புனே தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப்பினரின் கைவரிசை இருக்கலாம் என்பதுதான் அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து ஊடகங்களின் செய்திகளிலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையை மறுப்பதற்கில்லை என்ற தகவலும் ஒருவரியில் அடக்கப்பட்டிருக்கிறது.
இந்து பயங்கரவாதிகள் இதற்கு முன்பு இதே மகாராஷ்டிராவின் மாலேகானில் குண்டுவெடிப்பு சதியை அரங்கேற்றினர். முதலில் இதில் இந்தியன் முஜாஹிதீன், சிமி என பிற பெயர்கள்தான் அடிபட்டு வந்தன. ஆனால் அபினவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இதில் இருப்பது பின்னர் அம்பலமானது.
மாலேகானில் எப்படி சைக்கிள் மூலம் மிகவும் சக்தி குறைந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனரோ அதே பாணியில்தான் தற்போது புனேயிலும் வெடிக்கச் செய்திருக்கின்றனர். அதுமட்டுமில்ல இந்து பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தானே, நவி மும்பை ஆகிய சம்பவங்களிலும்கூட சைக்கிள்கள் மூலம் குறைவான சக்தி கொண்ட வெடிகுண்டுகளைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர்.
தற்போது புனே குண்டுவெடிப்பில் குடும்பத்துடன் சிக்கியிருப்பவர் தயானந்த பட்டீல். சைக்கிளில் வந்த இவரது கைப்பையில் இருந்துதான் ஒரு குண்டு வெடித்தது என்பது உறுதியாகிவிட்டது. அதுவும் தயானந்த பட்டீலின் குடும்பத்தினர் நடத்தி வரும் சைக்கிள் கம்பெனியில் இருந்தே புதிய சைக்கிள்கள் கொண்டுவரப்பட்டு அதன் மூலமே அனைத்து குண்டுகளும் வெடிக்க வைக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
புனே குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன்களுக்கு தொடர்பிருக்கிறது, ஜோர்டானுக்கு தொடர்பிருக்கிறது என்று செய்திகள் வெளியானாலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-தமிழ் இணையதள பத்திரிக்கை செய்தி
No comments:
Post a Comment