விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!
தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலி! அல்ஹம்துலி்ல்லாஹ்!
சற்றுமுன்பு விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்தித்து டிஎன்டிஜே நிர்வாகிகள் இன்று காலை வலியுறுத்தியதன் எதிரொலியாக இந்த அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இன்று மதியம் 1.30 மணியளவில் டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி நேரில் வலியுறுத்தினர்.
இந்த திரைப்படம் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்று வந்த செய்திகளைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்.
இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்தது.
சிலர் இந்த திரைப்படம் வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் கெடும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் சமூக நல்லிணக்கம் கெடும் என்பதைவிட சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதுதான் பிரதான விஷயம் என்பதையும், எவ்வளவுதான் ஜனநாய ரீதியாக போராட்டங்களை நடத்தினாலும் சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைத்தான் அராசங்கம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நமது நிர்வாகிகள் உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடரித்தில் விளக்கினர்.
உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு நன்றி!சிறுபான்மையினரது கோரிக்கையை ஏற்று அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியையும், நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.
உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து TNTJ கொடுத்த கடிதம்: http://www.tntj.net/128361.html
திரைப்படத்தை கண்டித்து சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்:http://www.tntj.net/128369.html
No comments:
Post a Comment