Monday, 13 August 2012

டிஎன்டிஜே வின் ஸஹர் நேர நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்த ‎ஜமாஅத்துல் உலமா!‎

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் டிஎன்டிஜேவினரால் விளம்பரம் ‎செய்யப்படுகின்றதோ இல்லையோ, நம்மை எதிர்க்கும் எதிரிகளால் நல்ல ‎முறையில் இலவசமாக விளம்பரம் செய்யப்பட்டு அதனால் நமக்கு நல்ல ‎பலன் கிடைக்கின்றது.‎
‎ 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தக்கூடிய பல பிரச்சாரக்கூட்டங்கள் ‎பற்றிய செய்திகள் சுன்னத்வல் ஜமாஅத் மக்களுக்கு முழு அளவில் ‎சென்றடைவதில்லை. அவற்றை தடுத்து நிறுத்துகின்றேன் பேர்வழி என்று ‎சொல்லிக் கொண்டு நமது எதிரிகள் நமக்கு எதிராகக் கூட்டம் போட்டு, ‎‎“டிஎன்டிஜேவினர் இந்த தேதியில், இந்த இடத்தில் கூட்டம் போடுகின்றார்கள்; ‎யாரும் அங்கு போக வேண்டாம்” என்று பிரச்சாரம் செய்ய அதற்குப் ‎பிறகுதான் இப்படி ஒரு பிரச்சாரம் நடத்தப்படுவதை அறிந்துகொண்டு ‎வெள்ளமென தவ்ஹீத் ஜமாஅத் நடத்தக்கூடிய நிகழ்ச்சியைக் காண மக்கள் ‎அலைமோதி வருகின்றார்கள்.‎
‎ 
இதுதான் தொடர்ச்சியாக அனைத்து ஊரிலும் நடந்து வருகின்றது. ஒரு ‎வகையில் இப்படி நமது நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரம் செய்து தரும் ‎இவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.‎
‎ 
பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைக்கூட்டம் என்று நாம் நடத்தும் ‎பிரச்சாரக்கூட்டங்களுக்கு இத்தகைய எதிர்ப்பு தெரிவித்து இலவச ‎விளம்பரங்கள் செய்து தந்தவர்கள், டிஎன்டிஜே நடத்தக்கூடிய ஸஹர் நேர ‎நிகழ்ச்சிக்கும் இப்படி இலவச விளம்பரம் செய்து அனைத்துத் தரப்பு ‎மக்களையும் நமது மெகா டிவி நிகழ்ச்சியைப் பார்க்கத் தூண்டியுள்ளனர்.‎
‎ 
ரமலான் முழுவதும் மெகா டிவியில் அதிகாலை 3.30 மணி முதல் மாநிலத் ‎தலைவர் பீஜே அவர்கள் உரையாற்றக்கூடிய, “மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் ‎கூறும் மகத்தான தீர்வு” என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. அதைத் ‎தொடர்ந்து, “தர்காக்களில் நடப்பது என்ன?” என்ற சிறப்பு புலனாய்வு தொடரும் ‎ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. மெகா டிவியில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ‎இந்த நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‎இந்நிலையில் கரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினர் ஒரு துண்டுப் ‎பிரசுரத்தை வெளியிட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிக்கு இலவச ‎விளம்பரம் செய்து தந்துள்ளனர். ‎
‎ 
“ஸஹர் நேரத்தில் மக்களைக் குழப்பும் விதமாக நடத்தப்படும் நிகழ்ச்சியை ‎யாரும் பார்க்க வேண்டாம்; அவர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிக்கு வர்த்தக ‎ரீதியாக எந்த விளம்பரமும் கொடுக்க வேண்டாம்” என்று வயிறெரிந்து போய் ‎துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிட்டு தங்களது வயிற்றெரிச்சலைக் ‎காட்டியுள்ளனர். ‎
‎ 
“தெளிவாக இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்றோம் என்று கூறி மக்களை ‎குழப்பி, ஏன்தான் இந்த ரமளான் மாதம் வருகின்றதோ என்று மக்கள் ‎நினைக்கக்கூடிய அளவிற்கு நாம் நிலைமையை ஏற்படுத்திவிட்டோம்” என்று ‎தங்களது எரிச்சலை கொட்டித் தீர்த்துள்ளனர் அந்த போலி சுன்னத் வல் ‎ஜமாஅத்தார்கள்.‎
‎ 
ஜமாஅத்துல் உலமா சபையினர் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை ‎பார்த்துவிட்டு பல சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்கள் நம்முடைய ‎நிர்வாகிகளை அணுகி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நிகழ்ச்சி எந்த டிவியில் ‎நடத்துகின்றீர்கள் என்று கேட்க, ஜமாஅத்துல் உலமா சபையினர் அடித்த ‎துண்டுப் பிரசுரத்தின் வாயிலாக சுன்னத் வல் ஜமாஅத் மக்களிடத்தில் நமது ‎நிகழ்ச்சி குறித்த செய்தி செவ்வனே சென்றடைந்துள்ளது என்பதை நமது ‎நிர்வாகிகள் விளங்கிக் கொண்டனர். ‎
‎ 
போதாக்குறைக்கு நம்முடைய கரூர் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சி குறித்த 3500 ‎துண்டுப் பிரசுரங்களை அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்கள் உட்பட கரூர் ‎மாவட்டத்தின் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்ல தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி பல்வேறு தரப்பு மக்களின் ‎மனக்குழப்பத்தைத் தீர்த்து வருகின்றது. ‎
‎ 
ஸஹர் நிகழ்ச்சி பார்க்க வேண்டாம் என்று நாம் அடித்து வெளியிட்ட ‎துண்டுப் பிரசுரம்தான் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் நிகழ்ச்சி குறித்து பரபரப்பை ‎ஏற்படுத்திவிட்டது. இதற்கெல்லாம் நாம் தான் காரணமோ? என்றும், நாமே ‎இவர்களுக்கு இலவச விளம்பரம் செய்து கொடுத்துவிட்டோமே! என்றும் ‎ஜமாஅத்துல் உலமா சபையினர் தற்போது மனக்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக ‎தகவல்கள் வருகின்றன.‎
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!‎

நன்றி tntj.net

No comments:

Post a Comment