திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக கடந்த 1-7-2012 ஞாயிற்றுகிழமை அன்று மணியாரி தெருவில் ப்ரொஜெக்டர்
பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்காக நம்
சகோதரர்கள் அங்கு சென்று ஏற்பாடு செய்துகொண்டு இருந்தனர் அப்பொழுது அங்கு
வந்த இரண்டு நபர்கள் ( தர்கா வணங்கி மற்றும் குடிகாரர்) முதலில் இங்கு
செய்ய கூடாது என தடுத்தனர் அதன் பின்னர் முஸ்லிம் லீக் அக்பர் என்பவரும்
மற்றும் சில சுன்னத் ஜமாத்தார்கள் வந்து இங்கு செய்ய கூடாது என தடுத்தனர்
(முஸ்லிம் லீக் அக்பர் என்பவர் தான் பள்ளியில் நோட்டீஸ் கொடுத்தால் தூக்கி
வீசுவார் , கிழிப்பார்). ஆனால் நம் சகோதரர்கள் நிகழ்ச்சி அனுமதி வாங்கி
நடத்துகிறோம் ஆகையால் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக உறுதியாக இருந்தனர்
மக்ரிப் நேரம் அடைந்ததும் அங்கேயே பாங்கு சொல்லி தொழுதனர் பின்னர் காவல்
துறையினர் அங்கு வந்தனர் அவர்களை விரட்டாமல் நம்மை நோக்கி வந்தனர்
இன்ஸ்பெக்டர் வந்த உடன் நீங்கள் நிகழ்ச்சியை நடத்துங்கள் என்றனர்.
பிறகு
இன்ஸ்பெக்டர் வந்தார். பிரச்சனையை விசாரித்தார். மகல்லாஹ் வாசிகள் இங்கு
நிகழ்ச்சி நடத்த தடுக்கிறார்கள்.ஆகையால் இங்கு இப்போது நடத்த வேண்டாம்
என்று கூறினார். நம் சகோதரர்கள் இங்கு அனுமதி வாங்கியுள்ளோம் நிகழ்ச்சி
நடத்தாமல் நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம்
என்று கூறினார்கள். அதன் பின் இன்ஸ்பெக்டர் நீங்கள் இனிமேல் நடத்த
இருக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி தர மறுப்போம் என்று கூறினார். ஏன் நடத்த
கூடாது என்ன காரணம் ? என்று கேட்டோம். அதற்கு காரணம் கூற மறுத்தனர்.இப்போது
இங்கே நடத்த வேண்டாம் பிறகு உங்களுக்கு அனுமதி தருகிறோம் என்று
கூறினார். நம் சகோதரர்கள் நடத்தியே தீருவோம் என்று உறுதியாக இருந்தனர்.
பிறகு முஸ்லிம் லீக்,சுன்னத் ஜமா அத் போன்ற பல
இயக்கங்கள் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு எதிராக நிகழ்ச்சி நடத்த விடாமல்
தடுத்தனர். கடைசியாக
நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் என்று காவல் துறையினர் நமது ஜமா அத்
நிர்வாகிகளை மிரட்டுவது போல் பாவலா காட்டினார்கள். இடத்தையும்
மாற்றினார்கள் சுன்னத் ஜமா அத் நிர்வாகிகள் அங்கு நடத்த கூடாது என்று
தடுத்தனர்.
அவர்களுக்கு உள்ளே பிறகு சண்டை மூண்டது.காவல் துறையினர் கடைசியாக அனுமதி கொடுத்த இடத்திலேயே நடத்துமாறு அனுமதி கொடுத்தனர்.
அல்லாஹ் ஒரு வழியாக அவர்களுடைய சூழ்ச்சியை தவிடு பொடியாக்கி விட்டான்.
பின்பு காவல் துறை
அதிரடி படையுடன் ஐம்பதற்கும் மேலான காவலர்களுடன் வந்து 7 மணிக்கு நடத்த
இருந்த நிகழ்ச்சி 9 மணிக்கு ஆரம்பித்து 10௦ மணி வரை இருந்து
நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்றனர்
எல்லா புகழும் அல்லாஹுக்கே
அல்ஹம்து லில்லாஹ்
தலைப்பு : எதிப்பில் வளர்ந்த ஏகத்துவம்
உரை : பக்கிர் முஹம்மது அல்தாபி
No comments:
Post a Comment