தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு பட்டூர் கிளையில் கடந்த 18-9-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் மாநில செயலாளர் சகோ யுசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நடத்துவதற்கு பல்வேறு இடையூறுகள் செய்யப்பட்ட போதிலும் இறைவனது கிருபையால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு தரப்பிலிருந்த இடையூறுகள் வந்ததால் நிகழ்ச்சி நடத்த இடம் உருதி செய்யப்படாமல் இருந்த நிலையில் கொள்கைச் சகோதரர் ஒருவது தனது சொந்த க்ரவ்ண்டில் நிகழ்ச்சி நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்திருந்தார்.
திடீர் என்று மழை ஏற்பட்டால் க்ரவ்ண்ட மூலுவதும் தண்ணீர் தேங்கி விட்டது. உடனடியாக கொள்கைச் சகோதரர்கள் களத்தில் இறங்கி லாரியில் மண்ணை இறக்கி துரிதமாக செயல்பட்டு அதை சரி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்கைச் சகோதரர்கள் இடத்தை சீர் செய்யும் வீடியோ காட்சி
No comments:
Post a Comment