நடிகையுடன்
பாலியல் தொடர்பு கொண்டதாக செய்திகளில் அடிபட்ட பிரபல சாமியார்
நித்தியானந்தா மற்றும் அவருக்கு நெருக்கமான நடிகைகளின் பாஸ்போர்ட்டுகளை
விமானநிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நித்தியானந்தா மீதான பாலியல் பலாத்கார
வழக்குத் தொடர்பாக அவரிடம் கடந்த ஜூலை 30ம் தேதி அவரிடம் ஆண்மைப் பரிசோதனை
நடத்த பெங்களூர் காவல்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தப் பரிசோதனைக்கு
நித்யானந்தா உடன்பட்டு வராமல் நேபாளம் வழியாக திபெத்தில் உள்ள கைலாச
மலைக்கு சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் நேபாளத் தலைநகர்
காட்மண்டுவிலிருந்து புதுடெல்லி வந்த கெளசிக் என்ற பயணியின் உடமைகளை சுங்க
அதிகாரிகள் பரிசோதித்தபோது, பை ஒன்றில் 30 இந்திய பாஸ்போர்ட்டுகளைக்
கண்டெடுத்தனர். அவை கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தா, மற்றும் அவருக்கு
நெருக்கமான நடிகைகளின் உண்மையான இந்தியப் பாஸ்போர்ட்டுகள் என்று அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். அவற்றை இந்தியாவுக்குக் கடத்தி வந்த கெளசிக் என்பவரிடம்
தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறதாம்.
நன்றி www.inneram.
No comments:
Post a Comment