Tuesday, 17 July 2012

கூழ் ஊற்றும் திருவிழா சோடா பாட்டில் அட்டகாசம்


திருவண்ணாமலை 
14-07-2012 அன்று நமது சகோதரர் ஆதில் மற்றும் பாசில் ஆகியோர் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் பிஸ்மில்லாஹ் ஆட்டோ மொபைல்ஸ் என்ற இருசக்கர வாகன உதிரிபாகம் விற்கும் கடை வைத்து நடத்தி வருகின்றனர். அதே தெருவில் வசிக்கும்  சில விஷமிகள் எங்கள் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா நடக்கிறது என்று நமது சகோதரர்கள் வசம் வந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். தர மறுத்ததால்  சோடா பாட்டில்களால் நமது சகோதரர்கள்   இருவரையும் மண்டையில் அடித்து கடையை உடைத்து ஓடி ஒளிந்தனர்.  பின்னர் அங்கு வந்த காவல் துறை, சமரசம் பேசியபோது எதிரில் இருந்த அவர்களின் ஆட்கள் கற்களை கொண்டு வீசி நமது சகோதரர்களை அடித்தனர். பெரும்பாலானோர் தலையில் காயம் ஏற்பட்டது. இவர்களின் அட்டகாசம் இது ஒன்று மட்டும் அல்ல தினம் தினம் நடக்க கூடிய நிகழ்வாக இருக்கிறது. குறிப்பாக இவர்கள் குறிவைப்பது முஸ்லிம்களை மட்டும் தான்.  இவர்கள் செய்யும் அட்டகாசம் காவல் துறைக்கு நன்கு தெரிந்தும் பெரிய அளவில் இவர்கள் கண்டுகொள்ளாமல்  மேல் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த விஷமிகளின் பெரும்பாலானோர்  பணத்திற்காக  எதையும் செய்பவர்கள்.
இந்த சம்பவத்தில் நமது மூன்று சகோதரர்கள் பலத்த காயம் அடைந்தனர். ஒருவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் 

வல்ல ரஹமான் இந்த விஷமிகளிடமிருந்து நம்மை காப்பானாக !  இன்ஷா அல்லாஹ் !

No comments:

Post a Comment