வாரத்தில்
ஒன்று இரண்டு நாட்கள் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக
நாட்கள்உயிரோடு வாழலாம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
National Institute on Ageing என்ற நிறுவனத்தின் ஆராய்சியாளர்கள் "வாரம் ஒன்று அல்லது இரண்டுநாட்கள் விரதம் இருப்பதன் மூலம் அதிக நாள் வாழலாம்.
மூளையில்
ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் நோய் (alzheimer's disease),
பார்கின்சன் நோய் (parkinson disease), மற்றும் மூளைதேய்மான நோய்களான
degenerative disease களில் இருந்து இந்த விரதம் மூலம் பாதுகாப்பு
பெறலாம்.கலோரிகளைக் குறைத்துக் கொள்வதின் மூலம், மூளையில் உள்ள இரசாயன
தூதுகள் எனப்படும் ”Chemical messengers” தூண்டப்படுகிறது என்று
குறிப்பிடுகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்பார்கள் – ஆதாரம் நஸாயீ 2320, 2321, 2322
”The Daily Telegraph” என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது:
"உணவை
அதிகம் குறைத்து கலோரிகளைக் கடுமையான வரையறைக்குள் வைப்பது வாழ்நாளை
அதிகரிக்கும் என்பது எலி போன்ற ஆய்வகப் பிராணிகளில் நட்த்திய சோதனை மூலம்
பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த அதே
விளைவு மனிதனிலும்இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே
நம்பி இருந்தனர்.
இந்தக்
கோட்பாடு மனிதர்கள் விஷயத்தில் செய்முறை மூலமும் ஆய்வின் மூலமும் உறுதி
செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த நேர்மறையான
(positive effect) விளைவைக் கண்டுபிடித்து விட்டனர்"
தற்போது பேராசிரியர் மார்க் மாட்சொன், neurosciences ஆய்வக நிறுவனத்தின் தலைவர் Prof Mark Mattson, head of the institute's laboratory of neurosciences
இவ்வாறு கூறுகிறார் "கலோரிகளைக்குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால்
உதவ முடியும். மூளைகளின் பல நோய்களையும் தடுக்க முடியும்.. ஆனால்
தொடர்ந்து பட்டினி கிடந்தால், இந்த நன்மைகள் உங்கள்
மூளைக்குக்கிடைக்காது.intermittent bouts of fasting, என்ற இடைவெளி விட்ட
விரதம், அதாவது, கொஞ்சஇடைவெளியில் எந்த உணவையும் அறவே தடுப்பது, அதற்க்கு
அப்புறம் தனக்கு வேண்டியதை ,தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு
மூலமே இந்த நன்மை கிடைக்கும்" என்றுகூறுகிறார்.
இந்த
ஆய்வு முஸ்லிம்கள் நோற்கும் நோன்புக்கு மட்டுமே பொருந்தும். மற்ற
சமயத்தவர்களின் நோன்பில் இந்த அம்சம் இல்லை. மற்றவர்களின் விரதம் நீண்ட
நேரத்தைக் கொண்ட்தாக இருப்பதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே அதிகமான
விரதங்கள் உள்ளன. மேலும் பிற சமய விரதத்தின் போது திட உணவுகள் தான்
தவிர்க்கப்படுகின்றன. திரவ உணவுகள் உண்ணப்படுகின்றன. இதன் மூலம் வழக்கமான
க்லோரிகள் கிடைத்து விடும்.
மேலும்
சில விரதங்களின் போது சமைக்கப்பட்டதை தவிர்த்தால் போதும். பழங்கள்
போன்றவ்ற்றை சாப்பிடலாம் என்று உள்ளது. எனவே இதனாலும் மேற்கண்ட ஆய்வின்
பலனை அடைய முடியாது. இன்னும் சில விரதங்கள் அசைவம் மட்டும் சாப்பிடாமல்
இருந்தால் போதும் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் நனமையை அடைய
முடியாது.
ஆனால்
முஸ்லிம்களின் நோன்பில் அசைவமோ சைஅவமோ திடமோ திரவமோ எதுவானாலும் சாப்பிடக்
கூடாது. உணவாக கருதப்படாத பச்சைத்தண்ணீர் கூட அருந்தக் கூடாது. மேலும்
சுமார் பன்னிரண்டு மணி நேரம் என்ற் அளவில் ஓரளவு நீண்ட நேரம் கொண்ட்தாக இது
அமைந்துள்ளதால் மேற்கண்ட ஆய்வின் பலனை முழுமையாக பெற முடிகிறது. அதே
நேரத்தில் காலவறையற்ற அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் போல் இருந்து மனிதனைக்
கொல்லாமல் இரவு முழுவதும் விருமியதை உண்ணலாம் என்று இஸ்லாமிய நோன்பில்
உள்ளது.
பொதுவாக
மற்றவர்களை விட முஸ்லிம்கள் கட்டுபாடில்லாம அதிக அசைவ உணவை
உட்கொண்டாலும், மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அவர்களின் வாழ்நாட்கள்
குறைவதாக இல்லை.இது நோன்பினால் கிடைத்த நன்மையாக இருக்கக் கூடும்.
- டாக்டர். த. முஹம்மது கிஸார்
No comments:
Post a Comment