இரண்டு சூரியன்களைச் சுற்றி வரும் புறக்கோள் ஒன்று முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் கெப்லர் தொலைநோக்கி இதனைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
கெப்லர்-16 என்ற இரட்டைச் சூரியன்களைச் சுற்றி வரும் கெப்லர்-16பி
கெப்லர் 16பி (Kepler-16b) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புறக்கோள் சனிக் கோளைப் போன்று உயிரினங்கள் வாழமுடியாத குளிர்ந்த வளிமப் பெருங்கோள் எனக் கருதப்படுகிறது. இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 200 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.
கெப்லர் 16பி (Kepler-16b) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புறக்கோள் சனிக் கோளைப் போன்று உயிரினங்கள் வாழமுடியாத குளிர்ந்த வளிமப் பெருங்கோள் எனக் கருதப்படுகிறது. இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 200 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.
For more information visit www.kalvikalanjiam.com
கெப்லர்-16பி பற்றிய தகவல்கள் இன்றைய சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இரட்டைச் சூரியன்களைச் சுற்றும் கோள்கள் அண்டத்தில் காணப்படலாம் என முன்னர் வானியலாலர்கள் எதிர்வு கூறியிருந்தாலும், முதற்தடவையாக இப்போது தான் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. கெப்லர்-16பி கோளின் ஒரு நாள் நிறைவடையும் போது அதற்கு இரண்டு சூரிய மறைவுகள் காணப்படும். ஸ்டார் வோர்ஸ் திரைப்படத்தில் டாட்டூயின் என்ற கோள் ஒன்றில் இருந்து லூக் ஸ்கைவாக்கர் என்ற பாத்திரம் இரட்டைச் சூரியன் மறையும் காட்சியைக் காண்பது காண்பிக்கப்பட்டது. இது இப்போது உண்மையாகியுள்ளது.
இக்கோளின் இரண்டு சூரியன்களும் எமது சூரியனை விடச் சிறியதாகும். இரண்டு சூரியன்களையும் அது 229 நாட்களுக்கு ஒரு முறை 104 மில். கிமீ தூரத்தில் சுற்றுகிறது. இது கிட்டத்தட்ட வெள்ளியின் சுற்று வட்டத்தைப் போன்றதாகும்.
கெப்லர் தொலைநோக்கி 2009 ஆம் ஆண்டில் பூமிக்கு ஒத்த கோள்களைக் கண்டுபிடிப்பதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. கெப்லர் தொலைநோக்கி “கடக்கும்” தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது. அதாவது, தனது சூரியனுக்கும் (அல்லது விண்மீன்) புவிக்கும் இடையில் கடக்கும் புறக்கோள்களை இது கண்டுபிடிக்கிறது. விண்மீனில் இருந்து வரும் ஒரு மிகச்சிறிய ஒளி காலமுறை தோறும் தடுக்கப்படுவது, கோள் ஒன்று அதனைச் சுற்றி வருவதாகக் கருதப்படுகிறது.
நன்றி
விக்கிபீடியா
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். 241(திருக்குர்ரான் 36:38)
அவன் இரவைப் பகலில் நுழைக் கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. 241 அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.(திருக்குர்ரான் 35:13)
அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப் பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறிய வில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். 241 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(திருக்குர்ரான் 31:29)
தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால கட்டம் வரை ஓடும். 241 கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.(திருக்குர்ரான் 39:5)
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். 240 பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. 241 காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.(திருக்குர்ரான் 13:2)
பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழமுடியும் என்ற
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். 'இறங்குங் கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன' 175 என்றும் நாம் கூறினோம்.(திருக்குர்ரான் 2:36)
''(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர் களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன'' 175 என்று (இறைவன்) கூறினான்.(திருக்குர்ரான் 7:24)
'அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான். 175 (திருக்குர்ரான் 7:25)
No comments:
Post a Comment