பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலகை காண்பது என்பது மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்ச்சி. இந்த சாகச பயணத்திற்கு ஆகும் செலவு அதிகமில்லை 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் டாலர்கள் மட்டும்தான். பூமியின் கடைசி வளைவு பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனிலிருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் கதிரவன் உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள். அப்படி ஒரு ஹீலியம் பலூன் விண் கலத்தை ஸ்பெயின் ஜோஸ் மரியானோ லோபஸ் என்ற தொழிலதிபர் உருவாக்கி உள்ளார்.
வீடியோ
இதில் செல்பவர்கள் பூமியின் தரைமட்டத்திற்க்கு மேல் 22 மைல் உயரத்தில் பயணம் செய்வார்கள். இந்த ஹீலியம் பலூன் விண்கலம் 2 பைலட்டுகள் உட்பட 6 அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும். ஹீலியம் வாயு எந்த ஒரு பொருளையும் உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது. இந்த கலம் விண்வெளி பகுதியை அடைய சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
No comments:
Post a Comment