Thursday, 5 July 2012

தவ்ஹீத் கோட்டையாக மாறிய லால்பேட்டை!




லால்பேட்டை: கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் மே 29 ஆம் தேதி TNTJ மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சிறப்புரையாற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதன முடிவெடுக்கப்பட்டு அதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டது. 

விளம்பரங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏகத்துவ எதிரிகள் " PJ நமதூரில் பேசினால் நாம் ஊரை ஏமாற்றி பிழைத்து வருவது நின்றுவிடும் அப்புறம் நாம் பிச்சைதான் எடுக்கணும்"  என கூடி பேசி பல்வேறு தொல்லைகளை காவல்துறை மூலம் கடைசி வரை கொடுத்தனர்.


பாவம் அவர்களுக்கு தெரியவில்லை எதிர்ப்பு இருந்தால்தான் TNTJ வினர் இன்னும் வீரியமாக செயல்படுவார்கள் என்று. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே இருக்கைகள் நிரம்பின.  மக்ஃரிப் தொழுகை முடிந்தவுடன் லால்பேட்டை மர்கஸ் இமாம் முபாரக் அவர்கள் 10 நிமிடங்கள் உரையாற்றினர்.


அதன் பின் சிறிது நேரம் PJ அவர்கள் உரையாற்றிய பின் கேள்விகள் ஆரம்பமானது. 
  •  விபச்சாரம் பெருகிவிட்டது அதை தடுக்க என்ன வழி?

  • அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் போது நீங்கள் ஏன் ஒற்றுமையை கெடுக்கிறீர்கள்?

  • தப்லீக்காரர்கள் நல்லது தானே செய்கிறார்கள் நீங்கள் என் அவர்களை குறை கூறுகிறீர்கள்? 
  • TNTJ வை எதிர்பவர்கள் கூட சேர்ந்து வியாபாரம் பண்ணக்கூடாது என சொல்கிறீர்களே இது சரியா? .

இதுபோன்ற பல கேள்விகளை ஒவ்வொருவராக PJ விடம் கேட்டனர்   குறிப்பாக லால்பேட்டை சுன்னத் ஜமாஅத்  மதரஸா மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வத்தோடு கேள்விகள் கேட்டனர்.


அனைத்து கேள்விகளுக்கும் மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி பதில் அளித்தார்.  சரியாக இரவு 11 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.


கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே இருக்கைகள் நிரம்பியதால் வேறு வலி இல்லாமல் ஆயிரகணக்கான மக்கள் 4 மணி நேரமும் நின்று கொண்டே PJ அவர்களின் பேச்சை கேட்டனர்.


கூட்டம் முடிந்த பின்னும் நான் கேள்வி கேட்கனும், நான் கேள்வி கேட்கனும் என மதரஸா மாணவர்கள் ஆர்வத்தோடு வந்தனர். அவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட PJ கூட்டம் முடிந்த பின்னும் அவர்களை உட்கார வைத்து மிக தெளிவாக ஏகத்துவத்தை விளக்கினார். மிக பெரிய உண்மைகளை விளங்கியவர்களாக மிகவும் சந்தோசத்துடன் சென்றனர் சுன்னத் ஜமாஅத் மதரஸா மாணவர்கள்.


லால்பேட்டையில்  எந்த பொதுக்கூட்டம் நடந்தாலும் பெண்களை பார்க்க முடியாது. ஆனால் சத்திய மார்கத்தை அறிந்து கொள்ள ஏராளமான லால்பேட்டை பெண்கள் இந்த பொதுக்கூட்டதிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலிருந்தும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வாகனங்களில் ஆர்வத்தோடு வந்திருந்தனர்.

No comments:

Post a Comment