Monday, 20 February 2012

கற்றதை நினைவில் வைத்துக்கொள்ள சில தகவல்கள்



கற்றதை நினைவில் வைத்துக்கொள்ள சில தகவல்கள்
தினமும் பல செய்திகளை நாம் தெரிந்து கொள்கிறோம்கற்றுக் கொள்கிறோம்.அவற்றில் அவசியமான தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளநினைப்போம்ஆனால் மறந்துவிடும்காரணம்கற்கும் பழக்கத்தைக்கடைபிடிக்கும் நாம்கற்றதை நினைவில் வைத்திருக்கும் வழிமுறைகளைதெரியாமலும்,சரிவர கடைபிடிக்காமலும் இருப்பதுதான்ஆதாலால் கற்பதைநினைவில் வைத்துக் கொள்ள சில தகல்களை தெரிந்து கொள்வோம்...வாருங்கள்...
மனிதனின் நினைவாற்றல்!

ஒரு மனிதன்அரைமணி நேரத்தில் தான் பெற்ற விவரங்களில் 40சதவீதத்தைமறந்துவிடுகிறான் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியிருக்கிறதுமறுநாள்அவன் 34சதவீதத்தையே நினைவில் கொள்கிறான்மூன்று நாட்களுக்குப் பின்னர்அவனால் 25சதவீதத்தை நினைவில் தக்கவைக்க முடிகிறதுஆரம்பநாட்களுக்குப் பின் நினைவு தீவிரமாக வீழ்ச்சியடைந்தகிடைமட்டமாகஓடுகிறது.

மீண்டும் மீண்டும் கூறுதல் அல்லது படித்தலே நினைவில் நிறுத்தலின்அடிப்படை. ஒரு விஷயத்தைக் கற்றபிறகு பின்னர் அதை 15 -20நிமிடங்களுக்குப்பின்பும், 8 - 9மணி நேரத்திலும்24மணிக்குப் பின்பும் நினைவுபடுத்திப் பார்ப்பதுஅவசியம்படுக்கைக்குச் செல்வதற்கு 15 -20நிமிடங்களுக்கு முன்னரும்காலைபடுக்கையை விட்டு எழுந்தவுடனும் ஒரு முறை நினைவுபடுத்திப் பார்ப்பதுபயனளிக்கும்.

முறையான ஓய்வும் முக முக்கியமானதாகும். 30நிமிடங்கள் முழுமையாக வேலையின்றி இருப்பவர்கள் தாம் காண்பவற்றில் 50 - 55சதவீதத்தை நினைவுபடுத்திக் கூறிவிட முடியும். ஆனால் அந்த நேரத்தில் வேறு ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் 25சதவீதத்தையே மீண்டம் கூற முடியும் என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது.

உங்களது நினைவாற்றலைக் கூர்மையாகவும், தீவிரமாகவும் வைத்திருங்கள். வெறுமனே திருப்பித் திருப்பி ஒன்றைப் படிப்பதை விட அந்த வாசகத்தை நாமே புரிந்து, பின்னர் அதை நமது சொந்த வார்த்தைகளில் வெளியிடுவது பயன் தரும். எதையேனும் ஒன்றைப் படித்தபிறகு மனதில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களால் அதை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் உடனே புத்தகத்தைத் திருப்பாதீர்கள். நினைவுக்குக் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சற்றுக் கஷ்டப்பட்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பது நல்லது. நினைவாற்றலைப் பயிற்சியின் மூலம் வளப்படுத்த முடியும்....

நினைவாற்றல் 20 -  25வயது வரை வளர்ச்சியடைகிறது. 40 -45வயது வரை அது நிலையாக நீடிக்கிறது. அதற்குப் பின் பலவீனமடைகிறது. பிம்ப அடிப்படையிலான நினைவில் 75சதவீதம் நமது 25வயதுக்கு முன்னரே பெறப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் தர்க்க ரீதியான நினைவாற்றலுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.


நன்றி : (தினதந்தி இலவச இணைப்பு 4-2- 2012 / பக்கம் : 10)

No comments:

Post a Comment