Monday, 13 August 2012

ஃபாஸ்ட் டிராக் ஓட்டுநர்கள் – தாடி வைக்க தடையா? – ‎களத்தில் டிஎன்டிஜே

ஃபாஸ்ட் ட்ராக் என்னும் நிறுவனம் வாடகைக்கு கார் மற்றும் டாக்ஸிகளை ‎இயக்கும் ஒரு நிறுவனம். இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ‎இதன் கிளைகள் உள்ளன. 4000 வாகனங்களுக்கு மேல் இவர்களது ‎கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த நேரத்திலும் வாடகைக்கு கார்களை பிடிப்பதற்கு ‎ஏதுவாக 24மணி நேர சேவையைச் செய்து வருகின்றனர்.‎

இந்த நிறுவனத்தின் சென்னை கிளையின் கீழ் இயங்கும் பிரிவில் ‎ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் ஓட்டுநராக பணியாற்றுகின்றனர். சிலர் ‎தங்களது சொந்த வாகனங்களை அந்த நிறுவனத்தில் பணி ஒப்பந்த ‎அடிப்படையிலும் இயக்குகின்றனர். ஃபாஸ்ட் ட்ராக் நிறுவன தொலைபேசி ‎எண்ணைத் தொடர்பு கொள்ளும் பயணிகளுக்கு ஓட்டுநர்களுடைய ‎தொலைபேசி எண்ணைக் கொடுத்து பிக்அப் செய்து பயணிகளின் ‎தேவையைப் பூர்த்தி செய்வது இவர்களது நிறுவனம் செய்யும் தொழில் ‎நடைமுறையாகும்.‎
‎ 
கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் சார்பாக சென்னை விமான நிலையத்தில் ‎உள்ள அவர்களது அலுவலகத்தில் ஓர் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது. சில ‎ஒழுங்குமுறைகளை பேணக்கூடிய ஓட்டுநர்களுக்கு மட்டும்தான் பயணிகளை ‎ஏற்றிச் செல்ல பிக்அப் தருவோம் என்று கூறி சில விதிமுறைகளை ‎அறிவித்து அறிவிப்பு பேனரும் வைத்துள்ளனர் அந்த நிறுவனத்தினர். அந்த ‎அறிவிப்பு பேனரில், “ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் ‎அனைவரும் முகச்சவரம் செய்திருக்க வேண்டும்” என்ற அறிவிப்பைப் பார்த்த ‎முஸ்லிம் ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர்.‎
‎ 
முகச்சவரம் செய்யாமல் தாடி வைத்திருக்கும் ஓட்டுநர்களுக்கு பிக்அப் ‎தரப்படமாட்டாது என்று அலுவலகத்திலும் சொல்லப்பட, அதிர்ச்சியடைந்த ‎முஸ்லிம் ஓட்டுநர்கள் நீதிகேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ‎தலைமையகத்திற்கு கடிதம் எழுதினர்.‎
‎ 
அந்த கடிதத்தில் தாடி வைத்துள்ளதால் தங்களுக்கு பிக்அப் தர ‎மறுக்கின்றார்கள். எனவே எங்களுக்கு நீதி வேண்டும் என்று பல முஸ்லிம் ‎ஓட்டுநர்கள் கையெழுத்திட்டுக் கடிதம் கொடுத்தனர்.‎
‎ 
இந்த விஷயத்தில் நீதிகேட்டு உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ‎மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க களத்தில் குதித்தது.‎
‎ 
மாநிலச் செயலாளர் மாலிக், மாநிலச் செயலாளர் ஜப்பார் மற்றும் ‎தென்சென்னை மாவட்டச் செயலாளர் கமர்தீன் ஆகியோர் அடங்கிய ‎குழுவினர் நுங்கம்பாக்கத்திலுள்ள ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் தலைமை ‎அலுவலகத்திற்குச் சென்று அங்கு அந்த நிறுவனத்தின் சென்னை நகரத்தின் ‎மேனேஜிங் டைரக்டர் அம்பிகாபதி அவர்களைக் கடந்த 27.07.12 ‎வெள்ளிக்கிழமை அன்று மாலை 5மணிக்கு சந்தித்தனர்.‎
‎ 
உங்களது நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம் ஓட்டுநர்கள் தாடி வைக்கக் ‎கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாகவும், அவ்வாறு தாடி வைத்திருந்தால் ‎பிக்அப் தரமாட்டோம் என்று அலுவலகத்தில் சொல்வ தாகவும் கூறப்படும் ‎செய்தியை அவரிடம் தெரிவிக்க, சில ஒழுங்குமுறைகளைப் பேணி, சுத்தபத்த ‎மாகவும், அழகாகவும் ஓட்டுநர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் ‎அவ்வாறு அறிவிப்பு செய்யப்பட்டதாகவும், முஸ்லிம்கள் மீது தங்களுக்கு எந்த ‎வெறுப்புணர்வும் இல்லை என்றும், யாராவது அலுவலக பொறுப்பாளர்கள் ‎பிக்அப் தர மறுப்பதாகச் சொன்னால், என்னிடத்தில் உடனடியாக அந்த ‎ஓட்டுநர்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். உடனே நான் அந்த ‎குறையை சரிசெய்து விடுகின்றேன் என்றும் சென்னை நகரத்தின் மேனேஜிங் ‎டைரக்டர் அம்பிகாபதி அவர்கள் நமது நிர்வாகிகளிடம் தெரிவித்து, 98410 ‎‎29250 என்ற தனது தொலைபேசி எண்ணையும் நம்மிடம் வழங்கினார்.‎
‎ 
மேலும், இந்து, முஸ்லிம், கிறித்தவ, சீக்கிய மதத்தவர்களும் வாழும் ‎இந்நாட்டில் சீக்கியர்கள் ஓட்டுநர்களாக வரும்போது அவர்களிடத்தில் ‎தலைப்பாகையையும், தாடியையும் எடுக்க வேண்டும் என்று சொன்னால் அது ‎சரியா? சட்டதிட்டங்கள் அனைத்துமே மத சுதந்திரத்திலும், மத ‎உரிமைகளிலும் தலையிடாதவாறுதானே அமைக்கப்பட்டுள்ளது என்று நாம் ‎சுட்டிக்காட்டியவுடன் அதை அவர் ஏற்றுக் கொண்டார்.‎
‎ 
இந்தத் தகவலை ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம் ‎ஓட்டுநர்களிடத்தில் தெரிவித்தவுடனேயே அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி ‎அடைந்தனர். மேலும் ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ‎அம்பிகாபதி அவர்களது தொலைபேசி எண் அனைத்து முஸ்லிம் ‎ஓட்டுநர்களிடத்திலும் வழங்கப்பட்டது.‎
‎ 
ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அம்பிகாபதி அவர்கள் ‎நம்மிடத்தில் மேற்கண்டவாறு கூறியவுடனேயே அவர்கள் நிறுவனத்தார் ‎வைத்த அறிவிப்பில் முகச்சவரம் செய்தால்தான் பிக்அப் வழங்கப்படும் என்ற ‎அறிவிப்பை அகற்றிவிட்டனர் என்பது பாராட்டத்தக்க விஷயம்.‎
‎ 
தங்களது உரிமையை பெற்றுத்தந்ததற்காக ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில் ‎பணியாற்றும் முஸ்லிம் ஓட்டுநர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ‎நன்றி தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.‎
நன்றி tntj.net

No comments:

Post a Comment