முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதை தடைசெய்யக்கோரி இன்று டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கேவலமான முறையில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுமேயானால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதையும் உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடத்தில் 1மணிநேரத்திற்கும் மேலாக விளக்கி கூறப்பட்டது.
உள்துறைச் செயலாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
No comments:
Post a Comment