Thursday, 2 August 2012

புனே குண்டு வெடிப்புகள் -இந்துத்துவா பயங்கரவாதமா?

புனே: புனேயில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

புனேயில் நான்கு வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து  குண்டு வெடித்தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.ஆனால் இருவர் படுகாயமடைந்தனர். புனே குண்டுவெடிப்பு பற்றிக் கருத்து தெரிவித்த மத்திய அரசு, இதில் தீவிரவாதச் செயல் இல்லை என்று  கூறியிருந்தது.

குண்டுகள் வெடித்த இடங்களை  இன்று நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கரவாதிகளின் சதியா என்பது குறித்துப் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என்றார்.

இது  இந்துத்துவா பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமா என  ஒரு  செய்தியாளர்  கேட்டதற்கு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

நன்றி  www.inneram.com

நித்தியானந்தா, நடிகைகளின் பாஸ்போர்ட்கள் பறிமுதல்







 










நடிகையுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக செய்திகளில் அடிபட்ட பிரபல சாமியார் நித்தியானந்தா மற்றும் அவருக்கு நெருக்கமான நடிகைகளின் பாஸ்போர்ட்டுகளை விமானநிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நித்தியானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்குத் தொடர்பாக அவரிடம் கடந்த ஜூலை 30ம் தேதி அவரிடம் ஆண்மைப் பரிசோதனை நடத்த பெங்களூர் காவல்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தப் பரிசோதனைக்கு நித்யானந்தா உடன்பட்டு வராமல் நேபாளம் வழியாக திபெத்தில் உள்ள கைலாச மலைக்கு  சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் நேபாளத் தலைநகர் காட்மண்டுவிலிருந்து புதுடெல்லி வந்த கெளசிக் என்ற பயணியின் உடமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தபோது, பை ஒன்றில் 30 இந்திய பாஸ்போர்ட்டுகளைக் கண்டெடுத்தனர். அவை கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தா, மற்றும் அவருக்கு நெருக்கமான நடிகைகளின் உண்மையான இந்தியப் பாஸ்போர்ட்டுகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றை இந்தியாவுக்குக் கடத்தி வந்த கெளசிக் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறதாம்.


 நன்றி www.inneram.