ஆர்ப்பாட்டம் போராட்டம்
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 15/05/2012
அன்று அம்பத்தூர் பகுதியில் ஹசீம் என்ற 4 வயது சிறுவன் தெரு நாய் கடித்து
உயிரிழந்ததையடுத்து அம்பத்தூர் நகராட்சியை கண்டித்தும், உயிரிழந்த
சிறுவனின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும், தெருக்களில் சுற்றித்
திரியும் நாய்ககளை ஒழித்துக்கட்டக் கோரியும் மாபெரும் ஆர்பாட்டம்
அம்பத்தூர் நகராட்சி முன்பு நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் சகோ யூசுப் அவர்கள் கண்டன உரையாற்றினார். கடுமையான வெய்லிலும்ஆண்களும், பெண்களும் குழந்தைகளோடு திரளாக கலந்து கொண்டனர். தடையை மீறி நடந்த காரணத்தினால் காவல் துறையினர் மக்களை கைது செய்தனர். சகோதர, சகோதரிகளின் பெயர்களை பதிவு செய்தபின்னர் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment