Friday, 3 August 2012

எதிர்ப்புகளால் எழுச்சி பெறும் டிஎன்டிஜே!‎

குமரி மாவட்டம் மந்தாரம்புதூர் கிளையில் கடந்த 10.6.2012 அன்று ‎ஏழைகளுக்கான நலத்திட்ட உதவி மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் ‎நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு முறையாக 20.5.2012 அன்று கன்னியாகுமரி ‎காவல் நிலையத்தில் பொதுக்கூட்டத்திற்கான அனுமதி கடிதம் ‎கொடுக்கப்பட்டு காவல்துறை அனுமதியும் அளித்தது. இந்தப் ‎பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச் ‎செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் சிறப்புரையாற்ற இருந்தார். ‎

கிளை நிர்வாகிகள் கூட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகளாக ஏழை ‎மாணவர்களைத் தேர்வு செய்து சுமார் 150 க்கும் அதிகமான மாணவ ‎மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்குவதற்கான ‎முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். ‎
ஆட்டம் போட்ட அசத்தியவாதிகள்:‎

இந்நிலையில் 9.6.2012 அன்று வழக்கம் போல அசத்தியவாதிகளின் ஆட்டம் ‎ஆரம்பமானது. முன்பெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தக்கூடிய ‎பிரச்சாரக்கூட்டங்களைத்தான் இவர்கள் வெறி கொண்டு எதிர்த்து வந்தனர். ‎தற்போது இவர்களது வெறி முற்றிப்போய் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தக்கூடிய ‎இரத்ததான முகாம்களைக் கூட நடத்த விடக்கூடாது என்று களத்தில் ‎குதித்துவிட்டனர்.‎
இந்த குமரி மாவட்டத்திலோ நலத்திட்ட உதவிகள் வழங்குவதையும், ‎அத்துடன் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்குவதையும், ‎அத்துடன் நடைபெறும் சத்தியப் பிரச்சாரத்தையும் சேர்த்து தடுத்து ‎நிறுத்திவிடலாம் என்று களத்தில் குதித்துள்ளனர். ‎
ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தால் கலவரம் வருமாம்:‎
இந்த பொதுக்கூட்டத்தை நாம் நடத்தினால் கலவரம் ஏற்படும் என்று ‎பொய்யான புகாரை காவல்துறைக்கு அளித்துள்ளனர். ‎
‎ 
ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் ‎வழங்கினால் அது கலவரத்தை உண்டு பண்ணுமாம். இவ்வாறு ‎கூறுகெட்டதனமாக இவர்கள் கூறும் பொய்ப் புகார்களை காவல்துறை ‎கணக்கில் கொள்வதுதான் வருந்தத்தக்க ஒரு விஷயம்.‎
எதிர்ப்புகளால் வளரும் டிஎன்டிஜே:‎
‎ 
இப்படி தடைபோடப்படுவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு புதிய ‎விஷயமா? ஊர்கள் தோறும் இப்படி தடை போடப்படுவதும், அந்தத் ‎தடைகளைத் தகர்த்தெறிந்து வல்ல ரஹ்மானின் பேருதவியோடு டிஎன்டிஜே ‎இந்த சத்திய சன்மார்க்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துக் ‎கொண்டு, மனித நேயப் பணிகளையும் சிறப்பாக செய்து வருவது ‎அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே! இங்கும் அதுதான் நிலை. ‎
‎ 
அந்த வரிசையில் குமரி மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருந்த ‎சத்தியப் பிரச்சாரக்கூட்டத்தைத் தடுத்து நிறுத்த திட்டமிட்ட போலி சுன்னத் ‎வல் ஜமாஅத்தினரின் முகத்திரையை வல்ல ரஹ்மான் கிழித்தெறிந்து ‎சத்தியப் பிரச்சாரத்திற்கு மகத்தான வெற்றியை அளித்தான். ‎
‎ 
இவர்களது பொய்ப்புகாரைக் காரணம் காட்டி நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட ‎அனுமதியை மறுத்து அந்தர்பல்டி அடித்தனர் காவல்துறையினர். தடையை ‎மீறி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்து ‎பொதுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தனர். ‎டி.எஸ்.பி மிரட்டிப்பார்த்தும் வேலையாகவில்லை. அந்தப் பகுதியில் உள்ள ‎எஸ்.ஐ. போலி சுன்னத் ஜமாஅத்தினரால் நல்லபடியாக(?) கவனிக்கப்பட்டதால் ‎தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடத்தில் வரம்பு மீறிப் பேச நமது சகோதரர்கள் ‎நாங்கள் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தியே தீருவோம் என உறுதிபடத் ‎தெரிவித்தனர்.‎
‎ 
குறித்த நேரத்தில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. மந்தாரம் புதூரில் ‎அல்லாஹ்வின் மகத்தான கிருபையைக் கொண்டு தடையை மீறி மாபெரும் ‎பொதுக்கூட்டம் நடந்தது. அல்ஹம்துலில்லாஹ்
தடைபோட்டதால் எழுச்சி கண்ட பொதுக்கூட்டம்:‎
‎ 
இவர்கள் இது போன்ற தடைகளைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியதன் ‎விளைவாக எப்போதும் வரக்கூடிய மக்கள் திரளை விட அளவுக்கதிகமான ‎மக்கள் வந்து குவிந்தனர். ‎
‎ 
இவர்களது பொதுக்கூட்டத்தைத் தடுக்க பல முயற்சிகள் ‎மேற்கொள்ளப்பட்ட போதிலும், தடையை மீறி இவர்கள் கூட்டத்தை ‎நடத்துகின்றார்களே அப்படி என்னதான் இவர்கள் சொல்கின்றார்கள் என்று ‎பார்ப்போம் என்பதை அறிய நிறைய சுன்னத் வல் ஜமாஅத்தார்களும் ‎இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகத்தான வெற்றி. மந்தாரம் புதூர்
பஞ்சாயத்துத் தலைவர் அவர்கள் இந் நிகழ்ச்சியை தடை செய்வதை அறிந்து, ‎‎“இந்நிகழ்ச்சியை நீங்கள் நடத்துவதற்கு யார் தடையாக இருந்தாலும், நான் ‎இதனை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பைத் தருவேன் என்று நம் கிளை ‎நிர்வாகிகளிடம் வாக்குறுதியளித்தது நம் மக்களுக்கு மேலும் ஒரு ‎வெற்றியாக அமைந்தது. ‎
‎ 
நமது சகோதரர்கள் அனைத்து கிளைகளிலிருந்தும் சாரை சாரையாக வந்து ‎குவிந்தனர். கூட்டத்தை கிளைத் தலைவர் அவர்கள் துவக்கி வைக்க, முதலில் ‎சிறப்புரையாற்றிய மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ஹாஜா நூஹ் ‎அவர்கள், “நாங்கள் கட்டுப்படுவோம் என்பதற்காக எங்களை கோழைகள் என்று ‎நினைத்தால் நாங்கள் வீரர்கள். படைத்த இறைவனைத் தவிர வேறு ‎யாருக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் என்பதை வாய் வார்த்தைக்கு மட்டும் ‎சொல்லுகின்ற அமைப்பல்ல; அதை எங்களது செய்கையால் நிரூபிக்கின்ற ‎அமைப்பு” என்பதை அழுத்தமாக பதிவு செய்து காவல்துறைக்கு கடுமையான ‎எச்சரிக்கையை விடுத்ததோடு, “நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்” என்ற ‎தலைப்பின் முக்கியத்துவத்தை
விளக்கிப் பேசினார். ‎
‎ 
அதனைத் தொடர்ந்து மாநிலப் பொதுச்செயலாளர் அவர்கள், “நபிவழியே நம் ‎வழி” என்ற தலைப்பில் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைகள் ‎அனைத்தும் புது வழி என்றும், நாம் செய்கின்ற அனைத்தும் நபி வழி ‎என்பதையும் சிறப்பான முறையில் ஆதாரங்களை எடுத்துவைத்து ‎விளக்கினார். இது நம்மை எதிர்ப்பவர்களையும் சிந்திக்கத் தூண்டும் விதத்தில் ‎அமைந்திருந்தது. இறுதியாக மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் ‎வழங்கப்பட்டன. அதிலும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பிறமத ‎மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டது. ‎
‎ 
காவல் துறையால் போடப்பட்ட தடையை இறையருளால் மக்கள் வெள்ளம் ‎முறியடித்து சத்திய கொள்கைக்கு உயிரோட்டம் கொடுத்தது. இதில் ‎இறைவனுடைய படிப்பினையாக கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்தவரின் ‎மனைவி அவரது வீட்டில் தவறி விழுந்து கிடந்த நிலையில் நம் ஜமாஅத் ‎மக்கள் உடனடியாக அப்பெண்மணியை மருத்துவ மனைக்கு அழைத்துச் ‎சென்றனர். ஆனால் அப்பெண்மணி ஏற்கனவே மரணித்துவிட்டதாக டக்டர்கள் ‎கூறிவிட்டனர். எதிரியாக இருந்தாலும் உதவி செய்வது என்பது எங்களின் ‎கடமை என்று நமது சகோதரர்கள் செய்த பணி அனைவரையும் ஒரு கனம் ‎சிந்திக்க வைத்துள்ளது. எதிர்த்தவர்களையும் சிந்திக்க வைக்கும்.‎

No comments:

Post a Comment