மும்பையில் சனியன்று திடீரென்று ஏற்பட்ட கலவரத்தால் இரு உயிர்கள் பலியாகின. காவலர்கள் உட்பட 55 பேர் காயமடைந்தனர். தற்போது மும்பையில் இயல்புநிலை திரும்பியுள்ளது.
மியான்மரில் இனப் படுகொலைகளுக்கு
ஆளாகிவரும் முஸ்லிம்களுக்கு ஆதரவு வேண்டியும், அஸ்ஸாம் கலவரத்தைக்
கண்டித்தும் ரஸா அகாடமி என்னும் முஸ்லிம் நல்லிணக்க அமைப்பு பேரணி
ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ரஸா அகாடமி அமைப்பு அழைப்பு
விடுத்திருந்த இந்த பேரணி, மியான்மரில் ஹிந்துக்களுக்கு எதிராக நிகழும்
வன்முறைகளைக் கண்டித்தும் கோஷம் எழுப்பியது. இந்த பேரணியில் மும்பை
காவல்துறை முன்னாள் உயரதிகாரியான ஷம்ஷீர்கான் பதான் என்பவரின் அவாமி விகாஸ்
கட்சியும் இணைந்திருந்தது.
பேரணிக்கு சுமார் 2000 பேர் வரக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில், 20,000க்கும் மேல் மக்கள் திரண்டு வந்தனர் என்றும், தாங்கள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றும் ரஸா அகாடமி தலைவர் முஹம்மது சயீத் நூரி தெரிவித்தார். "நிச்சயமாக, முஸ்லிம்கள் குறிப்பாக, இந்தப் புனித ரமளான் மாதத்தில் இதுபோன்ற நாசகார செயல்களில் ஈடுபட மாட்டார்கள். எங்கள் பேரணியை சில சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொண்டு நாசகார செயல்களைச் செய்துவிட்டனர். அதற்காக முஸ்லிம்கள் சார்பாக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறோம்; வருந்துகிறோம் " என்றார் அவர்.
ஏவிபி எனப்படும் அவாமி விகாஸ் பார்ட்டி தலைவரும், காவல்துறை முன்னாள் உயரதிகாரியுமான ஷம்ஷீர் கான் பதான் கூறுகையில்,பேரணியில் வன்முறையைத் தூண்டும் வகையில் எவரேனும் பேசினரா என்பது குறித்தும் ஆராயப்படுவதாகச் சொன்னார். "பரவுவதற்கு வாய்ப்பாக இருந்த கலவர நெருப்பை காவல்துறை திறமையாக தொடக்கத்திலேயே அணைத்துவிட்டது" என்றார் ஷம்ஷீர்கான் பதான்.
சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறைக்குக் காரணமான 20 பேர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு, திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின்கீழும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். " காவல்துறையினர் தேவையான இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது" என்றார் அவர்.

செய்திகள் at www.inneram.com
No comments:
Post a Comment