவுளைத் திட்டும் கவிஞர்கள்.

பொதுவாகக் கவிஞர்கள் காசுக்காக யாரையும் கடவுளாக்கத் தயங்கமாட்டார்கள்அந்தக் காசுக்காக கடவுளைத் திட்டவும் பயப்பட மாட்டார்கள்.அவர்களுக்குக் கடவுளே காசு தான்.

அவனை அழைத்து வந்து ஆடடா ஆடு என்று ஆட விட்டுப்பார்த்திருப்பேன்வருவான்படுவான்பட்டதே போதும் என்பான்பாவிஅவன் பெண் குலத்தைப் படைக்காமல் இருந்திடுவான் என்று இந்தக்கவிஞன் கடவுளைப் பாவியாகச் சித்தரிக்கின்றான்.

கண்ணைப் படைத்துபெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்றுஇறைவனைக் கொடியவனாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றான்.இதெல்லாம் கவிஞர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாதுஇதில் வேடிக்கைஎன்னவென்றால் இந்தக் கவிஞர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கையில்ஊறிப் போன பக்தர்கள் என்பது தான்இந்த ரகத்தில் உள்ளவர் தான் நாகூர்ஹனீபா.

இறைவனிடம் கையேந்துங்கள்அவன் இல்லை என்று சொல்லுவதில்லைஎன்று ஒரு தட்டில் ஏகத்துவத்தை முழங்குவார்மறு தட்டில்அடியார்க்குஅருள் செய்யும் அம்மாஅழகான கடலோரம் வாழ்கின்ற பீமா என்றுஏகத்துவத்திற்கு வேட்டு வைப்பார்.

ஏகத்துவத்தை நிலைநாட்டும் கருத்துக்களை விட அதற்கு வேட்டுவைக்கும் கருத்துக்களைக் கொண்ட பாடல்களே அதிகம்.

நமனை விரட்ட மருந்தொன்று இருக்கின்றது நாகூர் தர்ஹாவிலே!

ஷாஹே மீரான் சஞ்சலம் தீர்க்கும் எங்கள் கஞ்ச ஷவாயே!

நீ எங்கே எங்கே ஷாகுல் மீரானேஉன் வாசல் தேடி வந்தேன் நாகூர்மீரானே!

என்று விஷம் கக்கும் வரிகளைக் கொண்ட இவருடைய பாடல்களைஅடுக்கிக் கொண்டே போகலாம்.

நபி (ஸல்அவர்களையும்முஹய்யித்தீன்ஷாகுல் ஹமீது ஆகியோரைஒரு பக்கத்திலும்அண்ணாகருணாநிதியை இன்னொரு பக்கத்திலும்கடவுளைப் போன்று சித்தரித்து மகிழ்வதுடன் மட்டும் நின்று விடாமல் நபி(ஸல்அவர்கள் மீது பொய்யான செய்திகளை இட்டுக் கட்டிதனதுபாடல்களில் பாடியிருக்கின்றார்.

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன் நோன்பு நோற்றுஇறந்துவிட்டான்அவனை ஒரு சாது வந்து உயிர்ப்பித்தார் என்று ஒரு பாடலில்பாடினார்.

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை என்று ஏதோ ஒரு சம்பவத்தைத்தனது பாடலில் கூறினார்.

இவையெல்லாம் நபி (ஸல்அவர்கள் சம்பந்தப்படாத செய்திகள் என்பதால்அவற்றை நாம் ஆராயத் தேவையில்லைஆனால் நபி (ஸல்அவர்களைப்பற்றிய பொய்யான செய்திகளைத் தனது பாடல்களில் பாடுவதை நாம்அடையாளம் காட்டாமல் இருக்க முடியாது.

நபி (ஸல்அவர்கள் தினந்தோறும் ஒரு வீட்டு வழியாக சென்றுகொண்டிருந்தார்களாம்அவர்கள் அவ்வாறு செல்லும் போது அந்தவீட்டில் உள்ள மூதாட்டி நபி (ஸல்அவர்கள் மீது குப்பையைக்கொட்டிக் கொண்டிருந்தாளாம்ஒரு நாள் குப்பையைக்கொட்டவில்லைஉடனே நபி (ஸல்அவர்கள் அந்த மூதாட்டிக்குஎன்ன ஆனதுஎன்று விசாரிக்கின்றார்கள்அவள்நோயுற்றிருக்கின்றாள் என்று தெரிய வருகின்றதுஉடனே நபி (ஸல்)அவர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டுக்குச் சென்று அவளை நோய்விசாரிக்கின்றார்கள்நபி (ஸல்அவர்களின் இந்தப் பெருந்தன்மையைக் கண்டு வியந்துஇப்படிப்பட்ட நல்ல பண்பாளர் மீதாநாம் குப்பையைக் கொட்டினோம் என்று வருந்தி இஸ்லாத்தில்இணைகின்றாள்.

இசை முரசு .எம்ஹனீபா இதயத்தை ஈர்த்துஇரக்கமுறச் செய்யும்வண்ணம் தன் பாட்டில் வடித்த சம்பவம் இது தான்சொல்வதற்குச்சுவையாகவும்கேட்பதற்கு ரசனையாகவும் உள்ள இந்தச் செய்திமுஸ்லிம்களிடம் மட்டுமல்லமாற்று மத நண்பர்களும் இதை மேற்கோள்காட்டும் அளவுக்கு அந்தப் பாட்டில் இடம் பெற்றுள்ள இந்தக் கருத்துபரவியுள்ளதுஇதை நபி (ஸல்அவர்களின் வாழ்வின் நிகழ்ந்த ஒருசிறப்பு நிகழ்வு என்று கருதி முஸ்லிம்கள் நடத்தும் விழாக்களில் வந்துசொற்பொழிவாற்றும் போது குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இப்படியொரு சம்பவம் நபி (ஸல்அவர்களின் வாழ்வில்நடந்ததாக எந்தவொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூலிலும் இடம்பெறவில்லைஎனவே இது நபி (ஸல்அவர்கள் மீது சொல்லப்படும்அப்பட்டமான பொய்யாகும்.

ஒரு நாள் மதீனா நகர்தனிலே... என்று துவங்கும் ஒரு பாடல்அந்தப்பாடலின் கருத்து இது தான்.

ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்அவர்கள் தமது தோழர்களுடன்அமர்ந்திருக்கும் போதுஇறுதி நாள் வரப் போகின்றதுஅதனால்அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள்என் மீது ஏதும் குறைஇருந்தாலும் அதைச் சொல்லுங்கள்அதை நான் நீக்கிக் கொள்கிறேன்என்று கூறினார்கள்அப்போது உக்காஷா என்ற நபித் தோழர் எழுந்து,தங்கள் மீது எனக்கு ஒரு குறை உள்ளது என்று கூறினார்உடனே நபித்தோழர்கள் அவர் மீது ஆவேசப் பட்டனர்நபி (ஸல்அவர்கள் நபித்தோழர்களை அமைதிப் படுத்தி விட்டுஅந்தக் குறையைச் சொல்லுங்கள்என்று உக்காஷாவிடம் கூறுகின்றார்கள்.

பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது தாங்கள் அமர்ந்திருக்கும் போதுநான்ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தேன்நீங்கள்சாட்டையால் ஒட்டகத்தை அடிக்கும் போது சட்டென்று ஓர் அடி என் மீதுவிழுந்து விட்டதுஅதற்குப் பதிலாக தங்களை நான் அடித்திட அனுமதிவேண்டும் என்று உக்காஷா கூறினார்எதிலும் நீதி தவறாத நபி (ஸல்)அவர்கள் அவரது கோரிக்கையை ஏற்றார்கள்அப்போது உக்காஷாஎன்னைஅடித்த சாட்டை இங்கு இல்லைஅது தங்களின் வீட்டில் உள்ளதுஎனதுஎண்ணம் நிறைவேற அதை எடுத்து வரச் சொல்லுங்கள் என்று கூறினார்.உடனே நபி (ஸல்அவர்கள்பிலாலை அனுப்பி அதை எடுத்து வருமாறுகூறினார்கள்.

பிலால் (ரலிஅழுது கொண்டே நபி (ஸல்அவர்களின் வீட்டுக்குச் சென்றுஅங்கிருந்த ஃபாத்திமா (ரலி)யிடம் சபையில் நடந்ததைக் கூறினார்கள்.உடனே ஃபாத்திமா (ரலிஅழுதுஉடல் நலம் சரியில்லாத என் தந்தையார்இந்தத் தண்டனையை எப்படித் தாங்குவார்கள்அதற்குப் பதிலாக எங்களைஅடிக்கச் சொல்லுங்கள் என்றார்பெருமை நிறைந்த பாட்டனாருக்குப்பதிலாக எங்களை அடிக்கட்டும் என்று ஹஸனும்ஹுசைனும் கூறி விட்டுசாட்டையை எடுத்துக் கொண்டு சபைக்கு வந்தார்கள்சாட்டையை வாங்கிநபி (ஸல்அவர்கள் உக்காஷாவிடம் கொடுத்தார்கள்அதை வாங்கியஉக்காஷாஎன்னை நீங்கள் அடிக்கும் போது நான் சட்டையில்லாமல்இருந்தேன்எனவே நீங்களும் சட்டையைக் கழற்றுங்கள் என்று கூறினார்.அப்போதும் நபித்தோழர்கள் ஆவேசப்பட்டனர்நபி (ஸல்அவர்கள்அமைதிப்படுத்தி விட்டுதமது சட்டையைக் கழற்றினார்கள்அப்போதுஉக்காஷா சாட்டையைத் தூக்கி எறிந்து விட்டு ஓடி வந்துஆவலுடன் நபி(ஸல்அவர்களைத் தாவி அணைத்துக் கொண்டார்நுபுவ்வத் ஒளிரும் நபி(ஸல்அவர்களின் முதுகில் தான் நினைத்தது போல் முத்தமிட்டார்.உணர்ச்சி பொங்க மீண்டும் முத்தமிட்டார்நபி (ஸல்அவர்கள்,உக்காஷாவின் மனம் மகிழஉமக்கு சொர்க்கம் உண்டு என்று கூறி துஆச்செய்தார்கள்சுற்றி நின்ற நபித் தோழர்கள் வாழ்த்து தெரிவிக்கமஸ்ஜிதுந்நபவீ மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

இவ்வாறாக ஒரு நீண்ட சம்பவத்தைத் தன்னுடைய கம்பீரமான குரலில்ஏற்றஇறக்கத்துடன் நாகூர் ஹனீபா பாடுவதைக் கேட்கும் யாரும் அதில்லயித்து விடுவார்கள்நபி (ஸல்அவர்களின் வாழ்வில் நடந்ததாகச்சொல்லப்படும் அந்த நிகழ்ச்சியை எண்ணிபுல்லரித்து விடுவார்கள்இந்தச்சம்பவம் உண்மையானதா என்பதைப் பார்ப்போம்.

ஏறக்குறைய இது போன்ற ஒரு செய்தி தப்ரானியின் முஃஜமுல் கபீர்என்ற நூலில் 2676வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் இது பலவீனமானஇட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் முன்இம் பின் இத்ரீஸ் பின்ஸினான் என்பவரைப் பொய்யர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள்விமர்சித்துள்ளார்கள்.

பொய்யர்ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடியவர் என்று மஜ்மஉஸ்ஸவாயிதில் ஹைஸமீ கூறுகின்றார்.

வஹப் என்பவர் மீது இவர் பொய் சொல்பவர் என்று அஹ்மத் இப்னுஹம்பல் கூறுகின்றார்இப்னுல் மதீனிஅபூதாவூத்நஸயீ ஆகியோர் இவர்நம்பகமானவர் இல்லை என்று கூறுகின்றார்கள்இவர் ஹதீஸ்களில்மோசமானவர் என்று இமாம் புகாரி கூறுகின்றார்இவரை ஆதாரம்கொள்வது ஹலால் இல்லை என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்.இவரும் இவரது தந்தையும் விடப்பட்டவர்கள் என்று தாரகுத்னீகூறுகின்றார். (நூல்இப்னுல் ஜவ்ஸீயின் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)

எனவே இந்தச் செய்தி பலவீனமானஇட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும்.இந்தச் செய்தியின் அடிப்படையில் இயற்றப்பட்ட நாகூர் ஹனீபா பாடலும்நபி (ஸல்அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்ட ஒரு செய்தியைஅடிப்படையாகக் கொண்ட பாடல் என்பதில் சந்தேகமில்லை.

எந்தத் தலைவர் மீதும் யாரும் எந்தச் சம்பவத்தையும் சொல்லி விட்டுப்போகலாம்அதைச் சொல்பவருக்கு அதனால் பெரிய அளவுக்குப் பாதிப்புவந்து விடாதுஆனால் அதே சமயம் நபி (ஸல்அவர்கள் மீதுஅவர்கள்சொல்லாததைசெய்யாததைஅங்கீகரிக்காததைச் சொன்னால் அவர் போய்சேருமிடம் நரகம் ஆகும்இதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

"என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய்சொல்வதைப் போன்றதல்லஎன் மீது வேண்டுமென்று பொய்சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூற நான்செவியுற்றேன்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி)நூல் : முஸ்லிம்.

நபி (ஸல்அவர்கள் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் சொல்லாததைச்சொன்னதாகச் சொல்பவருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும்.

இந்த எச்சரிக்கையைத் தாங்கி நிற்கும் அறிவிப்புத் தொடர்கள் கிட்டத்தட்ட72 வழிகளில் இடம்பெறுகின்றனஇந்த அடிப்படையில் இந்தச் செய்திமுதவாத்திர் என்ற தகுதியைப் பெற்று விடுகின்றதுமுதவாதிர் என்றால்ஏராளமானவர்களால் ஒருமித்து அறிவிக்கப்படும் ஹதீஸ்களாகும்.

கேட்பதற்கு இனிய சம்பவமாக இருந்தாலும் அதை நபி (ஸல்அவர்கள்மீது இட்டுக் கட்டி கூறினால் அவ்வாறு கூறுபவர் செல்லுமிடம் நரகம்தான்அந்த அடிப்படையில் நாகூர் ஹனீபா தன்னுடைய பாடலுக்குச்சரியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்அல்லது தான் பாடிய அந்தப்பாடல் தவறானது என்று பகிரங்கமாக பிரகடனப் படுத்த வேண்டும்.

அவ்வாறு அவர் செய்ய முன் வரவில்லை என்றால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்களின் எச்சரிக்கைப் படி நரகத்தில் ஓர் இடத்தை முன் பதிவுசெய்து கொள்கின்றார் என்றே அர்த்தம்.

இந்த நாகூர் ஹனீபா மற்றும் இது போன்ற இஸ்லாமிய (?) பாடகர்களால்பாடப்படும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாடல்களையும்நபி (ஸல்)அவர்கள் மீது பொய்யுரைக்கும் பாடல்களையும் இஸ்லாத்தின் ஓர்அங்கமாக எண்ணிகேட்டு ரசித்துக் கொண்டிருப்பவர்கள் இனியாவதுதிருந்த வேண்டும்.

No comments:

Post a Comment