| ||||||||||
|
கல்வி செய்திகள்பொறியியல் கலந்தாய்வு, அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் – ஓர் ஆய்வு!
ப்ளஸ்2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன், பல மாணவர்களுக்கு நினைவில் வருவது பொறியியல், மருத்துவ கவுன்சிலிங்தான். மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: இந்தாண்டு, ப்ளஸ்2 பொதுத்தேர்வு, மார்ச் 8ம் தேதி துவங்குவதையடுத்து, மாணவர்கள் முழுமூச்சுடன் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்வை… Read more
வேலைவாய்ப்பு பயிற்சி – BSNL அறிவிப்பு
இன்ஜினியரிங் மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளை பி.எஸ். என்.எல்., நிறுவனம் நடத்தவுள்ளது. பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விடுமுறை காலங்களில், இன்ஜினியரிங் மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளை நடத்த பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது…. Read more
கலை, அறிவியல், பொறியியல், முதுநிலை மற்றும் +2 மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிகள்
தினசரி வாழ்க்கையில் இயற்பியல் எப்படி பயன்படுத்தப்படுகிறது, இயற்பியலை மாணவர்களுக்கு புரியும் வகையில் எப்படிக் கற்றுத்தரலாம் என்பதிலிருந்து, பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் கல்வி உதவித்தொகை குறித்த தகவல்களை வழங்கி வருகிறார் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி இயற்பியல்… Read more
ஜிமேட்(GMAT) தேர்வு – புதிய முறை அறிமுகம்
கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில் நடத்தும் ஜிமேட் (Graduate Management Admission Test) 2012 தேர்வில் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. உலகத்தில் உள்ள சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் எழுதும் ஜிமேட் தேர்வில் பங்கேற்பவர்கள்… Read more
பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடக்கம்: தேர்வுத்துறை
பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது அட்டவணை பின்வருமாறு:- மார்ச்-8-மொழித்தாள் ஒன்று. மார்ச்-9-மொழித்தாள் இரண்டு. மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள். மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள். மார்ச்-16- இயற்பியல்,பொருளியல்,உளவியல். மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல். மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல். மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து. மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்….Read more
பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் வழங்கும் உதவித் தொகை!!
தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு… Read more
M.B.A சேர்க்கைக்கு 2012 முதல் C.M.A.T அவசியமாகிறது!!
2012ம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மேலாண்மைக் கல்வி மையங்களிலும் எம்.பி.ஏ. சேர்க்கைக்கு காமன் மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் எனப்படும் சிமேட் தேர்வு அவசியமாக்கப்படும் என்று ஏஐசிடிஇ தலைவர் மந்தா தெரிவித்துள்ளார். அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும்… Read more
IAS தேர்வுகளுக்கு இலவச பயிற்சி!!
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி, சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ் மற்றும் அரசுசார் பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறது. அடுத்தாண்டு மே மாதம் நடக்கும், ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 10ம்… Read more
பொறியியல் பட்டப்படிப்பில் ஏழை மாணவர்களுக்கு 5% இடஒதுக்கீடு!!
இந்தியாவில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஏழை மாணவர்களுக்கு “5 சதவீத இடம் ஒதுக்கப்பட உள்ளது”. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிமுகப்படுத்தியுள்ள கல்விக் கட்டண ரத்து திட்டத்தின் மூலம் இந்த ஒதுக்கீடு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தின் ஆண்டு வருமானம்… Read more
ஜெயித்து காட்டுவோம் – கல்வி நிகழ்ச்சியில் 10 ஆயிரம்! மாணவர்கள் கலந்துகொண்டனர்
தினமலர் நாளிதழின் சார்பில், சென்னையில் நடத்தப்பட்ட ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், 10 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், அதிக மதிப்பெண் வாங்குவதற்கு எப்படி படிக்க வேண்டும், எவ்வகையில் முயற்சிகள் இருக்க… Read more
|
http://tntjsw.net/ |
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் டெப்லட் கணனி 35 அமெரிக்க டொலரில்: வெளியிட்டது இந்தியா
உலகின் மிகவும் மலிவான டெப்லட் கணனியை உருவாக்கவுள்ளதாக இந்தியா கடந்த வருட ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.
‘ஆகாஸ்’ என இந்த டெப்லட் கணனிகள் பெயரிடப்பட்டுள்ளன.
இவை இந்திய தொழிநுட்ப இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology, IITs) மற்றும் பிரித்தானிய ‘டேட்டா விண்ட்’ நிறுவனமும் இணைந்தே இக் கணனியை உருவாக்கியுள்ளன.
மேற்படி டெப்லட் கூகுளின் அண்ட்ரோய்ட் இயங்குதளத்தினைக் கொண்டியங்குகின்றதுடன், எல்.சீ.டி திரையையும் கொண்டுள்ளது.
இதன் முதல் 100,000 கணனிகளும் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.
சில மாதங்களுக்கு பின்னர் அனைவரும் விலைகொடுத்து வாங்கும் வண்ணம் விற்பனைக்கு வரவுள்ளது
இதன் போது 3 ஜி தொழிநுட்பத்தில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படவுள்ளதுடன் 60 அமெரிக்க டொலர்கள் வரை விலையிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது..
வறியவர்களுக்கு கணனி அறிவைப் பெற்றுக் கொடுக்கவும், இணைய உலகில் இணைவதற்கு வாய்ப்பளிக்கவுமே இதனை உருவாக்கியுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் கல்வி அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இத்தகைய மலிவு விலைகொண்ட டெப்லட் கணனியை உருவாக்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக இந்தியா கடந்த வருடம் அறிவித்திருந்தது.
எனினும் உற்பத்திச் செலவு மற்றும் சரியான நிறுவனத்தினை தெரிவு செய்வது என்பவற்றில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக இக் கணனி வெளியீட்டில் காலதாமதம் ஏற்பட்டது.
இத்திட்டம் கைவிடப்படுமெனக் கருதப்பட்டு வந்த நிலையில் அது தற்போது சாத்தியமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல்ஆன்லைன் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம்
தூத்துக்குடி:வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மற்றும் புதுப்பித்தலை ஆன்லைன் மூலம் எளிதான முறையில் செய்து கொள்ளலாம் என்று தூத்துக்குடி மா வட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.அனைத்து வேலைவாய் ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaiv aaippu.gov.in என்ற இணையதள ம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விணையதளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு போன்ற பணிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இன்ஜினியரிங், டாக்டர் மற்றும் பட்டமேற்படிப்பு கல்வித்தகுதி உடைய மனுதாரர்கள் தங்கள் கல்வித்தகுதியினை பதிவு செய்ய இனி மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லத் தேவையில்லை. தங்கள் பதிவுகளை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மே லும் வீட்டில் உள்ள இணையதள வசதிஉடைய கம்யூட்டரிலோ அல்லது ஏதேனும் இன்டர்நெட் மையங்களி லோ பதிவு செய்யலாம். மே லும் உடனடியாக வேலைவாய்ப்பு அட்டையினை பிரிண்ட் எடுத்துக் கொள்ளல õம். முதன் முறையாக பதிவு செய்பவர்கள் New Registration பகுதியை அணுகி பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் தகுதி மற்றும் புதுப்பித்தல் செய்வோர் அதற்குரிய பகுதியில் க்கு ER NAME என்னும் இடத்தில் தங்கள் பதிவு எண்ணை பதிவு செய்த ஆண்டுடன் இணைத்து ஆண், பெண் என்பதை குறிக்கும் ஆங்கில எழுத்தையும் இø ணத்து பதினாறு இலக்க எண்ணாக மாற்றி பதிய வேண்டும். உதாரணமாக தங்கள் பதிவு எண்.Gs. 2008F 3610 எனில் இதனை MDP.2008F 00003610 எனக் குறிப்பிட வேண்டும். Mஈக என்பது மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக குறியீடு ஆகும். Pass word என்பது தங்களின் கல்விதகுதி சான்றிதழில் உள்ளபடி பிறந்த தேதி ஆகும். இதனை DD/MM/YYYYஎன்னும் வடிவில் குறிப்பிட்டு இணைப்பினை பெற் று பதிவினை மேற்கொள்ளலாம். இது தொடர்பான சந்தேக ங்களை 0461- 2340159 தொட ர்பு கொண்டு கேட்டு பயனடையலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Harddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்
பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.
குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.
பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர். நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.
நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது. ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.
செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.
செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.
1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.
2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.
3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.
4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.
இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.
தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம்.
மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.
பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது.(உதாரணம்: வீட்டில் தனி அறை, தனி படுக்கை என, என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-), நூல்: புகாரி 6243
இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.
கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆண் 24:37)
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 893
இளைஞர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தை நல்வழிபடுத்தும் பணியில்
TNTJ மாணவரணி,
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவண்ணாமலையில் இலவச நோட்டு புத்தகம் விநியோகம்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, July 18, 2011, 12:58