Thursday, 2 August 2012

புனே குண்டு வெடிப்புகள் -இந்துத்துவா பயங்கரவாதமா?

புனே: புனேயில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

புனேயில் நான்கு வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து  குண்டு வெடித்தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.ஆனால் இருவர் படுகாயமடைந்தனர். புனே குண்டுவெடிப்பு பற்றிக் கருத்து தெரிவித்த மத்திய அரசு, இதில் தீவிரவாதச் செயல் இல்லை என்று  கூறியிருந்தது.

குண்டுகள் வெடித்த இடங்களை  இன்று நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கரவாதிகளின் சதியா என்பது குறித்துப் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என்றார்.

இது  இந்துத்துவா பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமா என  ஒரு  செய்தியாளர்  கேட்டதற்கு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

நன்றி  www.inneram.com

No comments:

Post a Comment