நாடாளுமன்றம்
நோக்கி புறப்பட்ட பாபா ராம்தேவ் சற்று முன் புது டில்லி காவல் துறையினரால்
கைது செய்யபட்டார். கைதுக்கு முன் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ராம்தேவ்,
”மத்திய அரசின் பொம்மையாக டில்லி காவல் துறை செயல்படுகிறது” என்றும்,
”நாங்கள் அமைதியான முறையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி புறபட்டதற்காக கைது
செய்யப்படுவது ஜனநாயக படுகொலை” என்றார்.
கறுப்பு பணத்தை கொண்டு வர தைரியமில்லாத காங்கிரஸ் அரசை அகற்றுவதே தனது
தலையாய பணி என்று கூறிய ராம்தேவ், அடுத்த நாடாளுமண்ற தேர்தலில்
குற்றவாளிகள் யாரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது
என்றார். பேரணி புறப்படும் முன் பாஜக தலைவர் நிதின் கட்காரியும், ஐக்கிய
ஜனதா தள தலைவர் சரத் யாதவும் ராம்தேவை சந்தித்து தங்களது ஆதரவை
தெரிவித்தனர். கறுப்பு பணத்திற்கெதிராகவும், இலஞ்ச ஊழலுக்கெதிராகவும்
போராடும் ராம்தேவிற்கு, பாஜக முழு ஆதரவளிக்கும் என நிதின் கட்காரி
உறுதியளித்தார். கூடியிருந்த ராம் தேவ் ஆதரவாளர்களிடம் பேசிய நிதின், ஊழல்
கறைபடிந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்ற அனைவரும் பாடுபடவேண்டும் என வேண்டுகோள்
விடுத்தார்.
செய்திகள் at www.inneram.com
No comments:
Post a Comment