Sunday, 1 April 2012

ரூ.4000க்கு புதிய ஆன்டராய்டு டேப்லெட்!


ரூ.4000க்கு புதிய ஆன்டராய்டு டேப்லெட்!

Wishtel Ira Thing iPad
விஸ்டல் இண்டியா சமீபத்தில் இரண்டு மலிவு விலை ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கிறது. இந்த இரண்டு டேப்லெட்டுகளுக்கும் ஐரா திங்க் மற்றும் ஐரா என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஐரா திங்க் ரூ.4000க்கும் ஐரா 5500க்கும் விற்கப்படுகின்றன.
விலை குறைவாக இருந்தாலும் இந்த 2 டேப்லெட்டுகளும் தொழில் நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் உயர்தர டேப்லெட்டுகளை ஒத்திருக்கின்றன.
இவை இரண்டுமே 800×480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளன. ஆனால் ஐரா திங்க் ரெசிஸ்டிவ் தொடுதிரையையும், ஐரா கப்பாசிட்டிவ் தொடுதிரையயும் கொண்டுள்ளது.
இந்த ஐரா டேப்லெட்டுகள் 800 மெகா ஹெர்ட்ஸ் சிபியு மற்றும் 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளன. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம். மேலும் வைபை, யுஎஸ்பி 2.0 போர்ட், கார்டு ரீடர், ஹெட்போன் துவாரம் மற்றும் 1.3 எம்பி முகப்பு கேமரா போன்ற வசதிகளையும் இந்த டேப்லெட்டுகள் வழங்குகிறன.
முக்கியமாக இந்த டேப்லெட்டுகள் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்குதளத்தில் இயங்குகின்றன. ஏறக்குறைய எல்லா அம்சங்களிலும் இந்த டேப்லெட்டுகள் ஒத்திருந்தாலும் பேட்டரியைப் பொருத்தமட்டில் ஐரா திங்க் 2200 மெகா ஹெர்ட்ஸ் பேட்டரியையும், ஐரா 2800 மெகா ஹெர்ட்ஸ் பேட்டரியையும் கொண்டிருக்கின்றன.
மேலும் இந்த டேப்லெட்டுகளில் வெப் ப்ரவ்சர், மீடியா ப்ளேயர், போட்டோ வியூவர், ஆபிஸ், எம்எஸ்என், ஸ்கைப், ஜிடாக், நோட்பேட், கடிகாரம் மற்றும் வானிலை போன்ற பல அம்சங்களை பார்க்கலாம்.
விஸ்டல் இந்தியாவின் தலைமை இயக்குனர் திரு. மிலின்ட் ஷா கூறும் போது இந்த ஐரா டேப்லெட்டுகள் இந்திய மக்களுக்கு டேப்லெட் தொழில் நுட்பங்களை எளிதாக்கிவிடும். மேலும் இந்த டேப்லெட்டுகளில் இந்திய மொழிகள் உள்ளதால் அவை இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்று கூறுகிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No comments:

Post a Comment