மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை தயாரிப்பதில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த புதிய இயங்கு தளம் மைக்ரோசாப் நிறுவனத்திற்கு இன்னும் பெருமை சேர்க்கும் என நம்பப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த இயங்கு தளம் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
அதாவது இந்த விண்டோஸ் 8 உயர்ந்த ரிசலூசன் கொண்ட டேப்லெட்டுகளை சப்போர்ட் செய்யும். அதனால் இந்த இயங்கு தளம் மூலம் மேம்பட்ட இமேஜ் ரிசலூசன் கொண்ட டேப்லெட்டுகள் இந்த புதிய இயங்கு தளத்தில் மிக அழகாக இயங்கும்.
மேலும் இந்த இயங்கு தளத்தில் மெட்ரோ யூசர் இன்டர்பேஸ் என்ற புதிய தொழில் நுட்பமும் இணைக்கப்பட இருப்பதால் இந்த இயங்கு தளம் உயர் அப்ளிகேசன்கள் மற்றும் மீடியா கன்டன்டுகளை மிக எளிதாக சப்போர்ட் செய்யும். அதுபோல் உயர் டென்சிட்டி கொண்ட ரிசலூசனை சப்போர்ட் செய்யும்.
அதுபோல் புதிய விண்டோஸ் 8 இயங்கு தளம் க்ராபிக்ஸ் அப்ளிகேசன்களையும் மிக அருமையாக சப்போர்ட் செய்யும். மொத்தத்தில் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளம் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்கள் மற்றும் உயர் பிக்சல் ரிசலூசனை சப்போர்ட் செய்யும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இந்த புதிய இயங்கு தளம் வெளிவரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவி்ல்லை.
No comments:
Post a Comment