நடிகர் பாக்கியராஜ் அவர்கள் நடத்தி வரும் “பாக்கியா” என்ற என்ற பத்திரிக்கையில் கடந்த 2010 ம் ஆண்டு பின்வரும் செய்தி வெளியானது:
“பாகிஸ்தானில் ஒரு இஸ்லாமியர் தனது உடல் ஆரோக்கிய மின்மை காரணமாக அவருக்கு தாடி வளரவில்லை. இஸ்லாத்தில் தாடி இருந்தால் தான் ஆண்மைக்கு அடையாளம் என நினைத்துக் கொண்டு! அது வளர்வதுக்காக அவர் மருத்துவம் செய்தும் பலன் இன்றி போனது. அதனால்! அவர் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்து, தனக்கு தாடி வளர்ந்தால்! தனது குழந்தையை யாருக்காவது வேண்டுதலின் பேரில் கொடுத்து விடுவது என்றும் நேர்ச்சை செய்து இருக்கிறார். நேர்ச்சைக்கு பின்பு அந்த தாடி வளர்ந்ததாம்! அப்பொழுது அவர் வேண்டியதின் விளைவாக ஒரு பெண் குழந்தையை தனது உறவினருக்கு தானம் கொடுத்து விட்டாராம்”. (இது அந்த பத்திரிக்கையின் சுறுக்கமான செய்தி.)
இஸ்லாமிய கொள்கைகளுக்க மாற்றமாக உள்ள இந்த செய்தியை படித்த நஸ்ருத்தீன் உள்ளிட்ட நம் கீழக்கரை TNTJ சகோதரர்கள்பாக்கியா இதழிலின் அலுவக்ததிற்கு சென்று பாக்கிராஜ் அவர்கள் நேரில் சந்தித்து இது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமானது இதற்கும் இஸ்லாத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கினர். பின்னர் அவர் தூய இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் பி.ஜே அவர்கள் எழுதிய புத்தகங்களை வழங்கினர்.
விளக்கத்தை கேட்ட பாக்கிராஜ் அவர்கள் தனக்கு இந்த செய்தியை விஜி என்பவர் தான் கொடுத்தார் இதற்கு மறுப்பு தெரிவித்து செய்தி எனது இதழில் செய்தி வெளியிடுகின்றேன்என உறுதியளத்தார்.
நடிகர் பாக்கிராஜ் அவர்கள் சந்திக்கையில் கீழக்கரை TNTJ வை சேர்ந்த நஸ்ருத்தீன், முஸ்தகிப் மற்றும் வட சென்னை மாவட்ட செயலாளர் ஆலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment